உயிர் கரிம வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர் கரிம வேதியியல் (Bioorganic chemistry) என்பது கரிம வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் பிரிவுகளை இணைத்து வேகமாக வளர்ந்து வரும் ஓர் அறிவியல் துறையாகும்.

உயிர் அறிவியல் துறையின் கிளைதான் வேதியியல் முறைகளைப் பயன்படுத்தி உயிரியல் செயல்முறைகளை ஆராய்வதைக் கையாளுகிறது. [1] புரதம் மற்றும் நொதிகளின் செயல்பாடுகள் இந்த செயல்முறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். [2]

சில நேரங்களில் உயிர் வேதியியல், உயிர் கரிம வேதியியல் இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றாக மாற்றியும் பயன்படுத்தப்படுகிறது. உயிர் கரிம வேதியியல் என்பது உயிரியல் அம்சங்களை மையமாகக் கொண்ட கரிம வேதியியல் பிரிவாகும். உயிர் வேதியியல் வேதியியலைப் பயன்படுத்தி உயிரியல் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டதாகும். உயிர் கரிமவேதியியல் கட்டமைப்புகள், தொகுப்புவினை மற்றும் இயக்கவியல் போன்ற கரிம-வேதியியல் ஆராய்ச்சிகளை உயிரியலை நோக்கி விரிவாக்கிச் செல்ல முயற்சிக்கிறது. உலோகநொதிகளையும் இணைகாரணிகளையும் மேலும் ஆய்வுக்கு உட்படுத்துகையில் உயிர் கரிம வேதியியலானது உயிர் கனிம வேதியியலையும் அதனோடு சேர்த்துக் கொள்கிறது.

துணைப்பிரிவுகள்[தொகு]

உயிர் இயற்பிய கரிம வேதியியல் என்பது மூலக்கூற்று அங்கீகாரத்தின் நெருக்கமான விவரங்களை உயிர் கரிம வேதியியல் விவரிக்க முயற்சிக்கும்போது பயன்படுத்தப்படும் சொல்லாகும். [3]

இயற்கைப் பொருள் வேதியியல்[தொகு]

இயற்கைப் பொருள் வேதியியல் என்பது இயற்கையில் காணப்படும் சேர்மங்களை அவற்றின் பண்புகளை தீர்மானிப்பதற்காக அடையாளம் காணும் செயல்முறையாகும். பெரும்பாலும் மருத்துவ பயன்பாடுகள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் வளர்ச்சிக்கு பெரும்பாலும் கூட்டு கண்டுபிடிப்புகள் வழிவகுக்கும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schmuck, Carsten, ed. lit. Wennemers, Helma, ed. lit. (cop. 2004). Highlights in bioorganic chemistry : methods and applications. Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30656-0. இணையக் கணினி நூலக மைய எண் 782820192. {{cite book}}: Check date values in: |date= (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. 2.0 2.1 Breslow, Ronald (June 1998). "Bioorganic Chemistry: A Natural and Unnatural Science". Journal of Chemical Education 75 (6): 705. doi:10.1021/ed075p705. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9584. 
  3. Nelson J. Leonard, Bioorganic chemistry-a scientific endeavour in continuous transition Pure Appl. Chem., Vol. 66, No. 4, pp. 659-662.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_கரிம_வேதியியல்&oldid=3133014" இலிருந்து மீள்விக்கப்பட்டது