அசிகா

ஆள்கூறுகள்: 19°36′N 84°39′E / 19.6°N 84.65°E / 19.6; 84.65
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிகா
நகரம்
அடைபெயர்(கள்): சர்க்கரை நகரம்
அசிகா is located in ஒடிசா
அசிகா
அசிகா
Location in Odisha, India
அசிகா is located in இந்தியா
அசிகா
அசிகா
அசிகா (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°36′N 84°39′E / 19.6°N 84.65°E / 19.6; 84.65
நாடு India
மாநிலம்ஒடிசா
மாவட்டம்கஞ்சாம்
பரப்பளவு
 • மொத்தம்8 km2 (3 sq mi)
ஏற்றம்30 m (100 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்21,428 [1]
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகஒடியா
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்761110
தொலைபேசி குறியீடு06822
வாகனப் பதிவுOD-07 (கஞ்சாம்)
OD-32 (பெர்காம்பூர்)

அசிகா அல்லது அஸ்கா (Asika or Aska) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது ஒடிசாவின் சர்க்கரை நகரம் என்று அழைக்கப்படுகிறது. அசிகா கஞ்சம் மாவட்டத்தின் முக்கிய வணிக மற்றும் போக்குவரத்து மையமாக உள்ளது.

நிலவியல்[தொகு]

அஸ்கா 19°36′N 84°39′E / 19.6°N 84.65°E / 19.6; 84.65 இல் அமைந்துள்ளது. [2] இது சராசரியாக 30 மீட்டர் (98 அடி). உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பிரம்மபூரிலிருந்து 40 கிமீ தொலைவிலும், பஞ்நகரில் இருந்து 35 கிமீ தொலைவிலும், ருசிகுல்யா மற்றும் பதாநதி (பாரா நதி) ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

அஸ்கா சர்க்கரை ஆலை[தொகு]

ஆசியாவின் முதல் சர்க்கரை ஆலை இங்குள்ள அசிகா சர்க்கரை ஆலை ஆகும். இது 1824 இல் நிறுவப்பட்டது. அசிகா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 35000 குடும்பங்களுக்கு மேல் வேலை செய்யும் ஒரு பெரிய அளவிலான தொழில் நிறுவனம் ஆகும்.

இது மிஞ்சின் சாகேப் என்பவரால் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான ஆலைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கடலூர் அருகே நெல்லிக்குப்பம் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையுடன், பாரி அண்ட் கோ நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலையால் அசிகா நகரம் சர்க்கரை நகரம் என்று அழைக்கப்படுகிறது.

1848 ஆம் ஆண்டு பாரி அண்ட் கோ மெட்ராசால் அசிகா சுகர் ஒர்க்ஸ் அண்ட் டிஸ்டில்லரி லிமிடெட் என்ற பெயரில் வெல்ல ஆலை தொடங்கப்பட்டது. இது சரியான மேற்பார்வையின்மை மற்றும் பிற போக்குவரத்து இடையூறுகளால் பெரும் இழப்பைச் சந்தித்தது. அதன்பிறகு, பினி அண்ட் கோ நிறுவனத்தின் கணக்கெழுத்தரான ஃபிரெட்ரிக் ஜோஷெப் விவியன் மிஞ்சின் தொழிற்சாலையை வாங்கினார். பின்னர் செர்மனியில் இருந்து பெறப்பட்ட புதிய சர்க்கரை ஆலை தொழில்நுட்பத்துடன் 1856 இல் தொழிற்சாலையை வடிவமைத்து மீளக் கட்டினார்.

