ஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் இளைஞர் அறிவியல் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ.ப.பொ.கூ. இளைஞர் அறிவியல் விழா
APEC Youth Science Festival
வகைஅறிவியல் கண்காட்சி
மிக அண்மைய4 ஆவது ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் இளைஞர் அறிவியல் விழா  : இயற்கையிலிருந்து தொழில் நுட்பம்
ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பு

ஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் இளைஞர் அறிவியல் விழா (APEC Youth Science Festival) என்பது ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பு நடத்தும் ஓர் அறிவியல் கண்காட்சி ஆகும். அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள 15 முதல் 18 வயதுடைய இளையவர்களுக்கு இவ்விழா நடத்தப்படுகிறது. கற்றலுக்கான கலாச்சார தடைகளை உடைத்தல் இவ்விழா நடத்தப்படுவதன் நோக்கமாகும். முதன்முதலாக இவ்விழா 1998 ஆம் ஆண்டு சியோல் நகரில் நடைபெற்றது.

1996 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று நடைபெற்ற இரண்டாவது ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநாட்டில் கொரியா குடியரசின் தலைவர் ஆ.ப. பொ. கூ. இளைஞர் அறிவியல் விழாவை நடத்த வேண்டுமென முன்மொழிந்தார்.

விழாக்கள்[தொகு]

ஆண்டு இடம் பெயர்
1998 சியோல், தென் கொரியா சியோலிலிருந்து அஞ்சல் அட்டைகள்[1]
2000 சிங்கப்பூர் சிங்கப்பூரில் ஏழு நாட்கள் [2]
2004 பீகிங், சீனா அறிவியல், இளையோரும் எதிர்காலமும் [3]
2011 பதும் தானி , தாய்லாந்து இயற்கையிலிருந்து தொழில் நுட்பம்[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Postcards from Seoul". Australian Broadcasting Commission.
  2. "Seven Days in Singapore - APEC Youth Science Festival". Australian Broadcasting Commission.
  3. "APEC Youth Science Festival in Beijing, Brings Together Leading Minds of the Future". Asia-Pacific Economic Cooperation.
  4. "4th APEC Youth Science Festival - August 2011, Thailand". Asia-Pacific Economic Cooperation. Archived from the original on 2016-06-01.
  5. "4th APEC Youth Science Festival". Canada-Wide Science Fair.
  6. "The 4th APEC Youth Science Festival "from Nature to Technology"". National Science and Technology Development Agency (Thailand). Archived from the original on 2016-06-01. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.

புற இணைப்புகள்[தொகு]