ஆங்ஸ்ட்ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆண்டர்சு யோனாஸ் ஆங்ஸ்டிராம்
Anders Jonas Ångström - 001.png
ஆண்டர்சு யோனாஸ் ஆங்ஸ்டிராம்
பிறப்பு ஆகத்து 13, 1814(1814-08-13)
பிறப்பிடம் சுவீடன்
இறப்பு சூன் 21 1874 (அகவை 59)
இறப்பிடம் சுவீடன்
குடியுரிமை சுவீடன்
துறை இயற்பியலாளர்
கல்வி கற்ற இடங்கள் உப்சாலா பல்கலைக்கழகம்
அறியப்படுவது நிறமாலையியல்
விருதுகள் ரம்போர்டு பதக்கம்

ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (Anders Jonas Ångström, 1814 - 1874 ), ஒரு சுவீடன் நாட்டு இயற்பியலாளர். உப்சாலா பல்கலைக்கழகத்தில் நிறமாலையியல் துறையில் முன்னோடியாக இருந்தவர். “வெப்பப்படுத்தப்பட்ட ஒரு வளிமம் ( gas ) எந்த அலைநீளங்களில் ஒளியை உமிழுமோ அதே அலைநீளங்களை குறைவான வெப்பநிலையில் உள்ளபோது அவ்வளிமம் உட்கவரும்” என்ற உண்மையை 1855 -ஆம் ஆண்டு கண்டறிந்தார்; இதை நான்காண்டுகளுக்குப் பின்னர் கீர்காஃப் ( Kirchoff ) ஆய்வுகளின் மூலம் உறுதி செய்தார். 1861- இல் ப்ரான்ஹோபர் வரிகளை ஆய்வு செய்ததில் சூரியனில் ஹைட்ரசன் உள்ளதை உறுதி செய்தார். ஆங்ஸ்ட்ராம் தன் அளவிடுதல்களை 10 -10 மீ அளவுகளில் செய்தார்; பின்னாளிலே, அவரை கவுரவப்படுத்தும் விதமாக 10 -10 மீ = 1 Å என்ற அலகு ஏற்படுத்தப்பட்டது. துருவ ஒளியின் நிறமாலையியல் பற்றியும் தன் ஆய்வுகளைச் செய்துள்ளார் ஆங்ஸ்டிராம். [1]

மேற்கோள்கள் [தொகு]

  1. daviddarling [1]
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்ஸ்ட்ராம்&oldid=1355113" இருந்து மீள்விக்கப்பட்டது