எருக்கலக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருக்கலக்கோட்டை
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு614 624
மக்களவைத் தொகுதிசிவகங்கை மக்களவைத் தொகுதி
மாநில சட்டமன்றத் தொகுதிஆலங்குடி

எருக்கலக்கோட்டை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் ராஜேந்திரபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இவ்வூரின் எல்லையில் அய்யனார் கோவில் மற்றும் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இக்கிராமத்தில் நடுவில் அரசடி நாகம்மாள், மற்றும் விநாயகர் கோவில்களும் அமைந்துள்ளது. இவ்வூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

எருக்கலக்கோட்டையானது ஆலங்குடி சட்டமன்றதொகுதியிலும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியிலும் அமைந்துள்ளது. எருக்கலக்கோட்டை அஞ்சல் குறியீட்டு எண் 614 624. இக்கிராமமானது அறந்தாங்கியில் இருந்து 7 கி.மீ., பட்டுக்கோட்டையில் இருந்து 41 கி.மீ., புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ., ஆலங்குடியில் இருந்து 25 கி.மீ. மற்றும் கீரமங்கலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் அதிகமாக அம்பலக்காரர் (முத்தரையர்)களும், அதற்கு அடுத்தபடியாக செட்டியார் சமுதாயத்தினரும் வாழ்ந்து வருகின்றனர்.[சான்று தேவை]

பள்ளிகள்[தொகு]

  1. அரசு உயர்நிலைப்பள்ளி
  2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

தெருக்கள்[தொகு]

  1. எருக்கலக்கோட்டை அம்பலக்காரர் குடியிருப்பு
  2. பூசாரிக்குடியிருப்பு
  3. வடக்கிக்காடு
  4. எருக்கலக்கோட்டை செட்டித்தெரு

அரசு அலுவலகம்[தொகு]

  • கிராம நிர்வாக அலுவலகம்
  • அஞ்சல் அலுவலகம்
  • அங்கன்வாடி

கோவில்கள்[தொகு]

  1. ஸ்ரீ அய்யனார் கோவில்
  2. ஸ்ரீ முனிக்கோவில்
  3. ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்
  4. ஸ்ரீ அரசடி நாகாம்மாள் கோவில்
  5. ஸ்ரீ மன்மதசுவாமி கோவில்
  6. ஸ்ரீ முருகன் கோவில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருக்கலக்கோட்டை&oldid=3603467" இலிருந்து மீள்விக்கப்பட்டது