இந்து சமய‌ நேர்த்திக்கடன் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயத்தில் நேர்த்திக்கடன் பட்டியல்

  • அங்கப் பிரதட்சணம் செய்தல்
  • அங்கமளித்தல் - கண்மலர், கை, கால் போன்ற உலோக அங்கங்களை செலுத்துதல்
  • அடிப்பிரதட்சனம் செய்தல்
  • அரிவாள் செலுத்துதல்[1]
  • அரிவாளின் மேல் நடத்தல்
  • அலகு குத்துதல்
  • அன்னதானம்
  • ஆணிச் செருப்பு அணிதல்
  • ஆயிரங்கண் பானை எடுத்தல்
  • உருவ பொம்மை செலுத்துதல்- தவழும் குழந்தை, ஆண்-பெண் பொம்மை போன்றவற்றை கோயிலில் செலுத்துதல்
  • உருள்தண்டம்
  • எச்சில் இலையில் அங்க பிரதட்சணம் செய்தல்
  • கரகம் எடுத்தல் - அக்னி கரகம், பூங்கரகம்
  • கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல்
  • கழுவேற்றுதல்
  • கற்களில் தாக்கிக்கொள்ளுதல்
  • கன்னிபெண் பலி -
  • காது வளர்த்தல்-
  • கால்நடை அளித்தல் - ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை கோயிலுக்கு அளித்தல்
  • காவடி எடுத்தல்
  • கிரிவலம் வருதல்
  • குருதி கொடுத்தல்
  • குழிமாத்து கொடுத்தல்
  • கோவில் மணி கட்டுதல் - வேண்டுதலுக்கு தக்கபடி சிறிய, பெரிய மணிகளை கோவிலில் கட்டுதல்
  • கோவிலை புதுப்பித்தல்
  • கோழி குத்துதல் - கோழியை கோயிலின் முன்னுள்ள வேலில் உயிரோடு குத்துதல்.
  • சாவு வேடிக்கை வேண்டுதல்
  • சாக்கு வேடம்
  • சாட்டையால் அடி வாங்குதல்
  • சாணி அடித்தல்
  • சூல்பலி - கருவுற்று இருக்கும் ஆடு, மாடு, பன்றி போன்ற உயிர்களை பலியிடுதல்
  • செருப்பு, முறம், துடைப்பதால் அடித்துக் கொள்ளுதல்
  • சேத்தாண்டி வேடமிடுதல்
  • தங்க கவசம் அணிவித்தல்
  • தங்கத்தேர் இழுத்தல்
  • தலையில் தேங்காய் உடைத்தல்
  • தாலி கட்டிக் கொள்ளுதல் - திருநங்கையர், பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொள்ளுதல் [2]
  • இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்வித்தல்
  • தீச்சட்டி எடுத்தல்
  • தீபந்ததால் தாக்கிக் கொள்ளுதல்
  • துலாபாரம் செலுத்துதல்
  • தேர் இழுத்தல்
  • தொட்டில் கட்டுதல் - குழந்தை வரம் வேண்டி பால் மரங்களில் தொட்டில் கட்டுதல்.
  • நரபலி தருதல் - மனிதர்களை பலி தருதல்.
  • நவகண்டம் செலுத்துதல்
  • நாடகம் நடத்துதல்
  • பலியிடுதல் - ஆடு மாடு கோழி போன்ற உயிர்களை வெட்டி பலியிடுதல். சில இடங்களில் பன்றி போன்ற விலங்குகளிலும் பலியிடப்படுகின்றன.
  • பாடை காவடி
  • பாதயாத்திரை
  • பாம்பு காவடி
  • பால்குடம் எடுத்தல்
  • பூக்குழி இறங்குதல்
  • பூட்டு போடுதல் [3]
  • பெண் வேடமிடுதல்
  • மடிப்பிச்சை ஏந்துதல்
  • மண்பொம்மை செலுத்துதல் - மண்குதிரை, கன்றுடன் கூடிய பசு போன்ற மண்பொம்மைகளை கோயிலில் வைத்தல்
  • மல் துணி வாங்கிப் போடுதல்
  • மார்பில் கத்தி போடுதல்
  • மாவிளக்கு இடுதல்
  • மாவிளக்கு எடுத்தல்
  • முள் படுக்கை
  • முளைப்பாரி எடுத்தல்
  • மொட்டையடித்தல்
  • வடை மாலை சாற்றுதல்
  • வண்ணக் காகித மாலை போடுதல்,
  • வயிற்றில் கரகத்தை வைத்துக் கொண்டு கோவிலை வலம் வருதல்
  • வானம் விடுதல்
  • விசமுள்ள உயிரினங்களின் உருவங்களை உடைத்தல் [4]
  • வெண்ணெய் காப்பு செய்தல்
  • வெத்தலை மாலை அணிவித்தல்
  • வெறும் கையால் அப்பம் சுடுதல்
  • வெறும் கையால் வடை சுடுதல்
  • வேல் வாங்கி செலுத்துதல் - வேல், அரிவாள் போன்ற ஆயுதங்களை கோயிலுக்கு அளித்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "வீச்சு கருப்பணசாமி கோயிலில் திருவிழா ; அரிவாள் நேர்த்திக்கடன் வழிபாடு". Dinamalar.
  2. https://m.dinamalar.com/detail.php?id=3310997
  3. "பிரச்சினைக்குப் பூட்டு…". இந்து தமிழ் திசை.
  4. "புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவிலில் வினோத வழிபாடு: பாம்பு, தேள் உருவ பொம்மையை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்". Daily Thanthi. 25 ஏப்ரல் 2022. {{cite web}}: Check date values in: |date= (help)