இரீட்டா திவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரீட்டா திவாரி
Rita Tewari
ஒரு மாநாட்டில் ரீட்டா திவாரி பேசுகிறார்
பிறப்புதில்லி
வாழிடம்நாட்டிங்ஙாம்
பணியிடங்கள்நாட்டிங்ஙாம் பல்கலைக்கழகம்

ரீட்டா திவாரி (Rita Tewari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியாவார். ஒட்டுண்ணியியல் நிபுணரான இவர் மலேரியாவின் மூலக்கூறு உயிரியலை ஆய்வு செய்துவருகிறார். தற்போது நாட்டிங்ஙாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவி வகித்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

திவாரி இந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். ஆனால் வளரும்போது நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இருந்தார். இவரது தந்தை சமூக அறிவியலில் பேராசிரியராக இருந்தார். திவாரி தனது இளம் வயதில் ஏழு முறை மலேரியா நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். [1] [2] [3] ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால் உள்ளூர் பகுதியில் தேர்வு இல்லாததால் அதற்கு பதிலாக விலங்கியல் படிக்க வேண்டியிருந்தது. தில்லி பல்கலைக்கழகத்தில் எக்சு-குரோமோசோம் மரபியல் பாடத்தில் முனைவர் பட்டப் படிப்புக்காக திவாரி மீண்டும் தான் பிறந்த நகரத்திற்கு திரும்பினார். [4]

தொழில்[தொகு]

திவாரி 1989 ஆம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்பை முடித்த பிறகு ஐரோப்பா முழுவதும் பல ஆராய்ச்சிப் பதவிகளை வகித்தார். காலவரிசைப்படி, பிரான்சு நாட்டின் தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியாளர், தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் / கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகம் மற்றும் ஈராசுமசு பல்கலைக்கழகம், ரோட்டர்டாம், மற்றும் நார்வே நாட்டின் சார்சு சர்வதேச மையத்தில் கடலியல் மூலக்கூறு உயிரியல் மூத்த விஞ்ஞானி உள்ளிட்ட பதவிகள் இவற்றில் அடங்கும். [5] 1999 ஆம் ஆண்டு இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஆராய்ச்சி விரிவுரையாளராக பணியமர்த்தப்பட்டார். அங்கு இவர் முதலில் எலிகள் மாதிரிகளைப் பயன்படுத்தி மலேரியாவில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். [4] ஆலிவர் பில்கரின் ஆய்வகத்துடன் பிளாசுமோடியம் பெர்கேயின் வாழ்க்கைச் சுழற்சியில் கால்சியம் சார்ந்த புரத கைனேசின் பங்கு பற்றிய ஆராய்ச்சியில் பங்களித்த இவர் ஒன்பது ஆண்டுகள் இங்கு இருந்தார். [6] [7] ஒட்டுண்ணியின் பாலியல் இரத்த நிலை வடிவங்களை கொசு எடுத்துக்கொண்டவுடன் இனப்பெருக்க வடிவங்களாக மாற்றுவதில் புரதம் மற்றும் கால்சியம் வெளியீட்டின் முக்கியத்துவத்தை இவரது முடிவுகள் நிரூபித்தன. [6]

திவாரி 2008 ஆம் ஆண்டு நாட்டிங்ஙாம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். பின்னர் 2012 ஆம் ஆண்டு இணை பேராசிரியராகவும், 2015 ஆம் ஆண்டு முழு பேராசிரியராகவும் உயர்த்தப்பட்டார். [5]

திவாரி மற்றும் இவரது ஆய்வகம் மலேரியா பரவுதல் மற்றும் வளர்ச்சியில் மூலக்கூறுகளைப் படிப்பதில் கவனம் செலுத்துகின்றன. மருந்துகளுக்கான புதிய இலக்குகளை கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், கொறித்துண்ணி மலேரியா பி. பெர்கேயை ஒரு மாதிரியாகவும் பயன்படுத்துகின்றன. [8] குழுவால் வெளியிடப்பட்ட ஒரு 2012 ஆய்வு ஒட்டுண்ணி ஒகினேட்டு வடிவமாக செயல்படுவதற்கு ஒரு மலேரியா பாசுபோடேசை அடையாளம் கண்டுள்ளது. இது கொசு மூலம் ஒட்டுண்ணியை பரப்புகிறது. [9] [10] ஒரு வருடம் கழித்து இவர்கள் ஒட்டுண்ணியின் வளர்ச்சிக்கு அவசியமான கால்சியம் டிரான்சுபோர்ட்டரைக் கண்டுபிடிக்க உதவினார்கள். [11] [12] 2014 ஆம் ஆண்டு திவாரியின் குழு பி பெர்கெய் மரபணு முழுவதும் அடையாளம் காணப்பட்ட பாசுபேட்டேசின் மரபணு திரையை வெளியிட்டது. [1] [2] [3] [13] பாதி மரபணுக்களுக்கு ஒரு மரபணு என்ற நிலையை உருவாக்க முடியவில்லை. இது ஒட்டுண்ணியின் வாழ்வில் இன்றியமையாத ஒரு செயல்பாட்டைக் குறிக்கிறது. மேலும் ஆறு மரபணுக்கள் பாலியல் வளர்ச்சி மற்றும் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டது. [14] புரோட்டீன் அமைப்பொத்த மரபணு வரிசை மற்றும் மரபணு கையாளுதலுக்கான மரபணு பகுப்பாய்வு போன்றவை திவேரியின் ஆய்வுகளில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் மலேரியா சுழற்சியின் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிப்பு மற்றும் கொசுக்களில் கூட்டுப்பருவ வடிவத்தின் வளர்ச்சியில் இவற்றின் முக்கியத்துவம் ஆகியவையும் அடங்கும். [15] [16]

