உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தியார் சாந்தியடைய (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தியார் சாந்தியடைய
நூலாசிரியர்ப. திருமா வேலன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்தென்திசை பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2007 (முதற்பதிப்பு)
பக்கங்கள்176

காந்தியார் சாந்தியடைய என்ற நூலை ப. திருமா வேலன் எழுதினார். இது இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினையைப் பற்றியது.

உள்ளடக்கம்

[தொகு]

1920 முதல் காந்தியின் மரணம் வரை பிரிவினை சம்பந்தமான நிலைப்பாடு, அது மாறிய விதம், கலவர சமயங்களில் அதனை தடுக்க செய்த முயற்சிகள், மனதளவில் பட்ட வேதனைகளைச் சிறப்பாக விளக்கும் ஒரு நூல். இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்கான காரணங்களைத் தருகிறது இந்நூல்.

கிலாபத் இயக்கம்(1919) இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பெரும் பங்காற்றியிருகிறது. ஆனால் அதனைத் தொடர்ந்த மோதல்கள் சிறிது சிறிதாகப் பெருகியிருக்கிறது. 1930கள் வரை யாருக்கும் பிரிவினை எண்ணம் தோன்றவில்லை. ஜின்னாவின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், மாற்றாக பிரிவினை முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். அதன் பிறகு ஒன்றுபட்ட நிலை ஏற்படவில்லை. எனினும் அபுல் கலாம் ஆசாத் போன்றோர் காங்கிரசில் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். இந்நூல் பிரிவினை காலத்தைப் பற்றிய தொகுப்பாக அமைந்திருக்கிறது.