எம். சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. சுந்தரம் (M. Sundaram) இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக இரிசிவந்தியம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீண்டும் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். இவரின் அண்ணன் மகன் எஸ். சிவராஜ் நான்கு முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.[3][4] பெருநிலக்கிழாரான இவர் திருக்கோவிலூரின் நகர்மன்ற தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "களம் காணும் வேட்பாளர்கள்". தினமணி. 2012. https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/24/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-329977.html. 
  4. "தேமுதிக வை தேற்க்கடிக்க சிவராஜ் அதிரடி". தினமலர். 2014. https://m.dinamalar.com/detail.php?id=930486. 
  5. Tamilnadu Legesturature Who's who (PDF) (in English). இந்தியத் தேர்தல் ஆணையம். 1977. p. 438.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சுந்தரம்&oldid=3943166" இலிருந்து மீள்விக்கப்பட்டது