அடோபி சிஸ்டம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அடோப் சிஸ்டம்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடோபி சிஸ்டம்ஸ் இன்க்
வகை பொது
நிறுவுகை மவுண்டெய்ன் வியூ, கலிபோர்னியா (1982)
நிறுவனர்(கள்) சார்லஸ் கெஸ்க்
ஜான் வார்னாக்
தலைமையகம் சான் ஜோஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதி உலகளாவிய சேவை
முக்கிய நபர்கள் சார்லஸ் கெஸ்க், நிறுவனர்
ஜான் வார்னாக், நிறுவனர்
சாந்தனு நாராயண், தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி
தொழில்துறை கணினி மென்பொருள்[1]
உற்பத்திகள் அடோபி தயாரிப்புகளின் பட்டியல் தலைப்பில் காணவும்
வருமானம் $ 3.579 பில்லியன் (2008)[2]
இயக்க வருமானம் $ 1.028 பில்லியன் (2008)[2]
நிகர வருமானம் $ 871.8 மில்லியன் (2008)[2]
மொத்தச் சொத்துகள் Green Arrow Up Darker.svg $ 5.821 பில்லியன் (2008)[2]
மொத்த பங்குத்தொகை Green Arrow Up Darker.svg $ 4.410 billion (2008)[2]
பணியாளர் 8,660 (டிசம்பர் 2009)[3]
இணையத்தளம் Adobe.com

அடோபி சிஸ்டம்ஸ் இன்கார்பரேட்டட் அமெரிக்காவில் உள்ள கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவில், சான் ஹூசேவைத் தலைமையகமாகக் கொண்டது. இந்த நிறுவனம் பல்லூடகம் மற்றும் படைப்பாக்க மென்பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. சமீபகாலமாக இணையதள பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கத்தில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருகிறது.

1982[3] ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஜான் வார்னாக் மற்றும் சார்லஸ் ஜெஸ்க் என்பவர்களால் அடோபி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இவர்கள் ஜெராக்ஸ் பார்க் (Xerox PARC) என்ற நிறுவனத்தை விட்டு விலகி இந்நிறுவனத்தை உருவாக்கினர். 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் போஸ்ட்ஸ்க்ரிப்டு தொழிநுட்பத்தின் உரிமத்தைப் பெற்று, அதனை தனது அச்சியந்திரங்களுக்குப் பயன்படுத்தியது. இது மேசைத்தள பிரசுரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிறுவனத்தின் பெயரான அடோபி என்பது, கலிபோர்னியா, லாஸ் ஆல்டோஸ்சில் உள்ள இந்நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரது வீட்டிற்கு பின்புறம் ஓடிய அடோபி கிரீக் என்கிற ஓடையின் பெயரிலிருந்து உருவானது.[3] டிசம்பர் 2005 ஆம் ஆண்டு, அடோபி தனது போட்டி நிறுவனமான மேக்ரோமீடியாவை கையகப்படுத்தியது. இது அடோபி கோல்ட்ஃப்யூஷன் (Adobe ColdFusion), அடோபி ட்ரீம்வீவர் (Adobe Dreamweaver), அடோபி ஃப்ளாஷ் (Adobe Flash) மற்றும் அடோபி ஃப்ளக்ஸ் (Adobe Flex) என அதனது தயாரிப்புகளின் பட்டியலை அதிகரிக்க உதவியது.

2009 ஆம் வருட ஆகத்து மாத கணக்கெடுப்பின்படி, அடோபி சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் 7,564 பணியாளர்கள் [3] பணியாற்றி வந்தனர். அதில் 40 சதவீத ஊழியர்கள் சான் ஹூசேவில் பணியாற்றி வந்தனர். ஆர்லான்டோ (புளோரிடா), சியாட்டில் (வாஷிங்டன்); சான் பிரான்சிஸ்கோ (கலிபோர்னியா), ஒட்டாவா (ஆன்டாரியோ), மினிபோலிஸ் (மினிசோட்டா); நியூட்டன் (மாசஷூசெட்ஸ்); சான் லூயிஸ் ஓபிஸ்போ (கலிபோர்னியா); ஹாம்பர்க் (ஜெர்மனி), நொய்டா (இந்தியா), பெங்களூர் (இந்தியா), புகாரெஸ்ட் (ரோமானியா), பெய்ஜிங் (சீனா) ஆகியவை அடோபிபின் முக்கிய அபிவிருத்தி செயலாக்க கூடங்களாய் உள்ளன.

