உரோசு செல்ஜாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோசு செல்ஜாக்
Uroš Seljak
உரோசு செல்ஜாக், 2011
பிறப்பு13 மே 1966 (1966-05-13) (அகவை 57)
குடியுரிமைசுலோவேனியர், ஐக்கிய அமெரிக்கர்
துறை
  • அண்டவிய்ல்
  • கோட்பாட்டு, நோக்கீட்டு வானியற்பியல்
  • வானியற்பியலில் புள்ளியியல் பகுப்பாய்வு
  • பேயசியப் புள்ளியியல்சார் முறையியல்
  • எந்திரக் கற்றல்
கல்வி கற்ற இடங்கள்
இலுபிலியானா பல்க்லைக்கழகம், சுலோவேணியா (1989, 1991)
ஆய்வு நெறியாளர்எடுமண்டு பெர்த்சுசிங்கர்
அறியப்படுவதுஈ பி-முறைமைகள், CMBவிரைவு
விருதுகள்


உரோசு செல்ஜாக் (Uroş Seljak) (பிறப்புஃ 13 மே 1966) ஒரு சுலோவேனிய அண்டவியலாளரும் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வானியல், இயற்பியல் பேராசிரியரும் ஆவார்.[1] அவர் குறிப்பாக அண்டவியல், தோராய பேய்சியன் புள்ளியியல் முறைகள் குறித்த தனது ஆராய்ச்சிக்காக நன்கு அறியப்பட்டவர்.

வாழ்க்கை[தொகு]

செல்ஜாக் தனது இடைநிலைக் கல்வியை நோவா கொரிக்கா இலக்கணப் பள்ளியில் முடித்தார் , மேலும் சுலோவேனியா லுப்லஜானா பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை படிப்பை மேற்கொண்டார். 1989 இல் பட்டம் பெற்ற அவர் , பின்னர் 1991 இல் அதே நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். செல்ஜாக் மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் தனது முனைவர் ஆராய்ச்சியை நடத்தி, 1995 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆர்வர்டு, சுமித்சோனிய வானியல் மையத்தில் முதுகலை படிப்புக்குப் பிறகு , 2008 ஆம் ஆண்டில் யு. சி. பெர்க்லி இயற்பியல், வானியல் துறைகளில் சேருவதற்கு முன்பு பிரின்சுட்டன் பல்கலைக்கழகம் , இத்தாலியில் உள்ள பன்னாட்டுக் கோட்பாட்டு இயற்பியல் மையம், சூரிச் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரிய பதவிகளை வகித்தார். இலாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகத்தில் கூட்டுப் பணியைப் பெற்றுள்ளார்.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

செல்ஜாக் ஒரு அண்டவியலாளர் ஆவார் , அவர் குறிப்பாக அண்ட நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சு பால்வெளி, மென் ஈர்ப்பு வில்லை பற்றிய ஆராய்ச்சிக்காகவும் , அண்டப் பேரியல் கட்டமைப்பிற்கான நோக்கீடுகளின் தாக்கங்களுக்காகவும் நன்கு அறியப்பட்டவர்.[2][3][4][5]

1997 ஆம் ஆண்டில் செல்ஜாக் சி. எம். பி துருவமுனைமையில் பி - முறைமைகள் இருப்பதை முன்கணித்தார் , அவை உப்புதலிலிருந்த தொடக்க ஈர்ப்பு அலைகளின் சுவடு ஆகும்.[6] இவர் மத்தியாசு சால்தாரிகா மையத்துடன் இணைந்து, CMB வெப்ப நிலை, ஈ, பி- முறைமைகளுக்கான துருவமுனைமைக்கான CMBFAST குறிமுறையை உருவாக்கியுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் அவர் இருண்ட பொருள், பால்வெளி புள்ளிவிவரங்களுக்கான புறஒளிவட்டப் படிமத்தை மாதிரியை உருவாக்கினார்.[7][8][9]

செல்ஜாக்கின் அண்மைய படைப்புகளில் பெரும்பாலானவை, பகுப்பாய்வு முறைகளையும் எண் உருவகப்படுத்துதல்களையும் பயன்படுத்தி அண்டவியல் நோக்கீடுகளிலிருந்து நமது அண்டத்தின் அடிப்படை பண்புகளை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றன. அவர் இருண்ட பொருள், விண்மீன்கள், அண்ட வளிமப் பரவல்களின் அண்டவியல் ஆக்கப் படிமங்களை உருவாக்கியுள்ளார், இவற்றில் வகைநுண்ணியல் விரைவுப்PM குறிமுறையு.ம் அதன் நீட்டிப்புகளும் அடங்கும்.

செல்ஜாக் முடுக்கிய தோராயமான பேயசிய முறைகளுக்கான வழிமுறைகளை முனைவாக உருவாக்கி அவற்றை அண்டவியல், வானியல், பிற அறிவியல்களுக்கு பயன்படுத்துகிறார். இந்த பணிக்கான எடுத்துக்காட்டுகள் , வாய்ப்பியல்பு வேறுபாடுள்ள பேயசிய உய்த்துணர்தலுக்கான எல்2 எஃப் விரிவு, பேய்சியன் சான்றுக்கான காசியப்படுத்திய பாலப் படிமம், ஹாமில்டோனியன் மான்டே கார்லோ பதக்கூறை அடிப்படையாகக் கொண்ட பேயசுவிரைவுப் படிமம் ஆகியவற்றின் எதிர்பார்ப்பு உகப்பாக்கம் ஆகும்.

