அரபிரசாத் சாத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபிரசாத் சாத்திரி
பிறப்பு06 டிசம்பர் 1853
குல்னா, வங்காள மாகாணம்
இறப்பு17 நவம்பர் 1931
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
பணிகல்வியாளர், சமசுகிருத அறிஞர்

அரபிரசாத் சாத்திரி ( Hara Prasad Shastri ) (6 டிசம்பர் 1853 - 17 நவம்பர் 1931), அரபிரசாத் பட்டாச்சார்யா என்றும் அழைக்கப்படும் இவர், ஓர் இந்தியக் கல்வியாளரும், சமசுகிருத அறிஞரும், ஆவணக் காப்பாளரும் மற்றும் வங்காள இலக்கிய வரலாற்றாசிரியரும் ஆவார். வங்காள இலக்கியத்தின் ஆரம்பகால எடுத்துக்காட்டுகளான சர்யாபத்தைக் கண்டுபிடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அரபிரசாத் சாத்திரி வங்காளத்தின் குல்னா மாவட்டத்தில் உள்ள குமிரா கிராமத்தில் (தற்போது வங்காளதேசத்தில் உள்ளது) இன்றைய மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாவிலுள்ள நைகாட்டியில் இருந்து வந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். குடும்பப் பெயர் பட்டாச்சார்யா, ஒரு பொதுவான வங்காள பிராமணக் குடும்பப்பெயர்.

இவர், ஆரம்பத்தில் கிராமப் பள்ளியிலும், பின்னர் கொல்கத்தாவில் சமசுகிருதக் கல்லூரி மற்றும் மாநிலப் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் படித்தார். கொல்கத்தாவில் இருந்தபோது, இவர் தனது மூத்த சகோதரர் நந்தகுமார் நியாயசுஞ்சுவின் நண்பரான புகழ்பெற்ற வங்காள அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஈஸ்வர சந்திர வித்யாசாகருடன் தங்கியிருந்தார். [2] [3]

1871 இல் ஆரம்பக் கல்வி பெற்ற சாத்திரி 1873 இல் இளங்கலைப் பட்டமும், 1877 இல் சமசுகிருதத்தில் கௌரவப் பட்டமும் பெற்றார். பின்னர், முதுகலைப் பட்டம் பெற்றபோது இவருக்கு சாத்திரி என்ற பட்டம் வழங்கப்பட்டது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சாத்திரி பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் 1878 இல் இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பழமையான பள்ளிகளில் ஒன்றான அரே பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.[4][5]

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர் பல பதவிகளை வகித்துள்ளார். 1883ல் சமசுகிருதக் கல்லூரியில் பேராசிரியராக இருதுள்ளார். அதே நேரத்தில், இவர் வங்காள அரசாங்கத்தில் உதவி மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 1886 மற்றும் 1894 க்கு இடையில், சமசுகிருதக் கல்லூரியில் கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், வங்காள நூலகத்தின் நூலகராகவும் இருந்தார். 1895 இல் இவர் மாநிலக் கல்லூரியில் சமசுகிருத துறைக்கு தலைமை தாங்கினார்.

1898-99 ஆராய்ச்சியின் போது டாக்டர். செசில் பெண்டலுக்கு உதவினார். ராணா பிரதம மந்திரி பிர் ஷம்ஷர் ஜங் பகதூர் ரானாவின் தனியார் தர்பார் நூலகத்திலிருந்து தகவல்களைச் சேகரித்தார், மேலும் கையெழுத்துப் பிரதிகளின் மொத்தப் பதிவும் பின்னர் பனையின் பட்டியலாக வெளியிடப்பட்டது. நேபாளத்தின் தர்பார் நூலகத்தைச் சேர்ந்த இலை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காகிதக் கையெழுத்துப் பிரதிகள் (கல்கத்தா 1905) செசில் பெண்டலின் வரலாற்று அறிமுகத்துடன் ( கோபால் ராஜ் வம்சவலியின் விளக்கம் உட்பட). [6]

இவர் 1900 ஆம் ஆண்டில் சமசுகிருதக் கல்லூரியின் முதல்வரானார். 1908 ஆம் ஆண்டில் அதிலிருந்து வெளியேறினார் [7] பின்னர், அரசாங்கத்தின் தகவல் பணியகத்தில் சேர்ந்தார். மேலும், 1921 முதல் 1924 வரை, டாக்கா பல்கலைக்கழகத்தில் வங்காளம் மற்றும் சமசுகிருதத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்தார்.

சாத்திரி ஆசியச் சமூகத்தில் வெவ்வேறு பதவிகளை வகித்தார். மேலும் அதன் தலைவராக இரண்டு ஆண்டுகள் இருந்தார். இவர் பன்னிரண்டு ஆண்டுகள் பாங்கிய இலக்கிய அமைப்பின் தலைவராகவும், இலண்டனில் உள்ள அரச கழக ஆசியச் சமூகத்தின் கெளரவ உறுப்பினராகவும் இருந்தார்.

