இரவி பெலகரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவி பெலகரே
பிறப்பு(1958-03-15)15 மார்ச்சு 1958
பெல்லாரி, இந்தியா
இறப்பு13 நவம்பர் 2020(2020-11-13) (அகவை 62)
பெங்களூர், கர்நாடகா, இந்தியா
தொழில்பத்திரிகையாளர், எழுத்தாளர், புதின ஆசிரியர், நடிகர்
வகைபுனைவு, அபுனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • ஹிமாலயன் பிளன்டர்
  • நீ ஹிங்க நோடப்யடா நன்னா
  • பீம தீரடா ஹந்தகாரு
  • இந்திரேய மக சஞ்சயா
  • டி கம்பெனி
இணையதளம்
www.ravibelagere.com

இரவி பெலகெரே (Ravi Belagere;15 மார்ச் 1958 - 13 நவம்பர் 2020) கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ஒரு இந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ஆவார். [1] [2] [3] கன்னட மொழிப் பத்திரிக்கையான ஹாய் பெங்களூர், இரு வார இதழான ஓ மனசே ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தார். [4] பாவனா பிரகாசனா, பிரார்த்தனா பள்ளி, பாவனா ஆடியோ ரீச் ஆகியவற்றையும் நிறுவினார். குஷ்வந்த் சிங்கின் தீவிர ரசிகரான இவர், இடதுசாரி சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதாகவும், தனக்கு அரசியல் சாய்வு இல்லை என்றும் கூறினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இரவி பெலகெரே 1958 மார்ச் 15 அன்று பெல்லாரியில் உள்ள சத்தியநாராயணப்பேட்டையில் பிறந்தார். இவரது தாயார் பெயர் பர்வதம்மாள், தந்தை ஒரு எழுத்தாளர். இவர் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியை தும்கூரில் உள்ள சித்தகங்கா உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுகள் படித்து பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தார். [5] பின்னர், பெல்லாரி வீரசைவக் கல்லூரியில் வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6]

திருமண வாழ்க்கை[தொகு]

இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி இலலிதா, இரண்டாவது மனைவி யசோமதி, இவர் ஹாய் பெங்களூர் அலுவலகத்தில் சக ஊழியராக இருந்தார்.

பெலகெரே வரலாற்றின் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பெல்லாரி, ஹாசன் , ஹூப்ளி ஆகிய இடங்களில் வரலாற்று விரிவுரையாளராகப் பணிபுரிந்தார், 1984இல் பெங்களூருக்குச் சென்றார்.[7] இவர் குறைந்த ஊதியத்தில் பல்வேறு பணிகளை செய்தார்.பெங்களூருவுக்கு வந்த பிறகு, ஆர். டி. விட்டலமூர்த்தி, ரா. சோமநாத், ஜோகி , ஐ.எச். சங்கம் தேவ் ஆகியோருடன் சேர்ந்து இவர் செப்டம்பர் 25, 1995 அன்று ஹாய் பெங்களூரு என்ற தனது சொந்த செய்தித்தாளை வெளியிட்டார். இது பல ரசிகர்களை உருவாக்கியது. மேலும் இவரது செய்தித்தாள் ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் விநியோகிக்கப்பட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் இளைஞர்களின் சிரமங்கள் மற்றும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட ஓ மனசே என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதுவும் உடனடி வெற்றியைப் பெற்றது. பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து சில படங்களில் நடித்தார்.[8]

சர்ச்சைகள்[தொகு]

  • நடிகை ரூபினி பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரை

இவர் ரூபினி பற்றி ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதினார். இது ஒரு பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.[5]

  • எச். டி. குமாரசாமி- இராதிகா பற்றிய படம்

எச். டி. குமாரசாமி - நடிகை ராதிகா குமாரசாமியின் காதலை அடிப்படையாகக் கொண்ட முக்யமந்திரி ஐ லவ் யூ படத்தை இயக்க முயற்சித்தார். ஆனால் தேவ கௌடா பட வெளியீட்டுக்கு தடை பெற்றதால் படம் திரைக்கு வரவில்லை.

  • திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்

22 வயது இளம்பெண்ணுக்கு இவர் எழுதியதாகக் கூறப்படும் காதல் கடிதத்தை துனியா என்ற பத்திரிகை வெளியிட்டது. மேலும், இது போன்ற பல வழக்குகள் தம்மிடம் இருப்பதாக அந்த இதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

  • காப்புரிமைச் சிக்கல்கள்

பீமா தீரதள்ளி , ஓம் (கன்னடத் திரைப்படம்) போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் தனது பருக்கு மோதல் ஏற்பட்டது.

இறப்பு[தொகு]

இரவி 13 நவம்பர் 2020 அன்று தனது 62 வயதில் பெங்களூரில் மாரடைப்பால் இறந்தார். [9] [10] [11]

சான்றுகள்[தொகு]

  1. "ThatsKannada - Columnist - Ravi Belagere - Soorya Shikari - ಸೂರ್ಯ ಶಿಕಾರಿ - ರವಿ ಬೆಳಗೆರೆ". kannada.oneindia.com.
  2. "Nothing found for 2012 04 21 Wives". Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
  3. "Welcome to Ravi Belagere Website..." www.ravibelagere.com.
  4. "Scribd". Scribd.
  5. 5.0 5.1 "ಸತ್ಯನಾರಾಯಣ ಪೇಟೆಯಿಂದ ಸುಪಾರಿವರೆಗೆ ರವಿ ಬೆಳಗೆರೆ ಏಳು-ಬೀಳು". https://kannada.oneindia.com/features/from-satyanarayan-pete-to-supari-rise-and-fall-of-ravi-belagere/articlecontent-pf79618-130810.html. "ಸತ್ಯನಾರಾಯಣ ಪೇಟೆಯಿಂದ ಸುಪಾರಿವರೆಗೆ ರವಿ ಬೆಳಗೆರೆ ಏಳು-ಬೀಳು". kannada.oneindia.com (in Kannada). Retrieved 16 August 2018.
  6. "Exclusive biography of #RaviBelegere and on his life." (in en). FilmiBeat. https://www.filmibeat.com/celebs/ravi-belegere/biography.html. 
  7. "Stories about Bengaluru's underworld made journalist Ravi Belagere famous - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  8. Senior journalist and writer of Hai Bangalore, Ravi Belagere has died of a heart attack
  9. Avinash Kadesivalya (13 Nov 2020). "ಅಸಂಖ್ಯಾತ ಕನ್ನಡಿಗರಿಗೆ ಬರಹಗಳ ಹುಚ್ಚು ಹತ್ತಿಸಿದ ‘ಅಕ್ಷರ ರಾಕ್ಷಸ’ ಖ್ಯಾತ ಪತ್ರಕರ್ತ ರವಿ ಬೆಳಗೆರೆ ಇನ್ನಿಲ್ಲ..!" (in kn). Vijaya Karnataka. https://vijaykarnataka.com/news/karnataka/renowned-journalist-and-writer-ravi-belagere-has-died-of-a-heart-attack-late-at-night/articleshow/79202187.cms. 
  10. "Ravi Belagere Dies of Heart Attack In Bengaluru, Kannada Writers And Journalists Shocked". Sakshi Post. 13 Nov 2020. https://menglish.sakshi.com/amp/news/entertainment/ravi-belagere-dies-heart-attack-bengaluru-kannada-writers-and-journalists-shocked. 
  11. "Former Bigg Boss Kannada season 7 contestant and senior journalist Ravi Belagere passes away". Times Of India. 13 Nov 2020. https://m.timesofindia.com/tv/news/kannada/former-bigg-boss-kannada-season-7-contestant-and-senior-journalist-ravi-belagere-passes-away/amp_articleshow/79203569.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_பெலகரே&oldid=3785283" இலிருந்து மீள்விக்கப்பட்டது