இரிச்சர்டு சி. தோல்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிச்சர்டு சி. தோல்மன்
Richard C. Tolman
1945 இல் இரிச்சர்டு தோல்மன்
பிறப்பு மார்ச்சு 4, 1881



மேற்கு நியூட்டன்,
மசாசூசட்சு,
ஐக்கிய அமெரிக்கா.
இறப்பு செப்டம்பர் 5, 1948(1948-09-05) ( அகவை 67)



பசதேனா,
கலிபோர்னியா,
ஐக்கிய அமெரிக்கா.
Alma mater மசாசூசட்சு தொழில்நுட்ப நிறுவனம்
அறிவியல் தொழில்
களங்கள் இயல் வேதியியல்
புள்ளியியல் இயக்கவியல்
அண்டவியல்
நிறுவனங்கள் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
ஆய்வறிக்கை கரைசல்களில்
''மையவிலக்கு விசையால்'']
உருவாகும் மின்காந்த விசை (1910)
முனைவர் ஆலோசகர் ஆர்த்தர் அமோசு நோயசு
முனைவர் பட்ட மாணவர்கள் ஆலன் சி. ஜி. மிட்செல்
லீனசு பவுலிங்

 

இரிச்சர்டு சேசு தோல்மன் (Richard Chace Tolman )(மார்ச் 4,1881 - செப்டம்பர் 5,1948) ஒரு அமெரிக்க கணித இயற்பியலாளரும் இயல் வேதியியலாளரும் ஆவார் , அவர் புள்ளிவிவர இயக்கவியலில் பல பங்களிப்புகளை வழங்கினார்.[1] ஐன்ஸ்டீன் பொது சார்பியல் கண்டுபிடிப்புக்குப் பிந்தைய ஆண்டுகளில் கோட்பாட்டு அண்டவியலுக்கும் அவர் முதன்மையான பங்களிப்புகளை வழங்கினார். கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியல் வேதியியல், கணித இயற்பியல் பேராசிரியராக இருந்தார்.

தோல்மன் (Tolman)மேற்கு நியூட்டன் மாசசூசெட்சில் பிறந்தார் மற்றும் மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் பொறியியல் பயின்றார் , 1903 இல் தனது இளங்கலை பட்டத்தையும் , 1910 இல் ஏ. ஏ. நோயிசின் கீழ் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2]

அவர் 1924 இல் உரூத் செர்மன் தோல்மனை மணந்தார்.

இவர் 1912 ஆம் ஆண்டில் சார்பியல் பொருண்மைக் கருத்தை உருவாக்கினார் , " இந்தக் கோவை, [3] நகரும் பொருளின் பொருண்மைக்கு மிகவும் பொருத்தமானது.

1916 ஆம் ஆண்டு தாமசு டேல் சுட்டீவர்டு தோல்மனுடன் நடத்திய செய்முறையில் மின்சாரம் ஒரு பொன்மக் கடத்தி வழியாக பாயும் மின்னன்களின் ஓட்டம்என்பதை நிறுவினார். இந்தச் செய்முறையின் உடன்விளைவு மின்னன்பொருண்மை மதிப்பின் அளவீடாகும்.[4] இருப்பினும் ஒட்டுமொத்தமாக அவர் முதன்மையாக ஒரு கோட்பாட்டாளராக அறியப்பட்டார்.

தொழில்நுட்பக் கூட்டணியில் 1919 ஆம் ஆண்டில் உறுப்பினராக இருந்த தோல்மன் , தொடர்ந்து தொழில்நுட்ப இயக்கத்தின் முன்னோடியாக விளங்கினார் , அங்கு அவர் சமூக, தொழில்துறைப் புலங்களுக்கு அறிவியலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பகுப்பாய்வு செய்யும் ஆற்றல் அளக்கையை நடத்த உதவினார்.[5]

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இரிச்சர்டு சி. தோல்மனும் ஆல்பர்ட் ஐன்சுட்டைனும், 1932

