கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு புள்ளியில் இருந்து கிளம்பும் இரண்டு கதிர்கள் (Rays) உருவாக்கும் வடிவம் கோணம் (Angle)எனப்படுகிறது. வெட்டிக்கொள்ளும் இரண்டு கோடுகளின் சாய்வுகளின் வித்தியாசம் காண கோணம் உதவுகிறது. கோணங்களை அளக்கும் அலகுகளுள் பாகை ஒரு வகையாகும். இதன் குறியீடு °.

பொருளடக்கம்

கோண வகைகள் [தொகு]

செங்கோணம், குறுங்கோணம், மற்றும் விரிகோணம் ஆகியன சில கோணவகைகளாகும். 90 பாகை அளவுள்ள கோணம், செங்கோணம் எனக் குறிப்பிடப் படுகின்றது.

செங்கோணம் [தொகு]

இரு பக்கங்களுக்கு இடையேயான கோணம் 90 பாகை எனில் அது செங்கோணம் எனப்படும்.

குறுங்கோணம் [தொகு]

இரு பக்கங்களுக்கு இடையேயான கோணம் 90 பாகைக்கும் குறைவு எனில் அது குறுங்கோணம் ஆகும்.

விரிகோணம் [தொகு]

பக்கங்களுக்கு இடையேயான கோணம் 90 பாகைக்கும் அதிகமாக 180 பாகைக்கும் குறைவு எனில் அது விரிகோணம் ஆகும். x° = விரிகோணம் எனில்:

90° <x° < 180° ஆக அமையும்.

சுட்டிகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோணம்&oldid=1341316" இருந்து மீள்விக்கப்பட்டது