பெரிலியம் குரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிலியம் குரோமேட்டு
Beryllium chromate
இனங்காட்டிகள்
14216-88-7 Y
பண்புகள்
BeCrO4
வாய்ப்பாட்டு எடை 125.0076
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் குரோமேட்டு, கால்சியம் குரோமேட்டு, இசுட்ரோன்சியம் குரோமேட்டு, பேரியம் குரோமேட்டு, ரேடியம் குரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பெரிலியம் குரோமேட்டு (Beryllium chromate) BeCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பெரிலியம் குரோமேட்டு சேர்மம் கருதுகோள் நிலையிலேயே உள்ளது. மந்த வாயுக்களுடன் ஒரு குறிப்பிட்ட பிணைப்பு திறனைக் கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[2] இந்த வேதிப்பொருள் இருப்பதை ஆதரிக்கும் சிறிய சான்றுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தயாரிப்பு முறைகள்[தொகு]

பெரிலியம் குரோமேட்டை பெரிலியம் ஐதராக்சைடு மற்றும் குரோமியம் மூவாக்சைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்தால் கிடைக்கும் என்று கூறப்படுகிறது:[3]

Be(OH)2 + CrO3 → BeCrO4 + H2O

பொட்டாசியம் குரோமேட்டுடன் பெரிலியம் சல்பேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மேற்கண்ட வினைக்குத் தேவையான பெரிலியம் ஐதராக்சைடை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது:[4]

BeSO4 + 2K2CrO4 + H2O → K2Cr2O7 + K2SO4 + Be(OH)2

மேற்கோள்கள்[தொகு]

  1. Ropp, R. C. (2013). Encyclopedia of the alkaline earth compounds. Oxford: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59553-9. இணையக் கணினி நூலக மைய எண் 827243061.
  2. Pan, Sudip; Ghara, Manas; Ghosh, Sreyan; Chattaraj, Pratim K. (2016). "Noble gas bound beryllium chromate and beryllium hydrogen phosphate: a comparison with noble gas bound beryllium oxide" (in en). RSC Advances 6 (95): 92786–92794. doi:10.1039/C6RA20232B. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. http://xlink.rsc.org/?DOI=C6RA20232B. 
  3. Bleyer, B.; Moormann, A. (1912-06-11). "Über Berylliumchromate" (in en). Zeitschrift für anorganische Chemie 76 (1): 70–78. doi:10.1002/zaac.19120760105. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19120760105. 
  4. Orlow, N. A. (1912-01-16). "Über Berylliumchromate" (in en). Zeitschrift für anorganische Chemie 79 (1): 365–367. doi:10.1002/zaac.19120790128. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19120790128. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_குரோமேட்டு&oldid=3775218" இலிருந்து மீள்விக்கப்பட்டது