அந்தோனி ஓல்டர், ராபர்ட் சிண்டன் மற்றும் மரியா மோட்டா உட்பட பல குறிப்பிடத்தக்க மலேரிய நிபுணர்கள் திவாரியுடன் இணைந்து ஆய்வுப்பணியை நிறைவேற்றினார்கள். [17]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Expert 'caught malaria seven times'". BT News. 10 July 2014. Archived from the original on 26 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019."Expert 'caught malaria seven times'" பரணிடப்பட்டது 2019-05-26 at the வந்தவழி இயந்திரம். BT News. 10 July 2014. Retrieved 26 May 2019.
  2. 2.0 2.1 "The 'yin and yang' of malaria parasite development". EurekAlert! (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-26."The 'yin and yang' of malaria parasite development". EurekAlert!. Retrieved 2019-05-26.
  3. 3.0 3.1 Admin (2014-07-30). "Malaria research close to understanding parasite lifecycle". Laboratory News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.Admin (2014-07-30). "Malaria research close to understanding parasite lifecycle". Laboratory News. Retrieved 2019-05-26.
  4. 4.0 4.1 "Profile: Dr Rita Tewari – Campus News" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-26."Profile: Dr Rita Tewari – Campus News". Retrieved 2019-05-26.
  5. 5.0 5.1 "Rita Tewari - The University of Nottingham". www.nottingham.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  6. 6.0 6.1 "Reporter - Key life cycle switch in malaria parasite". www.imperial.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  7. Brinkmann, Volker; Franke-Fayard, Blandine; Wenig, Gerald; Tewari, Rita; Dechamps, Sandrine; Billker, Oliver (2004-05-14). "Calcium and a Calcium-Dependent Protein Kinase Regulate Gamete Formation and Mosquito Transmission in a Malaria Parasite" (in en). Cell 117 (4): 503–514. doi:10.1016/S0092-8674(04)00449-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0092-8674. பப்மெட்:15137943. https://www.cell.com/cell/abstract/S0092-8674(04)00449-0. 
  8. "Putting malaria on the SHELPH - The University of Nottingham". www.nottingham.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  9. "Enzyme discovery may lead to new ways to fight malaria". Crick (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  10. Tewari, Rita; Holder, Anthony A.; Tobin, Andrew B.; Sinden, Robert E.; Green, Judith L.; Solyakov, Lev; Straschil, Ursula; Patzewitz, Eva-Maria et al. (2012-09-20). "A Unique Protein Phosphatase with Kelch-Like Domains (PPKL) in Plasmodium Modulates Ookinete Differentiation, Motility and Invasion" (in en). PLOS Pathogens 8 (9): e1002948. doi:10.1371/journal.ppat.1002948. பன்னாட்டுத் தர தொடர் எண்:1553-7374. பப்மெட்:23028336. 
  11. "Malaria parasite protein identified as potential new target for drug treatment". www.sgul.ac.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2019-05-26. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  12. Staines, Henry M.; Tewari, Rita; Krishna, Sanjeev; Soldati-Favre, Dominique; Wheatley, Sally P.; Slavic, Ksenija; McFarlane, Leon R.; Poulin, Benoit et al. (2013-02-28). "The Plasmodium berghei Ca2+/H+ Exchanger, PbCAX, Is Essential for Tolerance to Environmental Ca2+ during Sexual Development" (in en). PLOS Pathogens 9 (2): e1003191. doi:10.1371/journal.ppat.1003191. பன்னாட்டுத் தர தொடர் எண்:1553-7374. பப்மெட்:23468629. 
  13. Medical Research Council, M. R. C. (2019-01-14). "The 'yin and yang' of malaria parasite development". mrc.ukri.org (in ஆங்கிலம்). Archived from the original on 2019-05-26. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  14. Tewari, Rita; Pain, Arnab; Wickstead, Bill; Holder, Anthony A.; Tate, Edward W.; Arold, Stefan T.; Radhakrishnan, Anand; Mohamed, Alyaa M. A. H. et al. (2014-07-09). "Genome-wide Functional Analysis of Plasmodium Protein Phosphatases Reveals Key Regulators of Parasite Development and Differentiation" (in en). Cell Host & Microbe 16 (1): 128–140. doi:10.1016/j.chom.2014.05.020. பன்னாட்டுத் தர தொடர் எண்:1931-3128. பப்மெட்:25011111. 
  15. Tewari, Rita; Wickstead, Bill; Pain, Arnab; Holder, Anthony A.; Yamano, Hiroyuki; Wheatley, Sally P.; Guttery, David S.; Brady, Declan et al. (2015-11-13). "Plasmodium P-Type Cyclin CYC3 Modulates Endomitotic Growth during Oocyst Development in Mosquitoes" (in en). PLOS Pathogens 11 (11): e1005273. doi:10.1371/journal.ppat.1005273. பன்னாட்டுத் தர தொடர் எண்:1553-7374. பப்மெட்:26565797. 
  16. "Cyclin' out of gear: malaria parasites grinding to a halt - The University of Nottingham". www.nottingham.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
  17. "Nottingham research plays key role in malaria breakthrough - The University of Nottingham". www.nottingham.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீட்டா_திவாரி&oldid=3544270" இலிருந்து மீள்விக்கப்பட்டது