வரலாறு[தொகு]

அடோபி சிஸ்டம்ஸ் கலிபோர்னியாவில் உள்ள சான் ஹூசேவைத் தமது தலைமையகமாகக் கொண்டுள்ளது.

அடோபி அதன் போஸ்ட்ஸ்க்ரிப்ட் தொழில்நுட்பத் தயாரிப்பிற்குப் பின் எண்மருவி எழுத்துருக்களை உரிம உடமையுடன் டைப் 1 என்ற வடிவில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இதற்குப் போட்டியாக எழுத்து வடிவ எல்லைகளை மிகவும் துல்லியமாகக் கட்டுப்படுத்தும் ட்ரூ டைப் எழுத்துரு வடிவத்தை வெளியிட்டு இதன் உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் அடோபி, டைப் 1 வடிவ எழுத்துடன் அடோபி டைப் மேனேஜர் என்ற மென்பொருளை வெளியிட்டது. இது ட்ரூ டைப் வகைக்கு இணையான சிறந்த மேம்பாடாக இருந்தது. ஆனால் இத்தகைய முயற்சிகள் ட்ரூ டைப்பின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. வரைகலை/பிரசுர சந்தையின் தரமாக டைப் 1 ஏற்கப்பட்டிருப்பினும் ட்ரூ டைப் வியாபாரச் சந்தை மற்றும் விண்டோஸ் பயன்படுத்துபவரிடையே உபயோகத் தரமாக கொள்ளப்பட்டது. 1996 ஆம் வருடம் அடோபி மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து ஓபன் டைப் வடிவ எழுத்துக்களை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து 2003 ஆம் வருடம் அடோபி அதன் டைப் 1 வடிவ எழுத்துக்களின் தொகுப்பை ஓபன் டைப்பாக மாற்றியது.

1989 ஆம் ஆண்டு, அடோபி தனது தயாரிப்பில் முத்திரை பதித்த போட்டோஷாப் மென்பொருளை அறிமுகப்படுத்தியது. சிறப்பு அம்சங்களுடனுடான போட்டோஷாப் 1.0 பதிப்பினை அடோபி விற்பனை செய்தது. அது மென்பொருள் சந்தையை ஆட்சி செய்தது.[4]

1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அடோபி அடோபி பிரீமியர் என்கிற மென்பொருளை வெளியிட்டது. 2003 ஆம் ஆண்டு அதனை அடோபி பிரீமியர் புரோ என மறுபெயரிட்டு வெளியிட்டது. 1994 ஆம் ஆண்டில் அடோபி, ஆல்டஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி, அடோபி பேஜ்மேக்கர் மற்றும் அடோபி ஆப்டர்எஃபக்ட்ஸ் ஆகிய இரண்டு பயன்பாடுகளை தனது தயாரிப்புகள் வரிசையில் சேர்த்தது. மேலும் டிஃப் (TIFF) கோப்பு வடிவமைப்பையும் கட்டுப்படுத்தியது. 1995 ஆம் ஆண்டில் ஃபிரேம் டெக்னாலஜி கார்ப் நிறுவனத்தை கையகப்படுத்திய பின் அடோபி தனது தயாரிப்பு வரிசையில் அடோபி ஃப்ரேம்மேக்கர் என்ற ஆவண தயாரிப்புப் பயன்பாட்டையும் சேர்த்தது. 1999 ஆம் ஆண்டில் அடோபி இன்காப்பி (Adobe InCopy) மென்பொருளை அடோபி அறிமுகப்படுத்தியது.[5]

ஆப்பிள் இன்க்., மைக்ரோசாஃப்ட், குவார்க், இன்க். ஆகியவை அடோபி நிறுவனத்தின் முன்னணிப் போட்டியாளர்களாய் உள்ளன.[6]

நிறுவன நிகழ்வுகள்[தொகு]

1992[தொகு]

  • ஒசிஆர் சிஸ்டம்ஸ், இன்க் நிறுவனத்தை அடோபி கையகப்படுத்தியது.

