இந்திய கூன்வாள் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pomatorhinus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
இந்திய கூன்வாள் சிலம்பன்
Calls
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pomatorhinus
இனம்:
இருசொற் பெயரீடு
Pomatorhinus horsfieldii
Sykes, 1832
Subspecies

P. h. obscurus ஹியூம், 1872
P. h. horsfieldii Sykes, 1832
P. h. travancoreensis Harington, 1914
P. h. maderaspatensis Whistler, 1936

இந்திய கூன்வாள் சிலம்பன் ( Indian scimitar babbler (Pomatorhinus horsfieldii) என்பது ஒரு பழைய உலக சிலம்பன் ஆகும். இது தீபகற்ப இந்தியாவில் பல்வேறு வன வாழ்விடங்களில் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் அவற்றின் தனித்துவமான அழைப்புகளால் கண்டறியப்படுகின்றன. இதில் இணைப் பறவைகளின் எதிரெதிர்ப்பாடல்களும் அடங்கும். அடர்த்தியானயான தாவரங்களின் வழியாக இரை தேடுவதால் இவற்றை பெரும்பாலும் பார்ப்பது கடினம். நீண்ட வளைந்த மஞ்சள், கூன்வாள் வடிவ அலகுகள் இவற்றின் பெயருக்குக் காரணமாயிற்று. இது கடந்த காலங்களில் இமயமலையில் காணப்படும் வெள்ளைப் புருவ கூன்வாள் சிலம்பனின் கிளையினமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது தீபகற்ப இந்திய இனம் மற்றும் இலங்கை கூன்வாள் சிலம்பன் ( பொமடோரினஸ் மெலனுரஸ் ) என இரண்டு இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

விளக்கம்[தொகு]

இந்தியாவிலுள்ள தண்டேலி புலிகள் காப்பகத்தில் ஒரு இந்திய கூன்வாள் சிலம்பன்

இப்பறவை 22 செ. மீ. நீளமுள்ளது. இதன் மேல் அலகின் துவக்கத்தில் கருமை நிறத்தில் இருக்கும். இந்தப் பறவையின் மிகவும் தனித்துவமான அம்சம், நீண்ட கீழ்-வளைந்த மஞ்சள் நிற அலகு ஆகும். இப்பறவை கருத்தைக் கவர்கின்ற தலை வடிவத்தைக் கொண்டுள்ளது, கண்ணின் வழியாக செல்லும் அகன்ற கருப்பு பட்டைக்கு மேலே நீண்ட வெள்ளைப் புருவும் தெளிவாகப் பெரியதாக இருக்கும். மார்பும் வயிறும் வெள்ளையாகவும், மார்பகம் மேல்புறத்தில் அடர் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும், கீழ்புறத்தில் அடர் சாம்பல் முதல் கருப்பு வரையிலும் என இதன் உடல் நிறங்கள் வேறுபடுகின்றன. இதன் வால் அகன்றதாகவும், நீளமானதாகவும் இருக்கும். இவை குறுகிய, வட்டமான இறக்கைகளைக் கொண்டுள்ளதால் பறப்பதில் ஆற்றல் குறைந்தவை என்பதால் திறந்த வெளியில் பறப்பதை அரிதாகவே காண இயலும்.

இந்திய கூன்வாள் சிலம்பன்கள் நீண்ட கீழ்-வளைந்த மஞ்சள் நிற அலகைக் கொண்டுள்ளன, அவை இலை குப்பைகள் மற்றும் மரப்பட்டைகளில் உள்ள பழுபூச்சிகள் மற்றும் பழங்களைத் தேட ஏற்றவையாக உள்ளது. இவை அடர்ந்த தாவரங்களை விரும்பி இருப்பதால் இவற்றைக் கவனிப்பது கடினமான ஒன்று. மற்ற பல சிலம்பன்களைப் போலவே இவையும் சத்தமில்லாத பறவைகள், ஆனால் கசமுசக்கும் மென் குரலில் வோஓட்-ஹோ-ஹோ எனக் கத்தி ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் குணாதிசயங்கள் இந்த பறவைகள் கொண்டுள்ளன. ஆண் பறவையின் குரலுக்கு பெண் பறவை பதில் குரல் கொடுக்கும். லூசிஸ்டிக் என்றும் பகுதியளவு நிறமி மாற்றம் இதில் சில பறவைகளின் இறகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2][3]

பரவல்[தொகு]

தீபகற்ப இந்தியாவில் உள்ள ஒரே கூன்வாள் சிலம்பன் இதுவாகும். இந்த இனம் ராஜஸ்தான் மற்றும் ஒரிசா இடையிலான நேர் கோட்டிற்கு தெற்கே காணப்படுகின்றன.[4]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

இந்திய கூன்வாள் சிலம்பன் ஒரு பகுதியிலேயே வசிக்கக்கூடிய ( வலசை போவதில்லை) பறவை. இதன் வாழ்விடம் சதவெளு முதல் தலைச் சிகரங்கள் வரை பசுங்காடுகள், இலையுதிர் காடுகள், குறிஞ்சி,லாண்டானா புதர்கள், மூங்கிற் காடுகள் ஆகிய பகுதிகளைச் சார்ந்து திரியக்கூடியது. இவை தரையில் அல்லது தாவரங்களில் உள்ள பூச்சிகளை உண்கின்றன. புதர்களின் அடியில் காய்ந்து உலர்ந்த இலைகளைத் திருப்பிக் கலைத்துப் புழுபூச்சிகளைப் பிடித்து உண்ணும்.[5] இவை சில சமயங்களில் வேறு சில பறவைகளோடு சேர்ந்து இரை தேடுவதும் உண்டு.[6]

இவை திசம்பர் முதல் மே வரை இனப்பெருக்கம் செய்கின்றன. பழுத்த இலைகளையும், பாசிகளையும் கொண்டு பந்து வடிவமாக கூடு கட்டி மெல்லிய புல்லாலும், வேராலும் மெத்தென ஆக்ககும். கூட்டை சாய்வான தரையில் புதர் ஓரமாக அமைக்கும். இவை வழக்கமாக மூன்று முட்டைகளை இடும் (ஆனால் இரண்டு முதல் நான்கு வரை மாறுபாடு இருக்கும்). முட்டை தூய வெள்ளை நிறத்தில் இருக்கும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Pomatorhinus horsfieldii". IUCN Red List of Threatened Species 2018: e.T22735503A132186037. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22735503A132186037.en. https://www.iucnredlist.org/species/22735503/132186037. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Baker, HR (1922). "Occurrence on the Nilgiris of a partial albino of the southern Indian Scimitar Babbler Pomatorhinus horsfieldi travancoriensis (Harington). FBI No. 120.". J. Bombay Nat. Hist. Soc. 28 (4): 1135. https://biodiversitylibrary.org/page/52170797. 
  3. Ali, S; S D Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. 6 (2nd ). Oxford University Press. பக். 132–138. 
  4. Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide.. Smithsonian Institution and Lynx Edicions. Vol 2.. பக். 428. Rasmussen, PC & JC Anderton (2005).
  5. 5.0 5.1 Whistler, Hugh (1928). Popular Handbook of Indian Birds.. பக். 47–48. https://archive.org/details/in.ernet.dli.2015.350736. 
  6. Kinloch, AP (1922). "Habits of the Southern Scimitar Babbler Pomatorhinus horsfieldi travancorensis.". J. Bombay Nat. Hist. Soc. 28 (2): 545. https://biodiversitylibrary.org/page/30113135. 

வெளி இணைப்புகள்[தொகு]