கர்ட் வானெகெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கர்ட் வானெகெட்

2004ல் வானெகெட்
பிறப்பு கர்ட் வானெகெட், இளையவர்
நவம்பர் 11, 1922(1922-11-11)
இண்டியானாபோலிஸ், இண்டியானா, அமெரிக்கா
இறப்பு ஏப்ரல் 11, 2007 (அகவை 84)
நியூ யார்க் நகரம்,
அமெரிக்கா
தொழில் எழுத்தாளர்
நாடு அமெரிக்கர்
எழுதிய காலம் 1949–2005
இலக்கிய வகை அங்கதம்
இருண்ட நகைச்சுவை
அறிபுனை
http://vonnegut.com/

கர்ட் வானெகெட் (Kurt Vonnegut; நவம்பர் 11, 1922 – ஏப்ரல் 11, 2007) 20ம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க எழுத்தாளர். இவரது படைப்புகளில் அங்கதம், இருண்ட நகைச்சுவை, அறிபுனை போன்ற பாணிகள் கலந்து காணப்படுகின்றன. மனித நேய நம்பிக்கை கொண்டிருந்த வானேகெட், அமெரிக்க மனிதநேயர்களின் அமைப்பின் கெளரவத் தலைவராகவும் பணியாற்றினார்.

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் பிறந்த வானேகெட், கார்நெல் பல்கலைக்கழகத்தில் படித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அமெரிக்க தரைப்படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். 1944ல் பல்ஜ் சண்டையின் போது நாசி ஜெர்மனியின் படையினரால் கைது செய்யப்பட்டார். வானேகெட் டிரெஸ்டென் நகரில் போர்க்கைதியாக இருந்த போது நேசநாட்டு வான்படைகள் அந்நகரின் மீது எரிகுண்டுகளை வீசி பெரும் தாக்குதல் நடத்தின. பெப்ரவரி 1945ல் நடந்த இந்த குண்டுவீச்சில், டிரெஸ்டன் நகரின் பெரும்பகுடி அழிந்தது, 25,000 மக்கள் உயிரிழந்தனர். வானெகெட்டும் அவருடை சக கைதிகளும் நிலத்தடியில் அமைந்திருந்த ஒரு இறைச்சி கூடத்தில் (slaughterhouse) அடைக்கப்பட்டிருந்ததால், உயிர் தப்பினர். இந்த குண்டுவீச்சினால் நிகழ்ந்தெ பெரும் உயிர்ச்சேதம் வானெகெட்டை வெகுவாகப் பாதித்தது. அவரது பிற்கால படைப்புகளில் அவரது டிரெஸ்டன் நகர அனுபவங்களின் தாக்கங்கள் காணக்கிடைக்கின்றன.

போர் முடிந்து தாயகம் திரும்பிய வானெகெட், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முதுகலை மாணவராகச் சேர்ந்தார். படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பத்திரிக்கை நிருபராக மாறினார். 1950ல் அவரது முதல் சிறுகதை வெளியானது. 1950களிலும், 60களிலும் மேலும் சில புத்தகங்கள் வெளியாயின. 1965ல் அவரது ஸ்லாட்டர்ஹவுஸ் ஃபை (Slaugterhouse Five) வெளியாகி பெரும் வெற்றி கண்டது. அடுத்த முப்பதாண்டுகளில் பல புதினங்கள், சிறுகதைகள், குறுபுதினங்களை எழுதினார். கேட்ஸ் கிரேடில் (Cat's Cradle), பிரேக்ஃபாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ் (Breakfast of Champions), டெட் ஐ டிக் (Deadeye Dick) ஆகியவை இவரது பிற குறிப்பிடத்தக்க படைப்புகள். பொதுவாக சோஷியல மற்றும் அமைதிவாத நிலைகளைக் கொண்டிருந்த அவர் வியட்நாம் போர், இரண்டாவது வளைகுடா போர் ஆகிய போர்களைக் கடுமையாக எதிர்த்தார். வானெகெட் அமெரிக்க அறிபுனை மற்றும் அங்கத இலக்கிய உலகின் பெரும்புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

தாக்கங்கள்[தொகு]

லூயி-ஃபெர்டினாண்ட் சீலைன், ஜோசப் ஹெல்லர், வில்லியம் மார்ச், மார்க் ட்வைன், ஜார்ஜ் ஆர்வெல், யுஜீன் வி. டெப்ஸ், பவர்ஸ் ஹாப்குட், ஜார்ஜ் பெர்னாட் ஷா, ஜேம்ஸ் தர்பர், ஜேம்ஸ் ஜாய்ஸ்

பின்பற்றுவோர்[தொகு]

டக்ளஸ் ஆடம்ஸ்,[1] பில் பிரைசன், பவுல் ஆஸ்டர், மிட்ச் பெர்மன், டி. கொரகெஸ்சான் பாய்லே, ஹோனென் வாஸ்குவேஸ், லூயி சாச்சார், ஜர்ஜ் சாண்டர்ஸ், ஹரூகி முரகாமி, கார்ல்டன் மெல்லிக், குலா ஷேக்கர், கிரிஸ் பாச்செல்டெர், ஜேம்ஸ் ரிவேரா, ஜான் இரிவிங், ஆகா மோர்கிலாட்சே

மேற்கோள்கள்[தொகு]

  1. "Douglas Adams Dark Matter Interview". Darkermatter.com. பார்த்த நாள் 2010-03-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கர்ட்_வானெகெட்&oldid=1742438" இருந்து மீள்விக்கப்பட்டது