கார்பமைடுப் பேரொட்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்பமைடுப் பேரொட்சைடு (Carbamide peroxide) என்பது, ஒரு ஒட்சியேற்று பொருள். இது, ஐதரசன் பேரொட்சைடு, யூரியா ஆகியவற்றின் கூட்டு விளைபொருள் ஆகும். இதன் மூலக்கூற்றுக் குறியீடு CH6N2O3, அல்லது CH4N2O.H2O2. இது ஒரு வெண்ணிறப் பளிங்குருவான திண்மம். நீருடன் சேரும்போது ஒட்சிசனை வெளிவிடுகின்றது.

இந்த வேதிப்பொருள், தோல், கண், மூச்சுத் தொகுதி போன்றவற்றில் நமைச்சலை ஏற்படுத்தக்கூடியது. அத்துடன், அரிப்புத்தன்மை கொண்ட இது, எரிகாயங்களையும் ஏற்படுத்தக்கூடியது. 10% வரை செறிவு (3% ஐதரசன் பேரொட்சைடுக்கு ஈடானது) கொண்ட இப் பொருளினால் பாதிப்பு இல்லை. ஆனால் 35% செறிவுக்கு (12% ஐதரசன் பேரொட்சைடுக்கு ஈடானது) மேல் தோலில் வெண்ணிற வேதி எரிகாயங்களை ஏற்படுத்தும்.

தூய கார்பமைடுப் பேரொட்சைடு வெண் பளிங்குரு, அல்லது வெண் பளிங்குருப் பொடி வடிவம் கொண்டது. இது ஓரளவு நீரிற் கரையும் தன்மை (0.05 கி/மிலீ) கொண்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. சிக்மா-அல்டுரிச் விபரக்கூற்றுத் தாள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பமைடுப்_பேரொட்சைடு&oldid=2743233" இலிருந்து மீள்விக்கப்பட்டது