அமைதிபள்ளத்தாக்கு புதர் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமைதிபள்ளத்தாக்கு புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ரோர்செசுடசு
இனம்:
ரோ. சைலண்ட்வேலி
இருசொற் பெயரீடு
ரோர்செசுடசு சைலண்ட்வேலி
சக்காரியா மற்றும் பலர், 2016

ரோர்செசுடசு சைலண்ட்வேலி (Raorchestes silentvalley) அல்லது அமைதிப்பள்ளத்தாக்கு புதர் தவளை என்பது தென்னிந்தியாவின் நீலகிரி மலைகளில் காணப்படும் ஒரு அகணிய உயிர் ஆகும். மேலும் இது மரத் தவளைகள் பேரினமான ரோர்செசுடசுவினைச் சேர்ந்தது. இந்த சிற்றினம் சூன், 2016-ல் விவரிக்கப்பட்டது. இது அமைதிப்பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் நீலகிரி மலைகளின் தென்மேற்கு சரிவுகளில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பரவலைக் கொண்டது. இந்த தவளைகள் நிறத்தில் மாறுபடும் ஆனால் முறை மற்றும் அழைப்புகளில் தெளிவானவை.

நீலகிரியின் தெற்கு பகுதியிலிருந்து அமைதிப்பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த சிற்றினம் விவரிக்கப்பட்டது. இவை நிறத்தில் மாறுபடும் ஆனால் கருப்பு புள்ளிகள் மற்றும் புள்ளிகளின் வடிவங்களுடன் உடலின் மேற்பகுதி பச்சை நிறத்தில் இருக்கும். கீழ்ப்பகுதி மஞ்சள் நிறத்தில் கருப்பு அல்லது ஊதா நிறப் புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் காணப்படும். கால் விரல் பட்டைகள் ஊதா நிறத்தில் இருக்கும். இவை தரையிலிருந்து சுமார் 2 மீட்டர் உயரத்தில் உள்ள மரக்கிளைகளில் காணப்படும். ஒரு தனித்துவமான ஓசையினை அழைப்பாக ஒலிக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zachariah, A.; V. P. Cyriac; B. Chandramohan; B. R. Ansil; J. K. Mathew; D. V. Raju; R. K. Abraham (2016). "Two new species of Raorchestes (Anura: Rhacophoridae) from the Silent Valley National Park in the Nilgiri Hills of the Western Ghats, India". Salamandra 52 (2): 63–76. https://www.researchgate.net/publication/304316726.