ஆசியப் பாலைவனச் சிட்டுக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசியப் பாலைவனச் சிட்டுக்குருவி
ஆசியப் பாலைவனச் சிட்டுக்குருவியின் படம் (ஆண்)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. zarudnyi
இருசொற் பெயரீடு
Passer zarudnyi
பிலிசுகே, 1896
ஆசியப் பாலைவனச் சிட்டுக்குருவி மற்றும் பாலைவனச் சிட்டுக்குருவியின் பரம்பல்

சருண்ட்னி சிட்டுக்குருவி (Zarudny's sparrow)(பசார் சருண்ட்னி), ஆசியப் பாலைவனச் சிட்டுக்குருவி என்றும் அழைக்கப்படும் சிட்டுக்குருவியாகும்.

விளக்கம்[தொகு]

சருண்ட்னி சிட்டுக்குருவி, உசுபெகிசுதான், துர்க்மெனிசுதான் மற்றும் முன்னர் ஈரானில் காணப்படும் பசாரிடே என்ற குருவி குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும்.[1] இந்த சிற்றினம் வரலாற்று ரீதியாகப் பாலைவன சிட்டுக்குருவியின் துணையினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பரவல் ஆப்பிரிக்காவிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சிற்றினங்கள் ஆப்பிரிக்கச் சிற்றினங்களுடன் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. வயது வந்த ஆண் மற்றும் பெண்களில் மிகவும் ஒத்த இறகுகள் உட்பட, இந்த சிற்றினம் தனித்தனியாகக் கருதப்படும் அளவுக்கு வேறுபட்டது. மேலும் ஆப்பிரிக்கப் பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில்லாதது.[2] இதன் விளைவாக, சருண்ட்னியின் சிட்டுக்குருவி ஒரு தனி சிற்றினமாகப் பன்னாட்டுப் பறவை வாழ்க்கை,[1] பன்னாட்டு பறவையியல் மாநாட்டின் உலகப் பறவை பட்டியல்,[3] மற்றும் உலகப் பறவைகளின் உசாநூல் ஆகியவற்றால் கருதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 BirdLife International (2019). "Passer zarudnyi". IUCN Red List of Threatened Species 2019: e.T22736027A152064683. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22736027A152064683.en. https://www.iucnredlist.org/species/22736027/152064683. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Kirwan, Guy M.; Schweitzer, Manuel; Ayé, Raffael; Grieve, Andrew (2009). "Taxonomy, identification and status of Desert Sparrows". Dutch Birding 31: 139–158. http://www.freewebs.com/guykirwan/Kirwan_et_al_DB31%283%29139-158_2009.pdf. 
  3. Donsker, D. (ed.). "Updates: Species 3.1-3.5". IOC World Bird List. International Ornithological Congress. பார்க்கப்பட்ட நாள் 22 September 2017. {{cite web}}: Missing |editor1= (help)