அசோவெரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசோவெரைட்டு (Ashoverite) துத்தநாக ஐதராக்சைடின் (Zn(OH)2) மூன்று பல்லுரு தோற்றங்களில் ஒன்றாகும். மிகவும் அரிய கனிமமான அசோவெரைட்டு இங்கிலாந்து நாட்டின் தெர்பைசையர் மாகாணத்திலுள்ள சுண்ணாம்புக்கல் வெட்டியெடுக்கப்படும் பள்ளங்களில் முதன் முதலில் 1988 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. [1] செருமனியின் ஆர்சு மலைத் தொடரிலும் நமீபியா நாட்டிலும் கூட அசோவெரைட்டு கிடைக்கிறது.

துத்தநாகத்தின் கனிமமான சுவீட்டைட்டின் பல்லுருவத் தோற்ற மாதிரிகள் எசு. ஏ. ரசுட்டால் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட பின்னரே இந்த கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. சில மாதிரிகள் பேரைட்டு கனிமமாகத் தோன்றின. ஆனால் மேலதிக பரிசோதனையின் முடிவில் அவை அதற்கு முன்னர் அறியப்படாத தாதுப்பொருள் என்று கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோவெரைட்டு&oldid=3100590" இலிருந்து மீள்விக்கப்பட்டது