அலெக்சாந்தர் தாமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாந்தர் தாமசு
Alexander Thomas
நீதிபதி, கேரள உயர் நீதிமன்றம்
பதவியில்
23 சனவரி 2014 – 03 செப்டம்பர் 2023
{{{1}}}
பரிந்துரைப்புப. சதாசிவம்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 செப்டம்பர் 1961 (1961-09-04) (அகவை 62)
முன்னாள் கல்லூரிசட்டப் பள்ளி, தில்லி பல்கலைக்கழகம்
இணையத்தளம்High Court of Kerala

அலெக்சாந்தர் தாமசு (Alexander Thomas) என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய இந்திய நீதிபதி ஆவார். கேரளாவின் உயர்நீதிமன்றம் இந்திய மாநிலமான கேரளா மற்றும் லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளத்தில், கொச்சியில் உள்ளது.[1][2]

கல்வி மற்றும் தொழில்[தொகு]

நீதிபதி தாமசு திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் பட்டம் பெற்றார். கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட புலத்தில் சட்டப் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பயிற்சியினை 1988-இல் தொடங்கினார். இவர் 23 சனவரி 2014 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 10 மார்ச்சு 2016 முதல் நிரந்தர நீதிபதியாகப் பணியாற்றினார்.[1] இவர் 13 ஜூலை 2023 அன்று தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 21 சூலை 2023 வரை தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.[3][4] நீதிபதி தாமசு 03 செப்டம்பர் 2023 அன்று ஓய்வு பெற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Official". பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
  2. "6 more judges for Kerala High Court". பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
  3. "Alexander Thomas appointed acting Chief Justice of Kerala HC". https://www.thehindu.com/news/cities/Kochi/alexander-thomas-appointed-acting-chief-justice-of-kerala-hc/article67076324.ece. 
  4. "Justice Alexander Thomas appointed Acting Chief Justice of Kerala High Court". https://www.barandbench.com/news/justice-alexander-thomas-appointed-acting-chief-justice-kerala-high-court. 
  5. "Retiring judge seeks expansion of HC". https://timesofindia.indiatimes.com/city/kochi/retiring-judge-seeks-expansion-of-hc/articleshow/103098537.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்தர்_தாமசு&oldid=3806601" இலிருந்து மீள்விக்கப்பட்டது