ஊலூரூ
| ஊலூரூ Uluru (Uluṟu) |
|
| ஏயர்ஸ் குன்று | |
|
ஊலூரூ மலை
|
|
| நாடு | |
|---|---|
| மாநிலம் | வடக்கு ஆஸ்திரேலியா |
| உயரம் | 863 மீ (2,831 அடி) |
| Prominence | 348 மீ (1,142 அடி) |
| ஆள்கூறு | |
| Geology | களிம நுண்பொடி பாறை |
| Orogeny | பீட்டர்மான் |
| யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| Name | Uluṟu – Kata Tjuṯa National Park |
| Year | 1987 (#11) |
| Number | 447 |
| Criteria | v,vi,vii,ix |
| விக்கிமீடியா பொது: Uluru | |
| Website: www.environment.gov.au/... | |
பச்சோந்திக் குன்று என்பது வடக்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள ஏயர்சு பாறை (Ayers rock) அல்லது ஊலூரூ (Uluru) என்னும் குன்று ஆகும். இது உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று இது. மத்திய ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஏயர்சு குன்று உலகிலேயே மிகப் பெரிய பாறையாகும். இது 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது. முழுவதும் மணற்பாறைகள் மற்றும் சிறு சிறு கற்களால் உருவான பாறைகளால் ஆனது. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான சித்திரங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன.
பச்சோந்திக் குன்று 1873-ல் டபிள்யு. ஜி. கோஸி என்ற ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஹென்றி ஏயர்சு என்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்ததால் அவர் பெயரால் இந்தக் குன்று 'ஏயர்ஸ் பாறை' என அழைக்கப்பட்டது. உண்மையில் இந்தப் பாறை சிவப்பு நிறம் கொண்டதாகும். சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் இதன் நிறம் மாறுகிறது. சூரியன் உதிக்கும்போது அதன் கிரணங்கள் இதில் பட்டு ஊதா மற்றும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் தக தக என எரிவது போல் தோற்றமளிக்கும். இதேபோல், சூரியன் மறையும் போது ஊதா நிறம் இதில் படிந்திருப்பதைப் பார்க்கலாம். காலையிலிருந்து மாலை வரை சூரியனின் வெப்பநிலை மாற மாற இதன் நிறங்களும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என மாறிக் கொண்டே இருக்கும்.
இந்தப் பாறைக்கு அருகில் மவுன்ட் ஓல்கா தேசியப் பூங்காவை ஆஸ்திரேலிய அரசு அமைத்துள்ளது. இந்தப் பாறையையும், பூங்காவில் உள்ள கங்காரு, பன்டிகூட்ஸ் போன்ற பல அரிய விலங்குகளையும் காண உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலமுமாகும்.
உசாத்துணை [தொகு]
நாளை நமதே. 'சென்னை நம்ம சென்னை' இதழின் பங்களிப்பு . மாணவர் வழிகாட்டி இலவச மாத இதழ். கிழக்குப் பதிப்பகம்.