சென்னை பொது நூலக சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு பொது நூலகங்கள் சட்டம், என்பது முன்பு மதராசஸ் பொது நூலகம் சட்டம் என்று இருந்தது. தற்பொது தமிழ்நாடு பொது நூலகங்கள் சட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது இந்தியாவின் சென்னை மாநிலத்தில், 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் இதுபோன்று இயற்றப்பட்ட முதல் சட்டம் இதுவாகும். இந்த சட்டத்தின் கீழ், சென்னை கன்னிமாரா பொது நூலகம் "மாநில மத்திய நூலகம்" என்ற பெயரில் முதன்மை நூலகமாக மேம்ப்படுத்தபட்டது. பின்னர், 1951 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் ஒன்பது மாவட்ட நூலகங்கள் இதில் சேர்க்கப்பட்டன.[1] எஸ். ஆர். ரங்கநாதன் மற்றும் சென்னை நூலகம் சங்கத்தின் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. பிற மாநிலங்களில் தமிழ்நாடு பொது நூலக சட்டத்தினை மாதிரியாக கொன்டு பொது நூலகச் சட்டங்களை இயற்றின.

பின்னணி[தொகு]

வளர்ந்துவரும் சமுதாயத்திற்கு இலவச நூலக அமைப்புகள் அவசியமானவை, இவை தொழில்மயமாக்கல் மற்றும் எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்துவதும். மேலும் இந்த சட்டமானது "எந்த நாட்டிற்கும் இன்றியமையாத தேவையாக இருக்கிறது, ஏனெனில் நூலக கட்டமைப்பு, மேலாண்மை மற்றும் நூலக அமைப்புகளுக்கு தேவையான நிதியைப் பெற முறையான சட்டங்களை அமல்படுத்து வேண்டியுள்ளது என்றார் ஆர்.கே.பட்.[2]

இந்த கருத்தினை எஸ். ஆர் ரங்கநாதன் அங்கீகரித்தார். 1923 ஆம் ஆண்டு லண்டனில் நூலகருக்கான பயிற்சியைப் பெற்றார், அங்கு இருந்த நூலக சட்ட அமைப்பு முறைகளைக் கண்டு அவர் ஈர்க்கப்பட்டார். இந்தியாவுக்குத் திரும்பியவுடன், தனது சொந்த நாட்டில் இதே போன்ற சட்ட அமைப்பு வேண்டும் என்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால் இந்தியாவானது பிரித்தானிய அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் பல்வேறு சமஸ்தானங்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மாகாணங்களை உள்ளடக்கியதாக பல்வேறு வகையான அரசாங்கங்கள் இருந்ததால் இதில் சிக்கல் இருந்தது. இதை தொடர்ன்து எஸ். ஆர். ரங்கநாதன் தன் தீவிர ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகளின் முடிவாக, 1930 இல் முதன் முதலாக நடந்த அனைத்து இந்திய கல்வி மாநாட்டில் அவரது ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகளின் முடிவை அறிக்கையாக வழங்கினார். இந்த அறிக்கையில் மாதிரி நூலக சட்டத்தின் வடிவத்தைக் கொண்டிருந்தது.[3]


அப்பொது இருந்த பிரிடிஷ் இந்தியாவின் சில பகுதிகள், உதாரணமாக பரோடா போன்ற இடங்களில் 1945ஆம் ஆண்டிற்கு முன்பே பொது நூலக அமைப்புகளை நிறுவி இருந்தன,[4] என்றாலும் பின்னர் இதற்கு கோலாப்பூர் பொது நூலக நூலகம் சட்டம் என்று பெயரில் சட்டமானது. இது 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகங்கள் சட்டத்தினைத் தொடர்ந்து வந்தது. இந்த சட்டமானது சுதந்திர இந்தியக் குடியரசில் நிறைவேற்றப்பட்ட முதல் சட்டமாக மாறியது. கேரளம் மற்றும் அரியானா போன்ற பிற மாநிலப் பகுதிகளுக்கான சட்டங்களை, இந்த சட்டத்திலிருந்து மேம்படுத்தி செயல்படுத்தபட்டன.[3][5]

இச்சட்டத்திற்கு முன்னரே, சென்னை மாகாணத்தில் 1860 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட நூலகம் கன்னிமாரா பொது நூலகம் ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் பொது நூலகமாக மாறியது. திரும்பப் பெறக்கூடிய ஒரு சிறிய வைப்புத் தொகை செலுத்தி அதைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, ஆனால் அது அடிப்படையில் இலவசமாக இருந்தது. இது 1948 ஆம் ஆண்டில் மைய நூலகமாகவும் பின்னர், 1981 ஆம் ஆண்டில் ஒரு புத்த சேமிப்பு நூலகமாகவும் மாறியது.[6]

விதிகள்[தொகு]

