எலன்னும்மெல் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலன்னும்மெல் சிவன் கோயில்

எலன்னும்மெல் சிவன் கோயில் (Elannummel Shiva temple) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தின் செலம்பிராவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். இந்த கோயில் தோன்றி சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலானது என்று கருதப்படுகிறது. மேலும் இது பரசுராமரால் புனிதப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு முதன்மை தெய்வமாக சிவன் இருக்கிறார். மேலும், இக்கோவிலில் விஷ்ணுவிற்கென ஒரு சிறிய கோயிலும் உள்ளது. அதிலுள்ள தெய்வம் "சந்தானகோபாலன்" என்று குறிப்பிடப்படுகிறது. [1]

வரலாறு[தொகு]

கேரளாவில் சனாதன தர்மத்தை மேம்படுத்துவதற்காக பரசுராமர் நிறுவிய பல கோயில்களில் இதுவும் ஒன்றென்பது ஒரு புராணக்கதை. இந்த கோயிலுக்கு முன்னர் செலம்பிராவின் பல "மனை"களின் ஆதரவு இருந்தது. இந்த கோயில் திப்பு சுல்தானால் தாக்கப்பட்டதும், கோயிலுடன் இணைக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது.

புதுப்பித்தல்[தொகு]

1990களில் புதுப்பிக்கப்பட்டதிலிருந்து கோயில், அதன் குளம் மற்றும் கோயிலுக்கு செல்லும் பாதை ஆகியவற்றை மீட்டெடுத்தது. கோயிலைச் சுற்றியுள்ள நாலம்பலம் முற்றிலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.