1922 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பின்ராகத் தோல்மன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] அதே ஆண்டு கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவ்னக் கல்விப் புலத்தில் சேர்ந்தார் , அங்கு அவர் இயற்பியல் வேதியியல், கணித இயற்பியல் பேராசிரியராகவும் பின்னர் பட்டதாரி பள்ளியின் புலமுதல்வராகவும் ஆனார். கால்டெக்கில் தோல்மனின் தொடக்க கால மாணவர்களில் ஒருவர் கோட்பாட்டு வேதியியலாளர் இலீனசு பவுலிங் ஆவார் , இவருக்குத் தோல்மன் பழைய குவையக் கோட்பாட்டைக் கற்பித்தார். 1923 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தில் தோல்மன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

1927 ஆம் ஆண்டில் தோல்மன் புள்ளியியல் இயக்கவியல் குறித்த ஒரு உரையை வெளியிட்டார் , அதன் பின்னணியாக மேக்சு பிளாங்க், நீல்சு போர் அர்னால்டு சோமர்பெல்ட் ஆகியோரின் பழைய குவையக் கோட்பாடகமைந்தது.[8] 1932 ஆம் ஆண்டில் அமெரிக்க மெய்யியல் கழகத்திற்குத் தோல்மன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 1938 ஆம் ஆண்டில் அவர் ஒரு புதிய விரிவான படைப்பு ஒன்றை வெளியிட்டார் , இது செவ்வியல், குவைய அமைப்புகளுக்கு புள்ளிவிவர இயக்கவியலின் பயன்பாட்டை உள்ளடக்கியது.[10][11] இது பல ஆண்டுகளாக இந்தப் புலத்தில் நிலையான பணியாக தொடர்ந்தது , இதில்இன்றும் ஆர்வம் கவிந்து உள்ளது.

அவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் , இவர் சார்பியல் அமைப்புகளிலும் அண்டவியலுக்கு வெப்ப இயக்கவியலைப் பயன்படுத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டினார். 1934 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட ஒரு முதன்மையான தனிவரைவுநூலான சார்பியல் வெப்ப இயங்கியலும் அண்டவியலும் விரிவடைந்து வரும் அண்டத்தில் கரும்பொருள் கதிர்வீச்சு எவ்வாறு குளிர்ச்சியடைந்தும், வெப்பமாக உள்ளது என்பதை நிறுவியது இது அண்ட நுண்ணலைப் பின்னணியின் பண்புகளை நோக்கி நகரும் ஒரு முதன்மைச் சுட்டியாகும்.[12] மேலும் இந்த தனிவரைவின் வழி , ஒரு மூடிய அண்டம் சுழி ஆற்றலுக்கு சமமாக எப்படி இருக்கும் என்பதை ஆவணப்படுத்தி விளக்கிய முதல் அறிஞர் தோல்மன் ஆவார். அனைத்துப் பொருண்மை ஆற்றலும் நேர்முகமானது என்பதையும் அனைத்து ஈர்ப்பு ஆற்றலும் எதிர்மறையானது என்பதை அவர் விளக்கினார் , மேலும் அவை ஒன்றுக்கொன்று நீக்கிக்கொண்டு சுழி ஆற்றல் அண்டத்திற்கு வழிவகுக்கின்றன.[13] 1922 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் பிரீடுமன் முன்மொழிந்த ஊசலாட்ட அண்டக் கருதுகோள் பற்றிய அவரது ஆய்வு குலைதிறம் தொடர்பான சிக்கல்களை நோக்கிக் கவனத்தை ஈர்த்தது , இதன் விளைவாக 1960 களின் பிற்பகுதிக்குப் பின் அக்கருதுகோள் காலாவதி ஆனது.

இரண்டாம் உலகப் போரின் போது தோல்மன் மனாட்டன் திட்டத்தில் படைமேலரான இலெசுலி குரோவ்சின் அறிவியல் அறிவுரையாளராகப் பணியாற்றினார். பசதேனாவில் இவர் இறக்கும் போது ஐக்கிய நாடுகள் அணுவாற்றல் ஆணையத்தின் அமெரிக்கப் பேராளரான பெர்னார்ட் பாருச்சின் தலைமை அறிவுரையாளராக இருந்தார்.

அமெரிக்க வேதியியல் கழகத்தின் தெற்கு கலிபோர்னியா பிரிவு ஒவ்வொரு ஆண்டும் வேதியியலுக்கான சிறந்த பங்களிப்புகளை மதிக்கும் வகையில் அதன் தோல்மன் பதக்கத்தை வழங்கி தோல்மனை மதிக்கிறது.

