எல் நீனோ-தெற்கத்திய அலைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Average circulation in the south Pacific Ocean

எல் நீனோ-தெற்கத்திய அலைவு (El Niño-Southern Oscillation) ஒரு இணைப் பெருங்கடல் வளிமண்டலத் தோற்றப்பாடு ஆகும். எல் நினோ, லா நினா எனப்படும் இவை கிழக்குப் பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் இடம்பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள். எல் நினோ என்பது எஸ்பானிய மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது. இப்பெயர் பாலன் யேசுவைக் குறிப்பது. இத் தோற்றப்பாடு தென்னமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் நத்தார் காலங்களில் ஏற்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. லா நினா என்னும் சொல் சிறிய பெண்பிள்ளை என்னும் பொருளுடையது. 1923 ஆம் ஆண்டில் சர். கில்பர்ட் தாமஸ் வாக்கர் என்பவர் இவற்றை முதன் முதலாக விளக்கினார்.

எல் நீனோ-தெற்கத்திய அலைவு, உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும் வெள்ளம், வரட்சி போன்ற பல இடையூறுகளுடன் தொடர்புள்ளது. இத் தாக்கங்களும், இதன் ஒழுங்கற்ற தன்மையும் இவற்றை எதிர்வு கூறுவது தொடர்பில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீபன் செபியாக், மார்க் கேன் போன்றோர் இதனைஎதிர்வு கூறுவது தொடர்பில் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்