கருவுட்பருனி
(1) கருவுட்பருனி (nucleolus)
(2) உயிரணுக்கரு (nucleus)
(3) ரைபோசோம் (Ribosomes) (சிறுபுள்ளிகள்)
(4) vesicle
(5) rough endoplasmic reticulum (ER)
(6) கோல்கி அமைப்பு (Golgi apparatus)
(7) Cytoskeleton
(8) smooth endoplasmic reticulum (ER)
(9) இழைமணி (மைட்டோக்கோன்றியா, mitochondria)
(10) vacuole
(11) cytoplasm
(12) lysosome
(13) centrioles within centrosome
கருவுட்பருனி அல்லது நியூக்கிளியோலசு (nucleolus, இது நியூக்கிளியோல் nucleole என்றும் அழைக்கப்படுகின்றது), என்பது உயிரணுவின் கருவுக்கும் உள்ளே மூடும் சவ்வு உறை ஏதும் இல்லாத பருத்த ஒரு அமைப்பு. இதனுள் புரதங்களும், கருக்காடிகளும் உள்ளன. கருவுட்பருனியைச் சுருக்கமாக கருப்பருனி என்றும் அழைக்கப்படும். ரைபோசோமிய ஆர்.என்.ஏ இந்த கருவுட்பருனியினுள் பெயர்த்து உருவாக்கப்படுகின்றது. அதே போல ரைபோசோமிய உட்கூறுகளும் இங்கு உருவாக்கப்படுகின்றன. கருவுட்பருனியை எதிர்மின்னி நுண்ணோக்கிகள் வழி காண இயலும். கருப்பருனியின் இயக்கத்தை அறிய தூண்டொளிரி ஒட்டிய புரதங்களின் வழி (fluorescent protein tagging) அறியலாம். இந்த கருப்பருனி பிறழ்ந்து இயங்க நேரிட்டால் பல நோய்கள் உண்டாகலாம்.
கருப்பருனியில்தான் ரைபோசோமிய ஆர். என்.ஏ உருவாவதற்குத் தேவையான மரபணுக்கூறுகளைத் தாங்கியிருக்கும் நிறப்புரிகளின் பல்வேறு உட்கூறுகள் (பகுதிகள்) ஒன்று சேர்கின்றன. கருப்பருனியில், உயிரணுக்களின் புரத விளைவிப்பாலை எனக் கூறப்படும் ரைபோசோம் உருவாவதற்குத் தேவையான ரைபோசோமிய ஆர்.என்.ஏ-க்களும், புரதங்களும் உருவாகின்றன[1]. இதனை உயிரணுவின் கருவின் கரு எனலாம்.
[தொகு] அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ Alberts et.al., Essential Cell Biology, 3rd Ed. Garland Science, 2010, page 184