கரு இழப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரு இழப்பு (Embryo loss)(கரு மரணம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கருவின் வளர்ச்சியின் எந்த நிலையிலும் நிகழும் கருவின் மரணத்தினைக் குறிப்பாகும். இது மனிதர்களில், கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் எட்டாவது வாரத்திற்கு இடையில் நிகழ்வதாகும்.[1] கரு ஒன்றின் வளர்ச்சியில் ஏற்படும் தோல்வியானது பெரும்பாலும் கருப்பையில் அதன் திசுக்களின் சிதைவு மற்றும் ஒருங்கிணைப்பால் நிகழ்கிறது. கருவின் ஆரம்பக் கால வளர்ச்சியில் ஏற்படும் இழப்பினால் கருவானது கருசூழ் திசுக்களால் உறிஞ்சப்படும்.[2] கர்ப்பத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் கரு இழப்பு பெரும்பாலும் நிகழ்கிறது. பொதுவாகக் கருக்களில் 40 முதல் 60% வரை உயிர்வாழ்வதில்லை.[3]

மகப்பேறு மருந்தகங்கள்[தொகு]

மகப்பேறு மருந்தகங்களில் ஆய்வுக்கூட கருத்தரிப்பில், கரு இழப்பு அதிக எண்ணிக்கையில் பொருத்தப்பட்ட கருக்களுடன் தொடர்புடையதாக உள்ளது.[4] கருக்களை ஆய்வகங்கள் பாதுகாத்து வைத்திருப்பதில் ஏற்படும் தொழில்நுட்ப செயலிழப்புகளால் கரு இழப்பு அபாயம் அதிகமாக உள்ளது.[5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Embryo Loss - MeSH - NCBI". www.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 26 June 2020.
  2. "Fetal Resorption - MeSH - NCBI". www.ncbi.nlm.nih.gov.
  3. Jarvis, GE (2016). "Early embryo mortality in natural human reproduction: What the data say.". F1000Research 5: 2765. doi:10.12688/f1000research.8937.2. பப்மெட்:28580126. 
  4. Kovalevsky, George; Patrizio, Pasquale (1 September 2002). "Embryo loss in assisted reproductive technologies (ART)" (in English). Fertility and Sterility 78: S256. doi:10.1016/S0015-0282(02)04088-8. 
  5. Kaye, Randi; Nedelman, Michael (May 12, 2018). "'Our future children': Families speak after loss of frozen embryos in tank failure". CNN. பார்க்கப்பட்ட நாள் 2020-06-26.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரு_இழப்பு&oldid=3451172" இலிருந்து மீள்விக்கப்பட்டது