அமெரிக்க கசுக்கொட்டை அந்துப்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க கசுக்கொட்டை அந்துப்பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்டிரா
குடும்பம்:
நெப்டிகுலிடே
பேரினம்:
எக்டோடீமியா
இனம்:
E. காசுடானியே
இருசொற் பெயரீடு
எக்டோடீமியா காசுடானியே
Busck, 1913

அமெரிக்க கசுக்கொட்டை அந்துப்பூச்சி (American chestnut moth)(எக்டோடீமியா காசுடானியே) என்பது நெப்டிகுலிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி வகைகளுள் ஒன்றாகும் . 1996ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த சிற்றினம் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.[1] இந்த அந்துப்பூச்சி அமெரிக்காவில் வர்ஜீனியா, கென்டக்கி மற்றும் பென்சில்வேனியா பகுதியில் மட்டுமே காணக்கூடிய இனமாக இருந்தது.

இதனுடைய இறகு நீட்ட அளவானது 7.5-8 மிமீ ஆகும். [2]

இதனுடைய இளம் உயிரிகள் அமெரிக்க கசுகொட்டையின் இளம் கிளைகளைச் சுற்றி கால்வாய்களை உருவாக்குகின்றன; இது வன கூடார கம்பளிப்பூச்சியின் வடிவம் மற்றும் முட்டையின் அளவினை ஒத்திருக்கின்றன. வட அமெரிக்கக் கொட்டை இனங்களுடனான அந்துப்பூச்சியின் ஒருங்கியக்க உறவின் காரணமாக அமெரிக்காவில் அனைத்து கசுகொட்டை மரங்களும் கசுகொட்டை வெளிர் நோய்ப் பாதிப்புக்குள்ளானபோது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அமெரிக்க கசுகொட்டை கிட்டத்தட்ட அழிவுக்கு உள்ளானபோது அமெரிக்க கசுகொட்டை அந்துப்பூச்சியும் முற்றிலும் அழிவுக்கு உந்தப்பட்டது. [3] [4]

ஆதாரங்கள்[தொகு]

  1. World Conservation Monitoring Centre. 2018. Ectoedemia castaneae (amended version of 1996 assessment). The IUCN Red List of Threatened Species 2018: e.T7028A134978019. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2018-2.RLTS.T7028A134978019.en. Downloaded on 05 August 2020.
  2. Braun, A. F. (1917). Nepticulidae of North America. Transactions of the American Entomological Society (1890-), 43(2), 155-209.
  3. Opler, P. A. (1978, January). Insects of American chestnut: possible importance and conservation concern. In The American chestnut symposium (pp. 83-85). Morgantown, West Virginia: West Virginia University Press.
  4. Thompson, H. (2012). The chestnut resurrection. Nature, 490(7418), 22.