அன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அன்னம்


Cygnus olor 2 (Marek Szczepanek).jpg

அன்னம் என்பது "Anatidae" குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றில் 6-7 வகையானவை உண்டு. அவை "Anserinae" எனும் துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றில் Coscobra Swan எனும் இன்னுமொரு வகையும் உண்டு. எனினும் அவை வழமையான அன்னங்களிலிருந்து வேறுபட்டவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதன் மூலம் இனம்பெருக்குகின்றன. இவை 3 தொடக்கம் 8 வரை முட்டையிடுகின்றன.இவை தனது குறித்த ஜோடியுடனேயே வாழ்க்கை நடத்தும். சில வேளைகளில் ஜோடிகள் பிரிவதும் (விவாகரத்தாவதும்) உண்டு.

அன்னம்

இவை பொதுவாக குளிரான நாடுகளிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன. இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும். இலங்கை இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் இவை அருகியிருப்பினும் ஏனைய சில ரோப்பிய நாடுகளில் இன்னும் வாழ்கின்றன.


தென்னிந்திய அலங்காரங்களில் அன்னப் பட்சி

அன்னப் பட்சி இற்கு இந்தியப் பழங்கதைகளில் கற்பனையான, அபூர்வமான இயல்புகள் பல ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற பண்பு இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று. இது ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னப் பட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.




[தொகு] வெளியிணைப்புகள்

யாழ்ப்பாண வீடுகளில் நுழைவாயில் அலங்காரங்கள் (ஆங்கிலம்)

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்னம்&oldid=1100428" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்