அரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு எனபது ஒரு நிலப்பரப்பில் அதன் எல்லைக்குள் வாழும் மனிதர்களின் சமூக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிற சட்டங்களை இயற்றவும் மற்றும் அதை நடைமுறைப்படுத்தவும் அச்சட்டங்களை மீறுகிறவர்களை தண்டிக்கவும் அதிகாரம் கொண்டுள்ள ஓர் அமைப்பு ஆகும். மனிதகுலத்தின் மிகப்பழைய மற்றும முதல் சமூக நிறுவனமாக அரசு கருதப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] நவீன அரசின் உறுப்புகள்
பொதுவாக ஒரு நவீன அரசில் நேரடி மற்றும் மறைமுக உறுப்புகளாக பின்வருவன அமைகின்றன.
[தொகு] நேரடி உறுப்புகள்
- சட்டம் இயற்றுகிற நிறுவனம்(எ.கா பாராளுமன்றம)
- சட்டத்தை நடைமுறைப்படுத்த நிறுவனம் (எ.கா. அமைச்சகங்கள்)
- சட்ட நடைமுறையாக்கத்தைக் கண்காணிக்கும் நிறுவனம் (எ.கா நீதிமன்றம்)
[தொகு] மறைமுக உறுப்புகள்
- பண்பாட்டு நிறுவனங்கள் (எ.கா சாதி, மதம்)
- அறிவுத்துறை நிறுவனங்கள் (எ.கா கல்வி)
- பொருளியல் நிறுவனங்கள் ( எ.கா. பணம்)
[தொகு] வகைகள்
பல வகை அரசுகள் புழக்கத்தில் உள்ளன
ஒர் அரசு உருவாக முக்கியமான 4 அம்சங்கள் - 1) நிலம் அல்லது ஆள்புல எல்லை 2) மக்கள் 3) இறைமை 4 அரசாங்கம் 5) சர்வதேச அங்கீகாரம்