1999[தொகு]

  • கோ லைவ் சிஸ்டம்ஸ், இன்க் நிறுவனத்தை கையகப்படுத்தியது மற்றும் அடோபி கோ லைவ் என்னும் பயன்பாட்டை வெளியிட்டது.
  • அடோபி இன்டிசைன் (Adobe InDesign) என்ற மென்பொருளை குவார்க்எக்ஸ்பிரசுக்கு (QuarkXPress) எதிராக மற்றும் பேஜ் மேக்கருக்கு பதிலாக பயன்படுத்தும் வகையில் வெளியிட்டது.

2003[தொகு]

  • மே மாதத்தில் சின்டிரில்லியம் சாப்ட்வேர் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தி, அடோபி ஆடிஷனை (Adobe Audition) தனது தயாரிப்புகள் பட்டியலில் இணைத்தது.

2004[தொகு]

  • டிசம்பர் மாதத்தில் 3டி மென்பொருள் உருவாக்கும் ஒகேஒய்ஜீ எஸ்.ஏ. (OKYZ S.A.) என்ற பிரான்சு நிறுவனத்தை கையகப்படுத்தியது.

2005[தொகு]

  • பங்குச் சந்தைப் பரிமாற்றத்தில், 3.4 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருந்த தனது முக்கிய போட்டியாளரான மேக்ரோமீடியாவை டிசம்பர் 12, 2005 அன்று கையகப்படுத்தி தனது மென்பொருள் தயாரிப்பு பட்டியலில், அடோபி கோல்ட்ஃப்யூஷன் (Adobe ColdFusion), அடோபி கான்ட்ரிப்யூட் (Adobe Contribute), அடோபி கேப்டிவேட் (Adobe Captivate), அடோபி ஆக்ரோபட் கனெக்ட் (Adobe Acrobat Connect) (முன்பு மேக்ரோமீடியாவின் முக்கிய தயாரிப்பாக இருந்தது), அடோபி டைரக்டர் (Adobe Director), அடோபி ட்ரீம்வீவர் (Adobe Dreamweaver), அடோபி ஃபயர்வொர்க்ஸ் (Adobe Fireworks), அடோபி ஃப்ளாஷ் (Adobe Flash), மேக்ரோமீடியா ஃப்ளாஷ்பேப்பர் (Macromedia FlashPaper), அடோபி ஃபிளக்ஸ் (Adobe Flex), மேக்ரோமீடியா ப்ரீஹான்ட் (Macromedia FreeHand), மேக்ரோமீடியா ஹோம்சைட் (Macromedia HomeSite), மேக்ரோமீடியா ஜேரன் (Macromedia JRun), அடோபி பிரசண்டர் (Adobe Presenter) மற்றும் மேக்ரோமீடியா ஆத்தர்வேர் (Macromedia Authorware) போன்றவற்றை இணைத்தது.[7][8][9]

2007[தொகு]

  • ஜனவரி: அடோபி போட்டோஷாப் லைட்ரூம் பயன்பாடு வெளியிடப்பட்டது. இந்த பயன்பாடு நிழற்படம் எடுப்பவர்களுக்கு அதன் எண்மருவி வடிவங்களை நிர்வகிக்கவும், புகைப்படம் எடுத்த பின் அதில் பணியாற்றுவதை எளிமையாக்கவும் உதவி செய்தது. இந்தத் தயாரிப்பு ஆப்பிள் நிறுவனத்தின் அபெர்ச்சர் என்னும் பயன்பாட்டிற்குப் போட்டியாக கொண்டு வரப்பட்டது.
  • மே 2007: ஸீன்7 மென்பொருள் உரிமம் கையகப்படுத்தப்பட்டது.
  • ஜூலை: அடோபி சவுன்ட்பூத் பயன்பாட்டை வெளியிட்டது. இந்தத் தயாரிப்பு ஏற்கனவே உள்ள அடோபி ஆடிஷனுக்குப் பதிலாக கொண்டு வரப்படவில்லை. செவ்வி குறித்து அதிக புலமை இல்லாதவர்களும் பணியாற்ற ஒரு சூழல் ஏற்படுத்தி தருவதற்காக இப்பயன்பாடு கொண்டு வரப்பட்டது.
  • ஆகஸ்ட் 3, 2007: ஆத்தர்வேர் என்ற பயன்பாட்டின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக [1] அறிவித்தது. ஆத்தர்வேர், மேக்ரோமீடியா-அடோபி சேர்க்கையின் போது கையகப்படுத்திய கருவிகளில் ஒன்று. இதனை அடோபி கேப்டிவேட் என்னும் பயன்பாடு பதிலீடு செய்தது.
  • அக்டோபர் 2007: பஸ்வோர்டு (Buzzword) உரிமை கையகப்படுத்தப்பட்டது.
  • நவம்பர் 12, 2007: தலைமை நிர்வாக அதிகாரியான புரூஸ் சிசென் (Bruce Chizen) தனது பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து சாந்தனு நாராயண் தலைவர் மற்றும் தலைமை செயற்பாட்டு அதிகாரியாகப் பதவியேற்றார்.

