அபி பட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபி பட்டகம் (Abbe prism) என்பது ஒளியியல் கருவியாகும். எனெசுட் அபி என்ற செர்மனி நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் உருவாக்கினார். மாறாத விலக்கத்தைக் கொண்ட நிறப்பிரிகைத் திறனையுடைய பட்டகமாகும். இது பெலின்-பூராகா பட்டகத்திற்கு இணையானது.

அமைப்பு[தொகு]

அபி பட்டகம்

இந்த பட்டகம் கண்ணாடியால் ஆனது, 30°–60°–90° என்ற முக்கோண பக்கங்களைக் கொண்டது. பயன்படுத்தும் போது AB என்ற பக்கம் வழியே, ஒளி உள்ளே நுழைகிறது. பின்னர் ஒளி விலகல் அடைந்து, முழு அக எதிரொளிப்பு அடைந்து BC என்ற பக்கத்தை அடைகிறது. பின்னர் ஒளி விலகல் அடைந்து AC என்ற பக்கம் வழியே வெளியே வருகிறது. ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளியலையின் விலகல் கோணம் 60° அடையுமாறு பட்டகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அலைகளும் அதிக கோணத்திற்கு விலகவடைகிறது. பட்டகத்திலுள்ள O என்ற புள்ளியிலிருந்து ஒளியலை 60° கோணத்திற்கு திருப்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • Hecht, Eugene (2001). Optics (4th ed.). Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-8566-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபி_பட்டகம்&oldid=2749468" இலிருந்து மீள்விக்கப்பட்டது