ஏ. மு. பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதிபதி
ஏ. மு. பாபு
A. M. Babu
நிதிபதி, கேரள உயர் நீதிமன்றம்
பதவியில்
05 அக்டோபர் 2016 – 26 அக்டோபர் 2019
பரிந்துரைப்புடி.எசு. தாக்கூர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 அக்டோபர் 1957 (1957-10-26) (அகவை 66)
கஞ்சிரப்பள்ளி, கோட்டயம்
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
முன்னாள் கல்லூரிபுனித பெர்ச்சிமான்சு கல்லூரி
இணையத்தளம்கேரள உயர்நீதி மன்றம்

ஏட்டுப்பாங்கு முகமதுகான் பாபு (Aettupanku Mohammedkhan Babu) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாவார். 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்நீதிமன்றம் கேரள மாநிலம் மற்றும் இலட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சியில் அமைந்துள்ளது. [1] [2] [3] [4] [5] [6] [7]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பாபு 1957 ஆம் ஆண்டு கேரளாவின் கோட்டயத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் பிறந்தார். கீழில்லம் புனித தாமசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். சங்கனாச்சேரியில் உள்ள புனித பெர்சிமன்சு கல்லூரியில் பட்டம் பெற்றார். உடுப்பி சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். [1]

தொழில்[தொகு]

பாபு 1981 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1989 ஆம் ஆண்டு கேரள நீதித்துறையில் முன்சிப் பதவியில் சேர்ந்த இவர் 1992 ஆம் ஆண்டு துணை நீதிபதியாகவும், 2002 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 2010 ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள கேரள நீதித்துறை அகாடமியின் கூடுதல் இயக்குனராகவும், 12.04.2012 அன்று இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியன்று இவர் கேரள உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதி முதல் நிரந்தர நீதிபதியானார். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் நாள் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Official Website of Kerala High Court". பார்க்கப்பட்ட நாள் 2020-04-04 – via High Court of Kerala.
  2. "Appointment order" (PDF). 2018-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04 – via Department of justice - Government of India.
  3. "Appointment of 5 Permanent Judges, Kerala High Court". 2018-03-20. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04 – via SCC Online.
  4. "SC collegium recommends new judges for high courts". 2018-02-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04 – via Tribune India.
  5. "Supreme Court Collegium Recommends New Judges For High Courts". 2018-02-24. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04 – via NDTV.
  6. "Nine additional judges from Allahabad, Kerala HCs to be made permanent". 2018-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04 – via Bar & Bench.
  7. "SC Collegium recommends new judges for HCs". 2018-02-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04 – via Business Standard.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._மு._பாபு&oldid=3377651" இலிருந்து மீள்விக்கப்பட்டது