ஆக்சமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்சமேட்டு (Oxamate) ஆக்சமிக் அமிலத்திலிருந்து உருவாக்கப்படும் ஓர் உப்பாகும்.[1] C2H2NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இவ்வுப்பு விவரிக்கப்படுகிறது. பைருவேட்டின் சமகொள்ளிட வடிவமாகக் கருதப்படும் ஆக்சமேட்டு லாக்டேட்டு டி ஐதரனேசு என்ற நொதிக்கு ஒரு போட்டித் தடுப்பானாகும். மேலும் ஆக்சமேட்டு என்பது சாத்தியமான ஒரு பைருவேட்டு ஒப்புமையாகும்.[2] லாக்டேட்டு டீ ஐதரசனேசைத் தடுப்பதன் மூலம் லாக்டேட்டு உற்பத்தியை நிறுத்தும் திறனை ஆக்சமேட்டு கொண்டுள்ளது. மேலும் பைருவேட்டு லாக்டேட்டாக மாறும் செயல்முறையை இது திறம்பட நிறுத்துகிறது.[3]

ஆக்சமேட்டையும் [லாக்டேட் டீ ஐதரசனேசு தடுப்பான்) நீரிழிவு நோய் எதிர்ப்பு முகவரான பீன்போர்மினையும் (பீனெத்தில்பைகுவானைடு) ஒன்றாக இணைப்பதற்காக இரண்டும் சோதிக்கப்பட்டன. மேலும் இந்த இணைப்புச் சேர்மத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது.[4] பீன்போர்மின் தனியாக நிர்வகிக்கப்படும் போது லாக்டிக் அமிலத்தன்மை அதிக அளவில் உள்ளது. பைருவேட்டை லாக்டேட்டாக மாற்றுவதைத் தடுக்கும் ஆக்சமேட்டின் உள்ளார்ந்த திறன் காரணமாக, பீன்போர்மினின் பக்க விளைவுகளை எதித்து சமநிலைப்படுத்த ஆக்சமேட்டைப் பயன்படுத்தலாம்.[4]

சிட்ரிக் அமில சுழற்சியில் ஒரு முக்கியமான இடைநிலையாக விளங்கும் ஆக்சலோ அசிட்டேட்டுடன் சேர்ந்து ஆக்சமேட் தடுக்கும் பணிகளைச் செய்கிறது. கார்பாக்சைல் டிரான்சுபெரேசு தளத்தில் ஆக்சமேட்டு போட்டியிட்டு பிணைகிறது. பைருவேட்டு கார்பாக்சிலேசால் ஆக்சலோ அசிட்டேட்டு கார்பாக்சிலேற்ற நீக்க வினையை மாற்றியமைக்கிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சமேட்டு&oldid=3655028" இலிருந்து மீள்விக்கப்பட்டது