2008[தொகு]

  • ஏப்ரல்: அடோபி மீடியாபிளேயர் என்னும் பயன்பாட்டை அடோபி வெளியிட்டது.
  • 27 ஏப்ரல்: ட்ரீம்வீவர் நிறுவனத்திற்காக, தனது கோ லைவ் என்ற மீயுரை/ வலை உருவாக்க மென்பொருள் தயாரிப்பதையும் விற்பனை செய்வதையும் அடோபி நிறுத்தி விட்டது.
  • 1 ஜூன்: அடோபி ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு ஏற்ற வலைப் பயன்பாடுகளின் தொகுப்பு கொண்ட Acrobat.com தளத்தை வெளியிட்டது.[10]
  • கிரியேட்டிவ் சுயிட் 4 என்னும் தொகுப்பை 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பல்வேறு விலை மதிப்பில் ஆறு வித பதிப்புகளுடன் கொண்டு வந்தது.[11][12][12]
  • டிசம்பர் 3, 2008: நலிந்த பொருளாதாரச் சூழலைக் காரணம் காட்டி அடோபி நிறுவனம் தனது 600 (பல்வேறு நாடுகளில் பணியாற்றுபவர்களில் 8 சதவீதம்) பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது.

2009[தொகு]

  • கிரியேட்டிவ் சுயிட் 4 தொகுப்பு அதிக அளவு விற்பனையாகவில்லை.[13]
  • ஆகஸ்ட் 29 - பிசினஸ் கேடலிஸ்ட் என்ற நிறுவனத்தை அடோபி கையகப்படுத்தியது.[14]
  • செப்டம்பர் 15 - ஆம்னிச்சரை அடோபி கையகப்படுத்தியது.[15]
  • நவம்பர் 10 - அடோபி 680 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.[16]

2010[தொகு]

  • அடோபி, சீனாவில் தான் நிர்வகித்து வரும் பெருநிறுவன வலைப்பின்னல் கட்டமைப்புக்கு எதிராக நடந்த "ஒருங்கிணைந்த தாக்குதலைப்" பற்றி விசாரித்து வருவதாக அறிவித்தது.[17] இதே தாக்குதல் கூகுள் மற்றும் மேலும் 20 நிறுவனங்களுக்கு எதிராகவும் நடைபெற்றது.

தலைமை நிர்வாகம்[தொகு]

நிர்வாகக் குழு [18]
சார்லஸ் எம். ஜெஸ்க் (Charles M. Geschke) இயக்குநர் குழுவின் இணை இயக்குனர்
ஜான் இ. வார்னாக் (Charles M. Geschke) இயக்குநர் குழுவின் இணை இயக்குனர்
சாந்தனு நாராயண் (Shantanu Narayen) தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி
கரேன் காட்டில் (Karen Cottle) மூத்த துணைத் தலைவர், பொது ஆலோசகர் மற்றும் நிர்வாகக் காரியதரிசி
மார்க் கேரெட் (Mark Garrett) நிர்வாகத் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி
டானா மோரிஸ் (Donna Morris) மூத்த துணைத் தலைவர், மனித வளம்
கெவின் லின்ச் (Kevin Lynch) மூத்த துணைத் தலைவர்: அனுபவம் & தொழில்நுட்பக் குழு, தலைமை தொழில்நுட்ப அதிகாரி

தயாரிப்புகள்[தொகு]

அடோபியின் தயாரிப்புகளாவன:

