காடி குத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காடி குத்தா (Gaddi Kutta) என்பது வட இந்தியாவில் காணப்படும் ஒரு மஸ்தீப் வகை மலை நாய் ஆகும். இவை குறிப்பாக மேற்கு இமயமலைப் பகுதிகளில் (இமாச்சலப் பிரதேசம்,[1] உத்தராகண்டம், காஷ்மீர்) போன்ற இடங்களில் காணப்படுகிறது. இவை இந்திய பாந்தர் ஹவுண்ட், மஹிடண்ட் மஸ்தீஃப், என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன. இவை துவக்கத்தில் வேட்டை நாய் நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்டாலும், பல திறமை கொண்ட இந்த நாயினத்தை இடையர் தங்கள் ஆடுகளைப் பாதுகாக்க வளர்த்தனர். பெரும்பாலும் கேடிஸ் (பெரும்பாலும் பழங்குடிகள் ) ஆடுகளைத் தாக்கும் பனிச்சிறுத்தைகளைத் தாக்கி விரட்டுவதற்காகவும், புத்திசாலித்தனமாகத் தாங்கள் சொல்லியபடி ஆடுகளையும் செம்மறிகளையும் தங்கள் பட்டிகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கவும் இவற்றை பயன்படுத்துகின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Splendour of Himalayan Art and Culture" p. 18
  2. "A dog with a military mission". The Hindu (Gurkha Post). March 11, 2003 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 11, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811123449/http://www.hinduonnet.com/2004/03/11/stories/2004031100282200.htm. பார்த்த நாள்: December 4, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடி_குத்தா&oldid=3306270" இலிருந்து மீள்விக்கப்பட்டது