இந்தியக் கருப்பு பட்டாணிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் கருப்பு பட்டாணிக் குருவி
இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கியில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பட்டாணிக் குருவி
பேரினம்:
மாக்லோலோபசு
இனம்:
M. aplonotus
இருசொற் பெயரீடு
Machlolophus aplonotus
(பிளைத், 1847)
வேறு பெயர்கள்

பரசு அப்லோனோடசு

இந்தியக் கருப்பு பட்டாணிக் குருவி (Indian black-lored tit) அல்லது இந்திய மஞ்சள் பட்டாணிக் குருவி[1] (மாக்லோலோபசு அப்லோனோடசு) என்பது பாரிடே குடும்பத்தில் மாக்லோலோபசு பேரினத்தினைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது மஞ்சள் கன்னம் கொண்ட பட்டாணிக் குருவியின் நெருங்கிய இனமாகவும் இருக்கலாம். மேலும் இவை மஞ்சள் பட்டாணிக் குருவியுடனும் நெருங்கிய தொடர்புடையது. இந்த மூன்று பட்டாணிக்குருவிகளும் கிட்டத்தட்ட ஒரு தனித்துவமான பரம்பரையை உருவாக்குகின்றன. இது உருவவியல் மற்றும் இழைமணிகளின் டி. ஆக்சி-ரைபோநியூக்ளிக் காடியின் சைட்டோக்ரோம் பி வரிசை பகுப்பாய்வு[2] மூலம் சான்றளிக்கப்படுகிறது. மாக்லோலோபசு என்ற துணைப்பேரினப்பெயர் இவற்றுக்குப் பொருந்தலாம்.

இந்தச் சிற்றினம் இந்தியத் துணைக் கண்டத்தில் வசித்து இனப்பெருக்கம் செய்யக்கூடியது ஆகும். இது திறந்த வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் ஒரு பொதுவான பறவை. ஆனால் இலங்கையில் இது காணப்படவில்லை. இது ஒரு சுறுசுறுப்பான பறவையாகும். இது பறக்கும் போதே பூச்சிகள் மற்றும் சிலந்திகளை இரையாக எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் பழங்களையும் உண்ணுகிறது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இவற்றைக் காணலாம். இவை 13 செ.மீ. உடல் நீளத்தினைக் கொண்டது. அடிப்பகுதியில் ஒரு பரந்த கருப்பு கோட்டினைக் கொண்டது. மேல் பகுதிகள் ஆலிவ்-பச்சை நிறத்தில் உள்ளன. இது இரண்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிற இறக்கைகளையும், வெள்ளை வெளிப்புற வால் இறகுகளையும் கொண்டுள்ளது.

பெண் பறவைகள் மற்றும் இளம் பறவைகள் ஆண்களை விட மந்த நிறத்திலானது. இந்தப் பட்டாணிக் குருவியின் வரம்பில் வடக்கிலிருந்து தெற்கே கீழ்ப் பகுதியின் நிறம் மந்தமாகிக் காணப்படும்.

இது மற்ற பட்டாணிக் குருவிகளைப் போலவே, குரல் எழுப்பும் பறவை ஆகும். மேலும் பலவிதமான அழைப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் மிகவும் பரிச்சயமான ஒன்று சி-சி ஆகும். இந்த ஓசை சில நேரங்களில் சிட்டா போன்ற சி-சி-சி ஆகும்.

மரங்கொத்தி அல்லது குக்குறுவான் கூடுகளை இவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்தச் சிற்றினம் துளையமைத்தோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தளங்களையோ பயன்படுத்தும். இது ஒரு நேரத்தில் 3 முதல் 5 வெள்ளை நிற முட்டைகளை இடும். இம்முட்டையில் சிவப்புகள் காணப்படும்.

இந்தியக் கருப்பு பட்டாணிக் குருவி முன்பு பரசு பேரினத்தில் உள்ள பல சிற்றினங்களில் ஒன்றாகும். ஆனால் 2013-இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு தொகுதி வரலாற்றுக்குரிய பகுப்பாய்வு புதிய பேரினத்தின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தனித்துவமான உயிரினக் கிளையுடன் கூடிய பேரினமான மாக்லோலோபசுவிற்கு மாற்றப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Grimmett R., Inskipp C., Inskipp T. Birds of the Indian Subcontinent. Oxford University Press; 2011; 528 pp.
  2. Gill, Frank B.; Slikas, Beth; Sheldon, Frederick H. (2005). "Phylogeny of titmice (Paridae): II. Species relationships based on sequences of the mitochondrial cytochrome-b gene". Auk. 122 (1): 121–143. doi:10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2.
  3. Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453. 
  4. Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.