அரபனஹள்ளி

ஆள்கூறுகள்: 14°48′N 75°59′E / 14.8°N 75.98°E / 14.8; 75.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபனஹள்ளி
நகரம்
அடைபெயர்(கள்): ಬೀಚಿ ನಾಡು
அரபனஹள்ளி is located in கருநாடகம்
அரபனஹள்ளி
அரபனஹள்ளி
கர்நாடகாவில் அமைவிடம்
அரபனஹள்ளி is located in இந்தியா
அரபனஹள்ளி
அரபனஹள்ளி
அரபனஹள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 14°48′N 75°59′E / 14.8°N 75.98°E / 14.8; 75.98
நாடு India
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்விஜயநகரம்
துணைக் கோட்டம்அரபனஹள்ளி
பெயர்ச்சூட்டுஅரபனஹள்ளி
அரசு
 • நிர்வாகம்அரபனஹள்ளி நகராட்சி நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்6.98 km2 (2.69 sq mi)
ஏற்றம்633 m (2,077 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்78,807
 • அடர்த்தி11,000/km2 (29,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்583 131
தொலைபேசிக் குறியீட்டு எண்08398
வாகனப் பதிவுகேஏ 35
Distance from ஹோஸ்பேட்80 கிலோமீட்டர்கள் (50 mi)
பெங்களூரிலிருந்து320 கிலோமீட்டர்கள் (200 mi)
இணையதளம்harapanahallitown.gov.in/frontpage

அரபனஹள்ளி (Harapanahalli) என்பது தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய & வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். புகழ்பெற்ற கன்னட நகைச்சுவையாளர் பீச்சி (ராயசம் பீமசேன ராவ்) இங்கு பிறந்தார். இந்த இடம் கல்யாண கர்நாடகாவை மத்திய கர்நாடகாவுடன் இணைக்கிறது. இது சென்னை மாகாணத்தின் முக்கிய வர்த்தக மற்றும் கல்வி மையமாக இருந்தது

நிலவியல்[தொகு]

அரபனஹள்ளி 14°48′N 75°59′E / 14.8°N 75.98°E / 14.8; 75.98இல் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 633 மீட்டர்கள் (2076 அடி) உயரத்தில் உள்ளது. அரபனஹள்ளி பழமையான வர்த்தகப் புறக்காவல் நிலையங்களில் ஒன்றாகும்.

மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[2] அரபனஹள்ளியின் மக்கள் தொகை 41,889 பேர் உள்ள்னர். மக்கள் தொகையில் ஆண்கள் 52%, பெண்கள் 48%. அர்பனஹள்ளியின் சராசரி கல்வியறிவு விகிதம் 55%. இது, தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண்களின் கல்வியறிவு 60%, பெண்களின் கல்வியறிவு 48%. மக்கள் தொகையில் 14% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

போக்குவரத்து[தொகு]

அரப்பனஹள்ளியில் தொடர் வண்டி நிலையம் 2014ல் திறக்கப்பட்டுள்ளது.

கல்வி[தொகு]

அரபனஹள்ளி நகரில் மாநில மற்றும் மத்திய கல்வி வாரியப் பள்ளிகளும் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. கல்லூரி அளவிலான கல்வி நிறுவனங்களில் மருந்தியல் கல்லூரி, அரசு இளநிலை பட்டயக் கல்லூரி, பல்துறை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவையும்அடங்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Harpanahalli
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபனஹள்ளி&oldid=3806271" இலிருந்து மீள்விக்கப்பட்டது