பண்பாட்டுத் தாக்கம்[தொகு]

அஸ்காவில் வெள்ளை சர்கரை ஆலை வரும் முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் பழுப்பு நிறத்திலிருந்த நாட்டுச் சர்கரையையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். அஸ்காவில் இருந்து வந்த வெள்ளை சர்கரையை முதன் முதலில் பார்த்த மக்கள் அஸ்கா சர்கரை என அதை அழைத்தனர். காலப்போக்கில் அஸ்கா என்பது வெள்ளை சர்கரை என்பதை குறிக்கும் சொல்லாக மாறியது. இன்றும் தமிழ்நாட்டின் சல பகுதிகளிலும், இந்திய மொழிகள் பலவற்றிலும் அஸ்கா என்பது வெள்ளை சர்கரையை குறிப்பிடும் சொல்லாக உள்ளது.[3]

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, [4] அசிகாவின் மக்கள் தொகை 21,428 ( பெர்காம்பூர் மற்றும் இஞ்சிலிகட்டுக்குப் அடுத்து கஞ்சம் மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய நகரம்) ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 52% , பெண்கள் 48% உள்ளனர். அசிகாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 85.76% ஆகும். இது தேசிய சராசரியான 72.87% ஐ விட கூடுதலாகும். கல்வியறிவு பெற்றவர்களில் 56% ஆண்களும், 44% பெண்களும் உள்ளனர். மக்கள் தொகையில் 12% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

அசிகாவில் சமயம்[5]
இந்து
98.54%
இசுலாம்
1.25%
கிறித்துவம்
0.14%
சீக்கியம்
0.01%
பௌத்தம்
0.01%
சைனம்
0.00%
குறிப்பிடாதவர்கள்
0.05%
பிறர்
0.00%

கோயில்கள்[தொகு]

  • சத்தியநாராயணன் கோயில், பினாயக் பஜார், அஸ்கா
  • மா ஃபுலகசுனி (ஒடியா சாஹி)
  • ராமேஸ்வர் கோவில், கே. எஸ் .பட்டினம்
  • மா காம்பேஸ்வரி அம்மன்
  • ஜகன்னாதர் கோவில் (சுனம்போ சாஹி)
  • பஞ்சமுகி அனுமான் கோயில்
  • ஜெகநாதர் கோயில் (நுகாம்)
  • காளி கோயில் (நுகாம்)
  • பகபத் கோயில் (நுகாம்)
  • ராதா கிருஷ்ணர் கோயில் (நுகாம்)
  • இராமர் கோயில் (நுகாம்)
  • புடகேஸ்வரர்
  • சுபர்னேஸ்வர்
  • நீலகண்டேசுவரர்
  • சத்தியநாராயணர்
  • கரஞ்சீ தேவி
  • பலுகேஸ்வர்
  • திருப்பதி பாலாஜி
  • இராமர் கோயில்
  • அனுமன் கோயில்
  • மா காளி
  • மா காளிமுகி
  • நரசிம்மர்
  • கோண்டோபுலிக்கு அருகில் மா தகுராணி
  • ஜெகநாதர் கோவில் பிரதான சாலை கலசநாத் பூர்
  • அனுமான் கோவில் முதன்மை சாலை கலசநாத் பூர்
  • இராதா கிருஷ்ணர் கோயில் (பனிபிஹார், அஸ்கா)
  • சாய் மந்திரா
  • மா கங்கனா தேவி கோவில், (பெத்தனை)
  • எல்லாமா பொத்துராஜ் (தாமோதர்பள்ளி)
  • மா ராஜ்ஜம்மா கனேகம்மா (தோபாபள்ளி)
  • அனுமன் கோவில் (கோடிபாடி)
  • கோபிநாத் கோவில் (ராயப்பள்ளி)
  • இராதாகிருஷ்ணர் கோயில்

காலநிலையும், பிராந்திய அமைப்பும்[தொகு]

