இலித்தியம் எக்சாபுளோரோசெருமானேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் எக்சாபுளோரோ செருமானேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் எக்சாபுளோரோ செருமானேட்டு
வேறு பெயர்கள்
இலித்தியம் செருமானியம் புளோரைடு
இனங்காட்டிகள்
16903-41-6
InChI
  • InChI=1S/F6Ge.2Li/c1-7(2,3,4,5)6;;/q-2;2*+1
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 16700594
  • [Li+].[Li+].F[Ge-2](F)(F)(F)(F)F
  • [Li+].[Li+].F[Ge-2](F)(F)(F)(F)F
பண்புகள்
Li2GeF6
வாய்ப்பாட்டு எடை 200.51 கிராம்/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை 510 °C (950 °F; 783 K)
53.9 கிராம் (100 கிராம் நீரில் கரைதிறன்)(25 பாகை செல்சியசில்)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் எக்சாபுளோரோசெருமானேட்டு (Lithium hexafluorogermanate) என்பது Li2GeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஈரப்பதத்தில் வெளிப்பட நேரிடும்போது இச்சேர்மம் அரை வெண்மை நிற நீர் உறிஞ்சும் தூளாக மாறுகிறது. எளிமையாக நீராற்பகுப்பு அடைந்து ஐதரசன் புளோரைடு மற்றும் செருமேனியம் புளோரைடு வாயுக்களையும் வெளியிடுகிறது [1].

வினைகள் மற்றும் பயன்கள்[தொகு]

இலித்தியம் எக்சாபுளோரோசெருமானேட்டு ஐதரசன் புளோரைடில் கரைந்து இலித்தியம் புளோரைடைக் கொடுக்கிறது [2]. கடோலினியம் ஆக்சிபுளோரைடை வெப்பப்படுத்தலுக்கு உட்படுத்தி அதன் அடர்த்தியதிகரிக்கும் பொருளாக இலித்தியம் எக்சாபுளோரோசெருமானேட்டு பயன்படுகிறது [3][4].

இலித்தியம் அயனி மின்கலத்தில் பயன்படும் மின்பகுளியில் இலித்தியம் உப்புடன் சேர்க்கைப் பொருளாகவும் இதை பயன்படுத்துகிறார்கள்[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lithium Hexafluorogermanate Safety Data Sheet" (PDF). Lorad Chemical Corporation. பார்க்கப்பட்ட நாள் 2017-09-20.
  2. Tychinskaya, I.I., Opalovskii, A.A. & Nikolaev, N.S. Russ Chem Bull (1965) 14: 725. https://doi.org/10.1007/BF00846742
  3. L. S. Bolyasnikova, V. A. Demidenko, S. B. Eron'ko, O. P. Ovsyannikova, and S. B. Mikhrin, "Gd2O2S:Pr:Ce Optical Scintillation Ceramics and their Properties," J. Opt. Technol. 73, 138-142 (2006).
  4. "Lithium Hexafluorogermanate". Lorad Chemical Corporation. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
  5. CN application 103326066, "Lithium-ion battery electrolyte", published 2013-09-25, assigned to Suzhou Nuoxin Innovation Energy Co. Ltd.