உச்சியாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தண்டு நுனியில் காணப்படும் உச்சியாட்சி காரணமாக கிளைகளற்று நீண்டு வளரும் நெட்டிலிங்க மரம்(நெட்டசோக மரம்)

தாவரங்களின் வேர்,தண்டு என்பவற்றின் உச்சிப்பகுதிகளில் செயற்படும் ஓமோன்களின் செயற்பாடுகள் காரணமாக கக்கவளர்ச்சி பாதிக்கப்படுதல் உச்சியாட்சி எனப்படும்.தாவர உச்சிப் பகுதியில் சுரக்கப்படும் ஒட்சின் எனப்படும் வளர்ச்சி ஓமோனே இவ் உச்சியாட்சிச் செயற்பாட்டுக்கு காரணமாகும்.தாவரங்கள் உயரத்தில் நீண்டு வளர்ந்து ஒளியை இலகுவில் பெற்றுக் கொள்ள உச்சியாட்சி துணைபுரிகிறது.


குறைந்த உச்சியாட்சியைக் கொண்டிருப்பதால் துவழும் கிளைகளைக் கொண்டிருக்கும் Atlas Cedar மரம்.

உச்சிப்பகுதியில் சுரக்கப்படும் ஒட்சின்கள் தண்டு நுனிப்பகுதியில் கலப்பிரிவைத் தூண்டி வளர்ச்சியை துரிதப்படுத்துவது மட்டுமன்றி அது கீழே பரவி கக்க அரும்புகளின் வளர்ச்சியை தடை செய்யவும் எதுவாகிறது. இதனால் கிளை உருவாக்கம் தடைப்படும். இதனால் முனை அரும்புகளை நீக்குவது கிளைகொள்ளலைக் கூட்டும்.


[தொகு] மேலும் படிக்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=உச்சியாட்சி&oldid=1096564" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்