இங்கு அதிகபட்ச கோடை வெப்பநிலை 34  °C ஆகும்; குறைந்தபட்ச குளிர்கால வெப்பநிலை 23  °C ஆகும். சராசரி தினசரி வெப்பநிலை 33 °C முதல் 38  °C வரை மாறுபடும். மே மாதம் வெப்பமான மாதம்; திசம்பர் மிகவும் குளிரானது. சராசரி ஆண்டு மழை 1250  மிமீ ஆகும். மேலும் இப்பகுதியில் சூலை முதல் அக்டோபர் வரை பருவமழை காலமாகும். அப்போது அடைமழையைப் பெறுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Asika, Odisha
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27
(81)
30
(86)
34
(93)
36
(97)
37
(99)
34
(93)
32
(90)
31
(88)
32
(90)
32
(90)
30
(86)
28
(82)
31.9
(89.5)
தாழ் சராசரி °C (°F) 16
(61)
19
(66)
23
(73)
27
(81)
29
(84)
28
(82)
27
(81)
27
(81)
26
(79)
23
(73)
20
(68)
16
(61)
23.4
(74.2)
மழைப்பொழிவுmm (inches) 12.40
(0.4882)
17.40
(0.685)
18.60
(0.7323)
15.00
(0.5906)
40.30
(1.5866)
150.00
(5.9055)
282.10
(11.1063)
272.80
(10.7402)
180.00
(7.0866)
93.00
(3.6614)
33.00
(1.2992)
18.60
(0.7323)
1,133.2
(44.6142)
ஆதாரம்: MSM Weather

கல்வி[தொகு]

பள்ளிகள்[தொகு]

  • அரிகரர் உயர்நிலைப் பள்ளி
  • ஏஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளி நுவாகம்
  • கேந்திரிய வித்யாலயா பரணிடப்பட்டது 6 அக்டோபர் 2019 at the வந்தவழி இயந்திரம்
  • சரஸ்வதி சிசு வித்யா மந்திர்
  • என்ஏசி உயர்நிலைப் பள்ளி
  • மேக் மிக்கிள் சமஸ்கிருத வித்யாலயா
  • அரிகரர் உயர்நிலைப் பள்ளி
  • அரிகரர் நகர் யுபி பள்ளி
  • பெதிரி சாஹி யுபி பள்ளி
  • அரசு தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • ஆர்யன் பப்ளிக் பள்ளி
  • டிபால் பள்ளி
  • மாம் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்சி
  • சிறீஅரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையம், ஆர். தாமோதர் பள்ளி
  • தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளி
  • உட்கல் பொதுப் பள்ளி, கிஷோர் சந்திர பள்ளி
  • இராமகிருஷ்ண ஆதர்ச வித்யா மந்திர், காயத்ரி நகர், அஸ்கா

கல்லூரி[தொகு]

  • அஸ்கா அறிவியல் கல்லூரி
  • நிரஞ்சன் மகளிர் கல்லூரி
  • மேக் மிக்கிள் சமஸ்கிருத கல்லூரி
  • சரஸ்வதி வித்யா (இளையோர்) மந்திர் கல்லூரி

வங்கிகள்[தொகு]

  • எஸ்பிஐ முதன்மைக் கிளை
  • அசிகா கூட்டுறவு வங்கி
  • எஸ்பிஐ ஏடிபி கிளை
  • ஆந்திரா வங்கி
  • ஆக்சிஸ் வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • பேங்க் ஆஃப் இந்தியா
  • உட்கல் கிராமிய வங்கி
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  • கரூர் வைசியா வங்கி
  • பஞ்சாப் நேஷனல் வங்கி
  • எச்டிஎப்சி வங்கி
  • கார்ப்பரேஷன் பேங்க் ஆஃப் இந்தியா
  • எஸ்பிஐ எஸ்எம்இ கிளை

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

அசிகா தேசிய நெடுஞ்சாலை 59 (இந்தியா) (காரியார் - பிரம்மபூர்) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 157 (இந்தியா) (புருனகடாக் - அசிகா) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அசிகாவை ஒடிசாவின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.

தொடருந்து[தொகு]

  • பிரம்மபூர் தொடருந்து நிலையம்

வானூர்தி[தொகு]

துறைமுகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Urban Agglomerations/Cities having Census 2011-2020 in Orissa". தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
  2. Falling Rain Genomics, Inc - Asika
  3. Admin (2021-03-28). "சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?". Mei Ezhuththu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-20.
  4. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  5. "Urban Agglomerations/Cities having Census 2011-2020 in Orissa". தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிகா&oldid=3698064" இலிருந்து மீள்விக்கப்பட்டது