அகுஜாசெராடாப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகுஜாசெராடாப்ஸ்
புதைப்படிவ காலம்: பிந்திய கிரீத்தேசஸ் காலம்
அகுஜாசெராடாப்ஸ் மாரிஸ்கலென்சிஸ்
அகுஜாசெராடாப்ஸ் மாரிஸ்கலென்சிஸ்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு சோரொப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: ஓர்னிதிஸ்ச்சியா
துணைவரிசை: மார்ஜினோசெஃபாலியா
உள்வரிசை: செராடொப்சியா
குடும்பம்: செராடொப்சிடீ
துணைக்குடும்பம்: செராடொப்சினீ
பேரினம்: அகுஜாசெராடாப்ஸ்
லூக்காஸ், சலிவனும், ஹண்ட்டும் (2006)
இனங்கள்

அ. மாரிஸ்காலென்சிஸ்

அகுஜாசெராடாப்ஸ் (Agujaceratops) (பொருள்: அகுஜாவில் இருந்து கொம்புள்ள முகம்) என்பது, புதிதாக வகைப்படுத்தப்பட்ட, செராடாப்சியா தொன்மாப் பேரினம் ஆகும். முன்னர் 1989 இல் லெஹ்மன் என்பவரால் விபரிக்கப்பட்டு சாஸ்மோசோரஸ் மாரிஸ்கலென்சிஸ் என அறியப்பட்டது[1]. 2006 இல், லூக்காசும், சலிவனும் ஹண்ட்டும் இதனைப் புதிய பேரினத்துக்கு மாற்றியுள்ளனர். இதன் புதை படிவங்கள் கிடைத்த இடங்களை ஆராய்ந்த லெஹ்மன், அங்குள்ள படிவுகளை வைத்து அகுஜாசெரடாப்சுகள் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கூறுகிறார். இவை சுமார் 70-83 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிந்திய கிரீத்தேசஸ் காலத்தின் கம்பானியக் காலப் பகுதியில் வாழ்ந்தன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. எஆசு:10.1080/02724634.1989.10011749
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. எஆசு:10.1016/j.cretres.2009.12.002
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அகுஜாசெராடாப்ஸ்&oldid=1695425" இருந்து மீள்விக்கப்பட்டது