பணிகள்[தொகு]

"பாரத் மகிளா", என்ற இவரது முதல் ஆய்வுக் கட்டுரை இவர் மாணவராக இருந்தபோது பங்கதர்ஷன் இதழில் வெளியானது. பின்னர், சாத்திரி அந்த பருவகால இதழில் தொடர்ந்து பங்களிப்பவராக ஆனார். பின்னர் இது புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் வெளியிடப்பட்டது. வெவ்வேறு தலைப்புகளில் சுமார் முப்பது கட்டுரைகள் மற்றும் புதினக்களின் மதிப்புரைகளை எழுதியுள்ளார். பிரபல இந்தியவியலாளர் ராஜேந்திரலால் மித்ரா, இவரை முதன்முதலில் ஆராய்ச்சிக்கு அறிமுகப்படுத்தினார். இவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மித்ரா இவரிடம் நேபாளத்தின் சமசுகிருத பௌத்த இலக்கியம் எனும் பனியில் பணிபுரிய உதவி கேட்டார். அங்கு சாத்திரி சமசுகிருதத்தில் பண்டிதர்களால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் விளக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் ஆசியச் சமூகத்தில் மித்ராவின் உதவியாளராகவும் இருந்தார். மேலும் மித்ராவின் மரணத்திற்குப் பிறகு சமசுகிருத கையெழுத்துப் பிரதிகளைத் தேடுவதற்கான இயக்கங்களின் இயக்குநரானார். தொகுதி X இல் தொடங்கும் சமசுகிருத எம்எஸ்எஸ் அறிவிப்புகளில் தனது பணியைத் தொடர்ந்தார்.[8] [9]

ஆசியச் சமூகத்தின் தோராயமாக பத்தாயிரம் கையெழுத்துப் பிரதிகளை வேறு சிலரின் உதவியுடன் தயாரிப்பதில் சாத்திரி முக்கியப் பங்காற்றினார். பட்டியலின் நீண்ட அறிமுகத்தில் சமசுகிருத இலக்கிய வரலாறு பற்றிய விலைமதிப்பற்ற தகவல்கள் உள்ளன.

சாத்திரி படிப்படியாக பழைய வங்காள கையெழுத்துப் பிரதிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். மேலும், நேபாளத்திற்கு பலமுறை சென்று வந்தார். அங்கு, 1907 இல், இவர் சர்யாபத் அல்லது சர்யகீதி என்ற கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்தார். கையெழுத்துப் பிரதி பற்றிய இவரது கடினமான ஆராய்ச்சி, வங்காள மொழியின் ஆரம்பகால ஆதாரமாக சர்யபதாவை நிறுவ வழிவகுத்தது. இந்த கண்டுபிடிப்பு பற்றி சாத்திரி 1916 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வங்காள மொழியில் எழுதப்பட்ட பௌத்த பாடல்கள் மற்றும் வசனங்கள்" என்ற தலைப்பில் எழுதினார்.[10]

நேபாளத்தில் உள்ள காட்மாண்டு நூலகத்தில் குப்த எழுத்துக்களில் எழுதப்பட்ட கந்த புராணத்தின் பழைய எழுத்தோலை கையெழுத்துப் பிரதியையும் கண்டுபிடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chowdhury, Satyajit (2012). "Shastri, Haraprasad". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Shastri,_Haraprasad. 
  2. Chowdhury, Satyajit (2012). "Shastri, Haraprasad". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Shastri,_Haraprasad. 
  3. Sansad Bangali Charitabhidhan (4th ). Sahitya Samsad. 1998.  (in வங்காள மொழி)
  4. Chowdhury, Satyajit (2012). "Shastri, Haraprasad". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Shastri,_Haraprasad. 
  5. Sansad Bangali Charitabhidhan (4th ). Sahitya Samsad. 1998.  (in வங்காள மொழி)
  6. Durbar Library (Nepal). A catalogue of palm-leaf & selected paper mss. belonging to the Durbar library, Nepal. Printed at the Baptist mission Press. 
  7. Official website of Sanskrit College பரணிடப்பட்டது 27 ஆகத்து 2013 at the வந்தவழி இயந்திரம், Principals of Sanskrit College
  8. Bhatacharyya, Ritwik. "Time-citations: Haraprasad Shastri and the 'Glorious Times'". Cerebration. http://www.cerebration.org/ritwikbhattacharyya.html. பார்த்த நாள்: 12 April 2008. 
  9. Li, Charles. "Kathmandu, Calcutta, Paris: the life of a tantric manuscript". Texts Surrounding Texts: Satellite Stanzas, Prefaces, and Colophons in South-Indian Manuscripts. https://tst.hypotheses.org/3191. பார்த்த நாள்: 6 March 2022. 
  10. S. D. (1987). "Charyapada (Bengali)". Encyclopaedia of Indian Literature 1. Sahitya Akademi. 646–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1803-8. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபிரசாத்_சாத்திரி&oldid=3825782" இலிருந்து மீள்விக்கப்பட்டது