ஆர். கே. சிங் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். கே. சிங் பட்டேல்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்பைரோன் பிரசாத் மிசுரா
தொகுதிபாந்தா
பதவியில்
மார்ச் 2017 – மே 2019
முன்னையவர்சந்திரா பான்
தொகுதிமாணிக்பூர், (உத்தரப் பிரதேசம்)
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்சியாம் சரண் குப்தா
பின்னவர்பைரோன் பிரசாத் மிசுரா
தொகுதிபாந்தா, (உத்தரப் பிரதேசம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூலை 1959 (1959-07-03) (அகவை 64)[1]
பாலாபூர், கால்சா, சித்திரக்கூட மாவட்டம்[1]
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி[1]
துணைவர்சாந்தி தேவி பட்டேல்[1]
பிள்ளைகள்03 மகன்கள் & 01 மகள் .[1]
வாழிடம்(s)சித்திரக்கூட மாவட்டம், உத்தரப் பிரதேசம் & புது தில்லி.[1]
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசம்
வேலைவிவசாயம் & அரசியல்வாதி
செயற்குழுசுகாதாரம் மற்றும் குடும்ப நல உறுப்பினர்)
தொடருந்து கூட்டமைப்பு உறுப்பினர்

ஆர். கே. சிங் பட்டேல் (R. K. Singh Patel) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரபிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் மாணிக்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பட்டேல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்னர் இவர் இந்தியாவின் 15வது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவர் இந்தியாவின் சித்ரக்கூட-பாந்தா மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முன்னதாக இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் பாந்தா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கல்வி மற்றும் பின்னணி[தொகு]

பட்டேல் உத்தரபிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். அரசியலில் சேருவதற்கு முன்பு தொழிலில் விவசாயம் செய்தவர்.

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி
01 1996 2007 உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (இரண்டு முறை)
02 1996 1997 மாநில அமைச்சர், உத்தரப்பிரதேச அரசு
03 2002 2003 மாநில அமைச்சர், உத்தரபிரதேச அரசு
04 2009 2014 15வது மக்களவை உறுப்பினர்
05 2009 2014 உறுப்பினர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் குழு
06 2010 2014 உறுப்பினர், ரயில்வே மாநாட்டு குழு
08 2019 தேதி 17வது மக்களவை உறுப்பினர்

மேலும் பார்க்கவும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Lok Sabha Profile". Govt of India. 2009 இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201155610/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4331. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._சிங்_பட்டேல்&oldid=3926443" இலிருந்து மீள்விக்கப்பட்டது