ஆவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆவிட்

"ஆவிட்"டைக் கற்பனையில் வரைந்த படம். நூரம்பர்க் குரோனிக்கிள், 1493ன் இல் இடம்பெற்றது.
பிறப்பு மார்ச் 20, கிமு 43
சுல்மோ, ரோமக் குடியரசு
இறப்பு 17 AD
டோமிஸ் (present Constanţa), சித்தியா மைனர், கிரேக்கக் குடியேற்றம்
தொழில் கவிஞர்

ஆவிட் என அறியப்படும் பப்ளியஸ் ஆவிடஸ் நாசோ (மார்ச் 20, கிமு 43 – கிபி 17) ஒரு ரோமக் கவிஞர் ஆவார். இவர் காதல், கைவிடப்பட்ட பெண்கள், தொன்மம் சார்ந்த உருமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார். மரபு வழியாக வேர்ஜில், ஹோராஸ் ஆகியோருடன், இலத்தீன் இலக்கியத்தின் பெரும் புலவர்களுள் ஒருவராக ஆவிட் கருதப்படுகிறார். பிந்திய பழங்காலத்திலும், மத்திய காலத்திலும், இவரது கவிதைகளைப் போல எழுதும் வழக்கம் பெருமளவில் நிலவியதுடன், இக்கவிதைகள், ஐரோப்பியக் கலையிலும், இலக்கியத்திலும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆவிட்&oldid=1065537" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்