செல்ஜாக் அண்டவியல், வானியல், பிற அறிவியல்களுக்கான பயன்பாடுகளுடன் இயந்திர கற்றல் முறைகளை உருவாக்கி வருகிறார். குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளில் நேரத்தை பகுப்பாய்வு செய்வதற்கான போரியர் அடிப்படை காஸியன் செயல்முறைகள், வெளிப்படையான இயற்பியல் சமச்சீர் கொண்ட வெளிசார்ந்த தரவு, நேரியக்கவகை, சுழற்சி இயக்கவகை ஆக்கப் படிமங்கள், அடர்த்தி மதிப்பீடு, பதக்கூறுகளுக்கான துண்டநிலை பன்னிச் செயல் போக்குவரத்து முறைகள் ஆகியன அடங்கும்.

தகைமைகளும் விருதுகளும் ,[தொகு]

" அண்டப் பேரியல் கட்டமைப்பு, அதன் தொடக்க காலப் பண்புகள் பற்றிய ஆய்வுக்கு ஏராளமான நுட்பங்களை அறிமுகப்படுத்திய " மார்க் கமியோன்கோவ்சுகி மற்றும் மத்தியாசு சால்தாரியாகா ஆகியோருடன் இணைந்து 2021 அண்டவியலுக்கான குரூபர் பரிசு செல்ஜாக்கிற்கு வழங்கப்பட்டது.[10]

  • டேவிடு, உலூசில் பேக்கார்டு ஆய்வுறுப்பினர் (2000)
  • சுலோவான் ஆய்வுறுப்பினர் (2001)
  • வானியலுக்கான எலன் பி. வார்னர் பரிசு (2001)[1][11]
  • அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினர் (2013)
  • அமெரிக்க தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் (2019)
  • மிக உயர்ந்த மேற்கோள் காட்டப்பட்ட சுலோவேனிய அறிவிய்லாளர் (2019)
  • விக்கி அறிவியல் போட்டி பன்னாட்டு வெற்றியாளர் (2019 - 2020)[12][13]
  • அண்டவியலில் குரூபர் பரிசு (2021)

குறிப்பிடத்தக்க மாணவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Faculty profile, UC Berkeley physics department, retrieved 27 March 2011.
  2. Seljak, Uroš; Zaldarriaga, Matias (1996). "A Line-of-Sight Integration Approach to Cosmic Microwave Background Anisotropies". The Astrophysical Journal 469: 437–444. doi:10.1086/177793. Bibcode: 1996ApJ...469..437S. 
  3. Sincell, Mark (30 March 1999). "A New Lens on Dark Matter". Physical Review Focus. Vol. 3..
  4. "Galaxy Study Validates General Relativity on Cosmic Scale, Existence of Dark Matter", Science Daily, 10 March 2010.
  5. Becker, Markus (20 April 2005), "Raumzeit-Wellen provozieren Forscher", Spiegel (in German){{citation}}: CS1 maint: unrecognized language (link).
  6. Seljak, Uroš (10 June 1997). "Measuring Polarization in the Cosmic Microwave Background" (in en). The Astrophysical Journal 482 (1): 6–16. doi:10.1086/304123. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 1997ApJ...482....6S. https://archive.org/details/sim_astrophysical-journal_1997-06-10_482_1/page/6. 
  7. Seljak, Uroš; Makarov, Alexey; McDonald, Patrick; Trac, Hy (8 November 2006). "Can Sterile Neutrinos Be the Dark Matter?" (in en). Physical Review Letters 97 (19): 191303. doi:10.1103/PhysRevLett.97.191303. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9007. பப்மெட்:17155611. Bibcode: 2006PhRvL..97s1303S. 
  8. Seljak, Uroš; Makarov, Alexey; McDonald, Patrick; Anderson, Scott F.; Bahcall, Neta A.; Brinkmann, J.; Burles, Scott; Cen, Renyue et al. (20 May 2005). "Cosmological parameter analysis including SDSS Ly α forest and galaxy bias: Constraints on the primordial spectrum of fluctuations, neutrino mass, and dark energy" (in en). Physical Review D 71 (10): 103515. doi:10.1103/PhysRevD.71.103515. பன்னாட்டுத் தர தொடர் எண்:1550-7998. Bibcode: 2005PhRvD..71j3515S. 
  9. Seljak, Uroš (11 October 2000). "Analytic model for galaxy and dark matter clustering" (in en). Monthly Notices of the Royal Astronomical Society 318 (1): 203–213. doi:10.1046/j.1365-8711.2000.03715.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. Bibcode: 2000MNRAS.318..203S. https://archive.org/details/sim_monthly-notices-of-the-royal-astronomical-society_2000-10-11_318_1/page/203. 
  10. "2021 Gruber Cosmology Prize". gruber.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 6 May 2021.
  11. Warner prize recipients பரணிடப்பட்டது 19 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம், AAS, retrieved 27 March 2011.
  12. "Commons:Wiki Science Competition 2019/Winners - Wikimedia Commons".
  13. "Lab Cosmologist Wins Science Photo Competition". Elements Archive. July 31, 2020. பார்க்கப்பட்ட நாள் August 15, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோசு_செல்ஜாக்&oldid=3780044" இலிருந்து மீள்விக்கப்பட்டது