கத்தரித்தல் (தாவரவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாவரங்களின் அங்குரத்தொகுதியில் அல்லது வேர்த்தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை நீக்குதல் கத்தரித்தல்(Pruning) எனப்படும்.

பொருளடக்கம்

[தொகு] கத்தரித்தலின் நோக்கங்கள்

  • உற்பத்தியின் அளவை அதிகரித்தல்
  • உற்பத்தியின் தரத்தைக்கூட்டுதல்
  • பூஞ்செடிகளின் வடிவமைப்புகளை சீர் செய்தல்
  • இறந்த நோயுற்ற கிளைகளை அகற்றுதல்

[தொகு] கத்தரித்தலின் வகைகள்

  1. தலையகற்றல்
  2. ஐதாக்கல்
  3. பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல்
கத்தரித்தலின் பின் தாவரம்

தலையகற்றல்- தாவரத்தின் உச்சிப்பகுதி நீக்கப்படுவதன் மூலம் உச்சியாட்சி அழிக்கப்பட்டு கக்கவரும்புகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.இதன் மூலம் உயரத் குறைந்த அடர்த்தி கூடிய தாவரங்கள் பெறப்படுகின்றது. இதனால் தாவரங்களின் பராமரிப்புச் சுலபமாக்கப்படுவதுடன் கூடிய விளைச்சலையும் பெற முடிகிறது.மா, தோடை, தேயிலை, பூஞ்செடிகளில் இச்செயற்பாடு பொதுவாக கைக் கொள்ளப்படும்.

ஐதாக்கல்- கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள் என்பவற்றின் செறிவு குறைக்கப்படுதல் ஐதாக்கல் ஆகும்.

  • கிளைகள் இலைகள் என்பன குறைக்கப்படுவதன் நோக்கம்:- வினைத்திறனற்ற இலைகளும் கிளைகளும் அகற்றப்படுவதனால் எல்லாப்பகுதிகளுக்கும் ஒளி ஊடுருவும், மரத்தின் கிளைச் சுமை குறைக்கப்படுவதானால் முறிந்து விழும் அபாயம் குறையும், நிமிர்ந்த தாவரங்களைப் பெறலாம், பதிய வளர்ச்சி குறைவதனால் காய்த்தல், பூத்தல் தூண்டப்படும்.
  • பூக்கள் காய்கள் குறைக்கப்படுவதன் நோக்கம்:- காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதன் பருமன் குறையும். இதனால் சந்தை வாய்ப்பு குறையும். எனவே காய்கள், பூக்கள் குறைக்கப்பட்டு பருமன் அதிகரிக்கப்படுகிறது.

[தொகு] கத்தரித்தலுக்குள்ளாகும் தாவரங்களும் பகுதிகளும்

  1. தண்டு - பூஞ்செடி, எலுமிச்சை, தோடை
  2. வேரகற்றல் - தோடை,மா, கொய்யா
  3. இலையகற்றல் - மிளகு,பூஞ்செடி
  4. பூவகற்றல் - ஓக்கிட், அந்தூரியம், திராட்சை
  5. தந்தகற்றல் - கொடித்தோடை, திராட்சை
  6. காய் கத்தரித்தல் - பப்பாசி, திராட்சை

[தொகு] கத்தரித்தலின் நன்மைகள்

  • தாவரத்தின் சகல பகுதிகளுக்கும் சீரான ஒளி, போசணை கிடைப்பதால் உணவுத் தேக்கம் ஏற்பட்டு கனிகட்டல் தூண்டப்படும்.
  • பூச்சிப் பீடைக்கட்டுப்பாடு இலகுவாக்கப்படும்.
  • இறந்த நோயுற்ற, பலவீனமான கிளைகளை அகற்றலாம்.
  • வேண்டிய உயரம் மற்றும் அமைப்பில் தாவரத்தைப் பேணலாம்.
  • விளைச்சலைக் கூட்டுவதுடன் விளைவின் தரத்தையும் பேணலாம்.

[தொகு] கத்தரித்தல் உபகரணங்கள்

படிமம்:Pruning Tools M D Vaden.jpg
கத்தரித்தலில் பயன்படுத்தும் உபகரணங்கள்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்