ஆஸ்கார் வைல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஸ்கார் வைல்டு
எழுதிய காலம் விக்டோரியாக் காலம்

ஆஸ்கார் வைல்டு (16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். இவரது சில நாடகங்கள் இன்றும் அரங்கேறி வருகின்றன. இவர் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான பல வழக்குகளால் இவர் பெரும் வீழ்ச்சிக்கு உட்பட்டதுடன், பிற ஆண்களுடன் "நாகரிகமற்றமுறையில்" நடந்துகொண்டமைக்காக இரண்டு ஆண்டுக் கடூழியச் சிறைத் தண்டனையும் பெற்றார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டீப்பேக்கு (Dieppe) சென்றுவிட்டார். அவர் பின்னர் பிரித்தானியாவுக்குத் திரும்பவே இல்லை.

[தொகு] பிறப்பும், இளமைக் காலமும்

இவர் டப்ளினில், 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த ஆங்கில-ஐரியக் குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சர். வில்லியம் வைல்ட், தாயார் ஜேன் பிரான்சிஸ்கா வைல்ட். ஜேன் ஒரு வெற்றிகரமான எழுத்தாளர், இவர் 1848 ஆம் ஆண்டில் புரட்சிகர இயக்கமாக விளங்கிய இளம் அயர்லாந்தின் கவிஞராகவும் விளங்கியதுடன் வாழ்நாள் முழுதும் ஐரியத் தேசியவாதியாகவும் திகழ்ந்தார். வில்லியம் வைல்ட், புகழ் பெற்ற காது, கண் மருத்துவராக விளங்கியதுடன், அவரது மருத்துவ சேவைக்காக 1864 இல் பிரபுப் பட்டமும் பெற்றுக்கொண்டார். வில்லியம் தொல்லியல், நாட்டாரியல் தொடர்பிலும் நூல்கள் எழுதியுள்ளார். வில்லியம் ஒரு பெயர்பெற்ற வள்ளலும் ஆவார்.

ஆஸ்கார், அவருக்கு ஒன்பது வயதாகும் வரை வீட்டிலேயே கல்வி கற்றார். பின்னர் பதினாறி வயது வரை என்னிஸ்கிலன், ஃபெர்மனாக் என்னும் இடத்திலுள்ள போர்ட்டோரா ராயல் பள்ளியில் கல்வி கற்றார். போர்ட்டோராவில் படிப்பை முடித்துக் கொண்டதும் டப்ளினில் உள்ள டிரினிட்டிக் கல்லூரியில் 1871 ஆம் ஆண்டிலிருந்து 1874 ஆம் ஆண்டு வரை இலக்கியம் பயின்றார். அங்கே ஆஸ்கார் ஒரு தலை சிறந்த மாணவனாக விளங்கினார். அவருக்கு பேர்க்லே தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் மக்தலன் கல்லூரியில் படிப்பதற்காக ஆஸ்காருக்குப் புலமைப்பரிசும் கிடைத்தது. அங்கே 1874 தொடக்கம் 1878 வரை பயின்றார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்