  • மேசைத்தள மென்பொருட்கள்: அடோபி போட்டோஷாப் (அடோபி கிரியேட்டிவ் சுயிட் மற்றும் அடோபி அடிஷனின் ஒரு பகுதி)
  • சேவையக மென்பொருட்கள்: அடோபி கோல்ட்ஃப்யூஷன் மற்றும் அடோபி லைவ் சைக்கிள்
  • தொழிற்நுட்பங்கள்: போர்டபிள் டாகுமன்ட் ஃபார்மட் (PDF), பிடிஎப்பின் முன்னோடிகளான போஸ்ட் ஸ்க்ரிப்ட் மற்றும் பிளாஷ்
  • வலையேற்ற சேவைகள்: அடோபி கூலர், போட்டோஷாப் எக்ஸ்பிரஸ், மற்றும் Acrobat.com
  • வலை வடிவமைப்பு நிரல்கள்: அடோபி ட்ரீம்வீவர் மற்றும் அடோபி கோ லைவ்
  • வீடியோ திருத்தம் மற்றும் காட்சி விளைவுகளுக்கு: அடோபி பிரீமியர் மற்றும் அடோபி ஆப்டர் எஃபக்ட்ஸ் (Adobe After Effects)
  • மின்னணு வழி கற்றல்: அடோபி கேப்டிவேட்

நிதிசார் தகவல்[தொகு]

1986 ஆம் ஆண்டில் அடோபி சிஸ்டம்ஸ் நாஸ்டாக்கில் நுழைந்தது. 2006 ஆம் ஆண்டில் அடோபிபின் வருமானம் $2.575 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[19]

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்து மதிப்பீட்டின் படி, அடோபிபின் சந்தை முதலாக்கம் $23 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.[19] 2008 மார்ச் நிலவரப்படி, அடோபிபின் சந்தை முதலாக்கம் தோராயமாக $18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.[19]

வருவாய்[தொகு]

2000 ஆம் ஆண்டு வரிசையில்[தொகு]

ஆண்டு வருவாய்
2008 $3.58 பில்லியன் [20]
2007 $3.158 பில்லியன் [21]
2006 $2.575 பில்லியன்[22]
2005 $1.966 பில்லியன்[22]
2004 $1.667 பில்லியன்[23]
2003 $1.295 பில்லியன்[24]
2002 $1.165 பில்லியன்[24]
2001 $1.230 பில்லியன்[25]
2000 $1.156 பில்லியன்[26]

1990 ஆம் ஆண்டு வரிசையில்[தொகு]

நிதியாண்டு வருவாய்
1999 $1.015 பில்லியன்[26]
1998 $895 மில்லியன்[27]
1997 $912 மில்லியன்[27]
1996 $787 மில்லியன்[27]
1995 $762 மில்லியன்[27]
1994 $676 மில்லியன்[27]

அடோபின் நிதியாண்டு டிசம்பர் முதல் நவம்பர் வரை செல்லும். உதாரணமாக, 2007 ஆம் வருட நிதியாண்டு நவம்பர் 30, 2007 அன்று முடிவடைந்தது.

பெருமைகள்[தொகு]

1995 ஆம் ஆண்டில் பார்ச்சூன் இதழ் அடோபி நிறுவனத்தை பணியாற்ற மிக உன்னதமான இடமாக தனது கணக்கெடுப்பில் குறிப்பிட்டுள்ளது. பணியாற்ற சிறந்த அமெரிக்க நிறுவனங்கள் பட்டியலில் 2003 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்திலும், 2004 ஆம் ஆண்டில் ஆறாவது இடத்திலும், 2007 ஆம் ஆண்டில் முப்பத்தியொன்றாம் இடத்திலும், 2008 ஆம் ஆண்டில் நாற்பதாவது இடத்திலும், 2009 ஆம் ஆண்டில் பதினொன்றாவது இடத்திலும் அடோபி பட்டியலிடப்பட்டுள்ளது.[28] 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்தியாவில் உள்ள அடோபி சிஸ்டம்ஸ் இந்தியா, இந்தியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த இடங்களில் பத்தொன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.[29] 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனடா நாட்டில் உள்ள அடோபி சிஸ்டம்ஸ் நிறுவனம், "கனடாவின் முன்னணி 100 தொழிலதிபர்களில்" ஒன்றாக மீடியாகார்ப் கனடா இன்க் அமைப்பால் பட்டியலிடப்பட்டது. இதனைப் பற்றிய அறிக்கை மெக்லீன் பத்திரிகையிலும் வெளிவந்தது.

