கரோலினியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரோலினியம் மற்றும் பெர்சிலியம் (Carolinium and berzelium) ஆகியவை புதிய வேதியியல் தனிமங்களுக்காக முன்மொழியப்பட்ட பெயர்களாகும். ஏற்கனவே அறியப்பட்ட தனிமமான தோரியத்திலிருந்து இவை தனிமைப்படுத்தப்பட்டதாக சார்லசு பாசுகர்வில்லே நம்பினார்.

வட கரோலினா பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றிய காலத்தில், பாசுகர்வில்லே தோரியத்துடன் பரிசோதனை செய்து 1901 ஆம் ஆண்டு தனது முடிவுகளை வெளியிட்டார். சற்றே மாறுபட்ட வேதியியல் பண்புகளுடன் தோரியத்தை மூன்று பின்னங்களாக பிரித்ததாக இவர் அறிவித்தார். தோரியம், கரோலினியம் (Cn) மற்றும் பெர்சிலியம் (Bz) என அவற்றை அடையாளப்படுத்தினார். [1]

இரண்டு ஆதார மூலங்களிலிருந்து இப்பெயர்கள் பெறப்பட்டன.

சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் கரோலினா மாநிலத்தின் பெயர் முதல் தனிமத்திற்கு சூட்டப்பட்டது. இன்னொரு தனிமத்திற்கு புகழ்பெற்ற சுவீடிய வேதியியலாளரும் சிலிக்கான், செலீனியம், சீரியம் மற்றும் தோரியம் தனிமங்களை கண்டுபிடித்தவருமான யான்சு யாகோப் பெர்செலியசின் பெயர் சூட்டப்பட்டது. [2]

இவ்வெளியீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக தோரியம் பல தனிமங்களின் கலவையாக இருக்க வேண்டும் என்ற உண்மையை தான் ஏற்கனவே கூறியதாக பொகூசுலாவ் பிரவுனர் உரிமை கோரினார். [3]

1905 ஆம் ஆண்டில், ஆர். யே. மேயர் மற்றும் ஏ. கம்பெர்சு ஆகியோர் இம் முடிவுகளை மீண்டும் பெற முயற்சித்து தவறினர். இந்நிகழ்வு தோரியம் என்பது ஒரு தனிமம் மட்டுமே அது ஒரு சேர்மமல்ல என்ற முடிவை காட்டியது. [4]

எச். கி. வெல்சின் 1914 ஆம் ஆண்டு நாவலான தி வேர்ல்ட் செட் ஃப்ரீ என்ற நாவலில் காலவரையின்றி தொடர்ந்து வெடிக்கும் கரோலினியம் என்று பெயரிடப்பட்ட ஓர் அணுகுண்டு இடம்பெற்றுள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Baskerville, Charles (1901). "On the Existence of a new Element associated with Thorium". Journal of the American Chemical Society 23 (10): 761–764. doi:10.1021/ja02036a004. https://zenodo.org/record/1428906. 
  2. Baskerville, Charles (1904). "Carolinium, Berzelium, Thorium". Journal of the American Chemical Society 26 (8): 922. doi:10.1021/ja01998a003. https://zenodo.org/record/1428890. 
  3. Brauner, Bohuslav; Baskerville, Charles (June 1904). "The Complex Nature of Thorium". Science 19 (493): 892–893. doi:10.1126/science.19.493.892. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17770214. Bibcode: 1904Sci....19..892B. https://zenodo.org/record/1447916. 
  4. Meyer, Richard Joseph; Gumperz, A. (1905). "Zur Frage der Einheitlichkeit des Thoriums". Berichte der Deutschen Chemischen Gesellschaft 38: 817–825. doi:10.1002/cber.190503801140. https://zenodo.org/record/1426128. 
  5. Wells, H. G. (1914). "2". The World Set Free. [T]he new bombs that would continue to explode indefinitely...
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலினியம்&oldid=3059293" இலிருந்து மீள்விக்கப்பட்டது