இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம நாதன் இந்து மகளிர் கல்லூரி
Ramanathan Hidu Ladies College
முகவரி
ஆர் ஏ டீமெல் மாவத்தை, பம்பலப்பிட்டி
பம்பலப்பிட்டி, மேல் மாகாணம்
இலங்கை
அமைவிடம்6°53′2.3″N 79°51′38.5″E / 6.883972°N 79.860694°E / 6.883972; 79.860694
தகவல்
வகைஅரசு 1ஏபி
குறிக்கோள்'Knowledge is truth
(
மெய்ப்பொருள் காண்பது அறிவு,)
சமயச் சார்பு(கள்)இந்து
நிறுவல்1981
பள்ளி இலக்கம்066162
பள்ளிக் குறியீடு0116036
ஆசிரியர் குழு89
தரங்கள்1-13
பால்பெண்கள்
வயது வீச்சு5-18
மொழிதமிழ்
School roll2,000

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (Ramanathan Hindu Ladies College) இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஒரு இந்துப் பெண்கள் பாடசாலை ஆகும். 1981 சனவரி 19 அன்று 26 மாணவிகளுடனும் 2 ஆசிரியர்களுடனும் கொழும்பு, பம்பலப்பிட்டியில் ஆர். ஏ. டீ. மெல் மாவத்தையில் (முன்னைய டுப்பிளிகேசன் வீதி) இப்பாடசாலை அமைந்துள்ளது. இது 2006ஆம் ஆண்டில் அது 89 ஆசிரியர்களையும் 2000 மாணவிகளையும் கொண்டதாக வளர்ச்சியடைந்தது. இதற்கான நிலத்தை அன்றைய புதிய கதிரேசன் கோவிலின் தர்மகர்தாவான பழனியப்பாச் செட்டியார் கோவில் நந்தவனத்தின் ஒரு பகுதியை கல்வித்தேவைக்கு என ஒதுக்கினார்.

நோக்கு[தொகு]

ஆரோக்கியமான உடல், உள, சமூக, ஆன்மீக நன்னிலையைக் கொண்டு விளங்கும் நற்பிரஜைகளைக் இந்து தமிழ் கலாச்சாரப் பின்னணிகளின் துணையோடு உருவாக்கித் தன்னிறைவுள்ள இலங்கையைக் காணுதல்

இலக்கு[தொகு]

மாறி வரும் சவால்களுக்கு முகம் கொடுக்கத் தக்க உலக மயமாதலுக்கு இசைவாகக் கூடிய ஆளுமை மிக்க மாணவர்களை உன்னதமான கற்றல் கற்பித்தல் முறைகளினூடும் சிறப்பான ஆசிரிய மாணவ உறவு முறை மூலமும் உருவாக்குதல்

உசாத்துணை[தொகு]

இமயம், முத்துவிழாச் சிறப்பு மலர் (1981-2011)