விமர்சனம்[தொகு]

அடோபி அதனது மென்பொருளுக்கு நிர்ணயிக்கும் விலை குறித்து விமர்சனங்களுக்கு[30][31][32] உள்ளாகியுள்ளது. அது தனது தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் அளிக்கும் விலையை விட இருமடங்கு அதிகமாக[33] வைத்து வெளிநாடுகளில் விற்பதாகக் கூறப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடோபி தனது தயாரிப்புகளின் விலையை இங்கிலாந்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.[34]


குறிப்புகள்[தொகு]

  1. Adobe - Company Overview - Hoover's
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Financial Tables". Adobe Systems Investor Relations. பார்த்த நாள் 2009-01-23.
  3. 3.0 3.1 3.2 3.3 "Adobe Fast Facts" (PDF) (2009-03-09). பார்த்த நாள் 2009-04-04.
  4. Hormby, Thomas. "How Adobe's Photoshop Was Born". SiliconUser. பார்த்த நாள் June 12, 2007.
  5. அடோபி பற்றி - பத்திரிக்கைச் செய்திகள் - உடனடி வெளியீட்டுக்காக
  6. ஹூவரின் - அடோபி - நிறுவனம் ஒரு பார்வை
  7. Adobe(April 18, 2005). "Adobe to acquire Macromedia". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-03-31.
  8. Macromedia(April 18, 2005). "ADOBE TO ACQUIRE MACROMEDIA". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-03-31.
  9. Graham, Jefferson (2005-04-18). "Adobe buys Macromedia in $3.4B deal". USA Today. http://www.usatoday.com/money/industries/technology/2005-04-18-adobe-macromedia_x.htm?csp=34. பார்த்த நாள்: 2007-03-31. 
  10. Erik Larson (2008-06-01). "Welcome to Acrobat.com — Work. Together. Anywhere.". Adobe. பார்த்த நாள் 2008-06-02.
  11. "Adobe launches Creative Suite 4; Likely to top low expectations". ZDNet (CBS). September 23, 2008. http://blogs.zdnet.com/BTL/?p=10127. பார்த்த நாள்: 2008-09-23. 
  12. 12.0 12.1 Carlson, Jeff (September 23, 2008). "Adobe Announces Vast Creative Suite 4". TidBITS. http://db.tidbits.com/article/9782. பார்த்த நாள்: 2008-09-23. 
  13. http://www.menafn.com/qn_news_story.asp?StoryId={71506579-2A79-4443-B4C6-91AFEBB869A9}
  14. http://www.adobe.com/special/businesscatalyst/
  15. http://www.businesswire.com/portal/site/google/?ndmViewId=news_view&newsId=20090915006569&newsLang=en
  16. http://online.wsj.com/article/SB10001424052748704402404574528174100385780.html
  17. http://www.dailytech.com/Adobe%20Targeted%20by%20Cyber%20Attack%20from%20China/article17387.htm
  18. http://www.adobe.com/aboutadobe/pressroom/pdfs/fastfacts.pdf
  19. 19.0 19.1 19.2 "Adobe Systems Incorporated Company Profile". Google Finance.
  20. Q4 மற்றும் FY2008 வருமானம் பத்திரிக்கைச் செய்தி
  21. Macsimum செய்தி - அடோபி தனது சாதனை வருமானத்தை அறிவித்தது
  22. 22.0 22.1 adobe.com
  23. adobe.com
  24. adobe.com
  25. 26.0 26.1 adobe.com
  26. 27.0 27.1 27.2 27.3 27.4 adobe.com
  27. "100 Best Companies to Work For 2009".
  28. "Best Places to work in India".
  29. "Photographers take stand against Adobe".
  30. "Adobe responds to CS4 pricing criticism".
  31. "Adobe defends CS4 pricing".
  32. "Adobe responds to customer protests against perceived unfair pricing.".
  33. http://www.pcpro.co.uk/news/254173/adobe-hikes-uk-prices-by-10.html

மேற்குறிப்புகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அடோபி_சிஸ்டம்ஸ்&oldid=1531649" இருந்து மீள்விக்கப்பட்டது