குடும்பம்.[தொகு]

நடத்தை உளவியலாளர் எட்வர்டு சேசு டால்மேன் இவரது உடன்பிறப்பாவார்.

மேலும் காண்க[தொகு]

  • வெப்ப இயக்கவியல், புள்ளியியல் இயக்கவியல் பாடப்புத்தகங்களின் பட்டியல்
  • தோல்மன் நீளம்
  • தோல்மன் மேற்பரப்பு ஒளிர்மை சோதனை
  • தோல்மன் நீளம்தோல்மனின்முரண்பாடு
  • தோல்மன் நீளம்தோல்மனின் H தேற்றம்
  • தோல்மன் நீளம்தோல்மன் - எகிரென்பெசுட்டு விளைவு
  • தோல்மன் நீளம்தோல்மன் - ஓப்பன்கைமர் - வோல்காப் சமன்பாடு
  • தோல்மன் நீளம்தோல்மன் - ஓப்பன்கைமர் - வோல்காப் வரம்பு
  • இலைமைத்திரே - தோல்மன் பதின்வெளி
  • உலூயிசு - தோல்மன் முரண்பாடு
  • சுட்டீவர்டு ந்தோல்மன் விளைவு
  • அலைவுறும் அண்டம்
  • நிலையான கோள சமச்சீர் கருத்தியல் பாய்மம்
  • மென் மனிதன் (அணு குண்டு)

மேற்கோள்கள்[தொகு]

  1. Gale, George (2014), "Tolman, Richard Chace", Biographical Encyclopedia of Astronomers, New York, NY: Springer New York, pp. 2164–2165, Bibcode:2014bea..book.2164G, doi:10.1007/978-1-4419-9917-7_1388, ISBN 978-1-4419-9916-0 {{citation}}: Missing or empty |url= (help)
  2. கணித மரபியல் திட்டத்தில் இரிச்சர்டு சி. தோல்மன்
  3. Tolman, R. C. (1912). "Non-Newtonian Mechanics, The Mass of a Moving Body". Philosophical Magazine 23 (135): 375–381. doi:10.1080/14786440308637231. https://archive.org/stream/londonedinburg6231912lond#page/374/mode/2up/search/tolman. 
  4. Tolman, R. C.; Stewart, T. D. (1916). "The electromotive force produced by the acceleration of metals". Physical Review 8 (2): 97–116. doi:10.1103/PhysRev.8.97. பப்மெட்:16576140. பப்மெட் சென்ட்ரல்:1090978. Bibcode: 1916PhRv....8...97T. https://babel.hathitrust.org/cgi/pt?id=pst.000050421268;view=1up;seq=115. 
  5. "The Technical Alliance Profiles". Archived from the original on 2012-12-21. பார்க்கப்பட்ட நாள் 2013-03-16. Retrieved March-16-13
  6. "Book of Members, 1780-2010: Chapter T" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 20 April 2011.
  7. "Richard C. Tolman". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
  8. Walter Bartky (1927). "Review: Statistical Mechanics with Applications to Physics and Chemistry by Richard C. Tolman". Astrophysical Journal 66: 143–144. doi:10.1086/143076. Bibcode: 1927ApJ....66..143B. https://archive.org/details/sim_astrophysical-journal_1927-09_66_2/page/143. 
  9. "APS Member History". search.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
  10. Sterne, Theodore E. (1941). "Review: The Principles of Statistical Mechanics by Richard C. Tolman". Astrophysical Journal 93: 513. doi:10.1086/144301. Bibcode: 1941ApJ....93..513.. https://archive.org/details/sim_astrophysical-journal_1941-05_93_3/page/513. 
  11. Leopold Infeld (July 1939). "Review: The Principles of Statistical Mechanics by Richard C. Tolman". Philosophy of Science 6 (3): 381. doi:10.1086/286579. 
  12. Clarence Chant (1934). "Review: Relativity, Thermodynamics, and Cosmology by Richard C. Tolman". Journal of the Royal Astronomical Society of Canada 28: 324–325. Bibcode: 1934JRASC..28Q.324C. https://archive.org/details/sim_journal-of-the-royal-astronomical-society-of-canada_1934-09_28_7/page/324. 
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Reynosa என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

தோல்மன் எழுதிய புத்தகங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

External links[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிச்சர்டு_சி._தோல்மன்&oldid=3796676" இலிருந்து மீள்விக்கப்பட்டது