உமையா கலீபகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உமய்யா கலீபகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
بنو أمية
பனூ உமையா
உமையா கலீபகம்
அமீரகம்
Flag of Afghanistan (1880–1901).svg
 
Blank.png
 
Blank.png
661 – 750 Flag of Afghanistan (1880–1901).svg
 
Umayyad Flag.svg

உமையாக்கள் கொடி

கொடி

உமையாக்கள் அமைவிடம்
உமையா கலீபகம் அதன் உச்சத்தில்.
தலைநகரம் திமிஷ்கு
Capital-in-exile குர்துபா
மொழி(கள்) அரபி அலுவல் மொழி, அரமேயம், அர்மேனியன், பெர்பர் மொழி, காப்திக், சியார்சிய மொழி, கிரேக்க மொழி, ஈபுரு, துருக்கிய மொழி, குர்தியம்[1], மத்திய பாரசீகம், மொசாரபி
மதம் சுன்னி இசுலாம்
அரசு கலீபகம்
தலைவர்
 - 661–680 முதலாம் முஆவியா
வரலாறு
 - நிறுவிய ஆண்டு 661
 - கலைக்கப்பட்டது 750
பரப்பளவு
 - 750 1,30,00,000 கிமீ² (50,19,328 சதுர மைல்)
மக்கள்தொகை
 - 7ம் நூற்றாண்டு அண். 6,20,00,000 
நாணயம் உமையா தீனார்

உமையா கலீபகம் (Umayyad Caliphate அரபி:بنو أمية) இசுலாமிய கலீபகங்களின் வரிசையில் இரண்டாவது கலீபகம் ஆகும். சிரியாவின் திமிஷ்கு நகரம் இதன் தலைநகரம் ஆகும். ராசிதீன் கலீபாக்களில் கடைசி கலீபாவான அலீ அவர்கள் இறந்த பின்பு அப்போதைய, சிரியாவின் ஆளுநரான முதலாம் முஆவியா என்பவரால் உமையா கலீபகம் உருவாக்கப்பட்டது. இவர் பனூ உமய்யா குலத்தில் இருந்து வந்தவர் என்பதால் இது உமையா கலீபகம் என அழைக்கப்பட்டது. இது தனது உச்சத்தில் ஐந்து மில்லியன் சதுர மைல் பரப்பளவில், அரபுத் தீபகற்பம், பாரசீகம், சிந்து சமவெளி, வட ஆபிரிக்கா மற்றும் ஐபீரிய மூவலந்தீவு (ஐபீரிய தீபகற்பம்) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இது அந்த காலக்கட்டம் வரை, ஒரு பேரரசினால் ஆளப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பு ஆகும்[2]. மேலும் இற்றை வரை ஆளப்பட்ட நிலப் பரப்புக்களில் ஐந்தாவது மிகப்பரந்த நிலப்பரப்பு ஆகும்.

அப்பாசியர்களின் எழுச்சியைத் தொடர்ந்து, பொகா 750 இல் இது வீழ்ச்சியடையத் தொடங்கியது. இருப்பினும் இதனை தொடர்ந்து கலீபகத் தலைமை, அப்பாசியர்கள், குர்துபா உமையாக்கள், பாத்திமிய்ய கலீபாக்கள் மற்றும் உதுமானியக் கலீபாக்கள் என 1924 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

மேற்கோள்கள் [தொகு]

  1. http://www.historiansagainstwar.org/resources/Islamic_History&Literature.pdf
  2. Blankinship, Khalid Yahya (1994), The End of the Jihad State, the Reign of Hisham Ibn 'Abd-al Malik and the collapse of the Umayyads, State University of New York Press, p. 37, ISBN 0791418278 
"http://ta.wikipedia.org/w/index.php?title=உமையா_கலீபகம்&oldid=1381671" இருந்து மீள்விக்கப்பட்டது