பேச்சு:அரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

அரசு என்பதன் கூறு தான் அரசாங்கம். எனவே, அரசு வேறு அரசாங்கம் வேறு. அதனால் அரசாங்கத்துக்கு ஒரு தனிப்பக்கம் ஏற்படுத்தல் வேன்டும். ஏனெனில் அரசாங்கம் என்பதை தனியே நோக்கின் அது ஒரு பெரும் பரப்பாகும்.-−முன்நிற்கும் கருத்து 175.157.137.225 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம், ஆங்கிலத்தில் அரசு, அரசாங்கம் என்பவற்றை எவ்வாறு வேறுபடுத்துகின்றனர்? அதாவது எவ்வாறு ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்? உங்களால் முடிந்தால் அரசாங்கம் என்ற கட்டுரையை ஆரம்பியுங்கள். அரசறிவியல் என்பதற்கு இன்னமும் தமிழில் ஒரு கட்டுரை இங்கு உருவாக்கப்படவில்லை.--Kanags \உரையாடுக 22:55, 4 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
தற்போதுள்ள ஆங்கில விக்கி இணைப்பு en:State (polity) என்பது அரசு என்ற இக்கட்டுரைக்குப் பொருந்துமா? state is an organized political community living under a government என உள்ளது.--Kanags \உரையாடுக 04:02, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
ஆங்கிலத்திற்கான இணைப்பு சரியானது, ஆனால் தமிழில் திருத்தி, மேம்படுத்த வேண்டும். அரசும், அரசாங்கமும் கலந்துள்ளன. ஏற்கெனவே அதற்கா en:State (polity) இணைப்பு மாநிலம் என்றிருந்தது. தற்போது மாநிலம் en:Federated state க்கு மாற்றப்பட்டுள்ளது. பிறகு இவற்றின் அடிப்படை விடங்களுக்கு ஏற்ப திருத்திவிடுகிறேன். --Anton (பேச்சு) 04:27, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் இப்பொழுது வழங்கும் Nation State என்பது சற்று புதிய கருத்து. Country, Kingdom, Nation வெவ்வேறான கருத்துகள். Nation, State (or Nationa-State) என்பன வேறான கருத்துகள். Nation என்பது நாடு- நாட்டின் புவியியல் கூறுகளும் அதில் வாழும் மக்களும் அடங்கும். நாட்டாட்சி, நாட்டரசு, நாட்டாண்மை என்பது அந்த நாட்டை ஆளும் முறைமையைக் குறிப்பது. தற்கால கருதுகோளாகிய நேசன் -இசுட்டேட்டு என்பது என்பது பொதுவாக வெறும் புவியியல் சார்ந்ததாகக் கொள்ள முடியாது, அதனோடு மக்களும் இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள் முறைமைகள் வகுத்து தங்களைத் தாங்கள் ஆளும் (நடத்திக்கொள்ளும்) முறைமை கொண்டது முறைநாடு (= Nation-state). ஆனால் தமிழில் நாடு என்றாலே முறைநாடுதான். இது மேற்குலகம் சொல்லும் வெறும் Nation அன்று. அரசு என்பது நாட்டரசு, நாட்டாட்சி-நாட்டாண்மை செய்யும் அமைப்பு. திருக்குறளில் கூறப்படும்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
என்னும் குறளில் சொல்லப்படும் முறைசெய்தல் என்பது அரசு அமைத்து நடத்துதல். அதனை மன்னனோ மக்களாட்சியோ அல்லது பிற வகையான ஆட்சி அமைப்போ செய்யலாம். நாடு, அரசு, அரசாட்சி, அரசியல் அமைப்பு.. .இப்படிப் பல கருத்துகள் உள்ளன. ஆங்கில வழக்கை ஒட்டித் தமிழில் ஈடான சொற்கள் கொள்ளலாம், ஆனால் தமிழின் கருத்துகளும் கருதுகோள்களும் சற்று வேறுபாடானதாக இருக்கலாம். திருக்குறளில் உள்ள பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் பலவும் மிகவும் பொருத்தமானவை. இறைமாட்சி, நாடு போன்றவை மிக முக்கியமானவை. நாடி அமைபப்தே நாடு (நாடு என்றால் வெறும் "வேண்டுதல்" அன்று, நிலைபெறும் தன்மையை, நிறைகுறைகளை அறிந்து திறம்பட அமைப்பது. உன்னை நாடி வந்தேன் என்றால், பலர் இருக்க நீயே தக்கது செய்ய இயல்பவர் என்று அலசித் தேர்ந்து வந்தேன் என்றும் பொருள். குணம் நாடி, குற்றம் நாடி மிகை நாடி என்பதில் வரும் நாடி என்பதன் அடிப்படையாக அமைந்ததே நாடு.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
என்னும் குறளில் திருவள்ளுவர் பல நுண்ணிய செய்திகளைக் கூறியுள்ளார். நானும் இக்கட்டுரைகளைப் பார்க்கின்றேன் வரும் நாட்களில்.

.--செல்வா (பேச்சு) 05:05, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரசு&oldid=2828439" இலிருந்து மீள்விக்கப்பட்டது