மாநில பொது நூலகம் சட்டத்தின்படி, தமிழ்நாட்டு நூலகங்களானது மாநில கல்வியமைச்சரின் தலைமையில் செயல்படும் மாநில நூலகக் குழுவின் ஆளுமையின்கீழ் வருகின்றன. மாநில நூலக‍க் குழுவுக்கு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், மாநில நூலகக் குழுக்கள், பொது நூலகங்களின் இயக்குனரின் உதவியாளராக பணிபுரியும் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்தும் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக உள்ளது. பின் வரும் காலதில் தற்போதைய அறிவுறுத்தலின் படி பொது இயக்குனரால் இவை நிர்வகிக்கப்படுகின்றன.[7]

பொது நூலகதிற்கு தேவையான வருவாய் அனைத்தும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் நூலக வரியாக வசூலிக்கபடும் தொகையில் இருந்து பெறப்படுகிறது. அந்த வரிகளானது தங்கள் உள்ளுர் நூலக ஆணையங்களுக்கு தரப்படுகின்றன. உள்ளுர் நூலக அணையமஆனது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வரிவிதிப்பு விகிதம் சட்டத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்டு, மாநில அரசு அதை ஒப்புக் கொண்டால், அதிக வருவாய் விகிதத்தைக் கோரலாம். மாநில அரசு வரி மூலம் உருவாக்கப்பட்ட நிதி அனைத்து பொது நூலகத்திற்கும் பொருந்துமாறும், அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நூலகங்களுக்கும் பகிர்வது பற்றிய நிலைமைகளை உள்ளூர் நூலக ஆணையம் தீர்மானிக்கிறது.[7][8]

பொது நூலக சட்டத்தின் வாயிலாக உள்ளுர் நூலக ஆணையத்தின் மூலம் 50,000 க்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் அவசியமாக சொந்தமாக மைய நூலகம் இருக்க வேண்டும் மற்றும் கிளை நூலகங்கள் அமைக்கவும் மற்றும் அதன் கோரிக்கைகள் பரீசீலிப்பது, தேவைப்பட்டால், பிற வழிமுறைகள் மூலம் விரிவுபடுத்துதல், மேம்படுத்துவதற்கான விதிகள் வரையறுகபட்டுள்ளன. உள்ளுர் நூலக ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் நூலகங்களைத் தவிர, இந்த சட்டம் மற்ற நூலகங்களின் பதிவுக்காகான வழிமுறைகளை வழங்குகிறது. இது டிபிஎல்-இயகுநர், பொது நூலகம்- நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மாநில வளங்களில் இருந்து மானியங்களை வழங்குவதற்கு அதிகாரம் உள்ளவர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். சென்னை நகரம் தவிர, இந்த மானியங்கள் பிற இடங்களில் சேகரிக்கப்பட்ட செஸ் வரி விட குறைவாக இருக்கக்கூடாது.[7]

சட்டத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களால் கூடுதல் நிதி வளங்கள் பெறப்படுகின்றன. 1857 ஆம் ஆண்டின் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் பதிப்புரிமை குறித்த புதிய சட்டமானது நூலகங்களுக்கு சற்றே ஒத்ததாக இருக்கும் சூழ்நிலையில் திருத்தப்பட்டது. இந்த பதிப்புரிமை சட்டத்தின் படி ஒவ்வொரு புத்தக பதிப்பாளர் /அச்சகர் ஒவ்வொரும் புத்தகத்தின் ஐந்து பிரதிகளை மாநில அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். அவற்றில் நான்கு பிரதிகள் மாநில மத்திய நூலகத்துக்கு (கன்னிமரா நூலகம்), வழங்க வேண்டும்.[7][8] மேலும் பல்வேறு மாநிலங்களின் இச்சட்டத்தை மறுசீரமைப்பு செய்த‍தின்படி இப்போது ஆந்திரா மற்றும் கேரளாவின் மாநிலத்தில் நடைமுறை படுத்தபட்டு வருகின்றது.[9][10]

பரிணாமம்[தொகு]

சென்னை பொது நூலகங்களில் சட்ட ரீதியாக பலவிதமான சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஐதராபாத் சட்டம் என்று இருந்து, பின்னர் ஆந்திரா பொது நூலகங்கள் சட்டம் ஆன, ஆந்திர பொது நூலகங்கள் சட்டத்தின் படி நூலகங்களை நிர்வகிப்பதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு தனித் துறை இருக்க வேண்டும் என்று கூறுகிறது. மாநில நூலகக் குழுவின் தலைவர் (இந்த சட்டத்தில் மாநில நூலக கவுன்சில் என அழைக்கப்படும்) என்பவர் தற்போதைய கல்வி அமைச்சரின் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; மேலும் உள்ளூர் நிர்வாக பகுதிகள் தங்கள் சொந்த நூலக அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும், மேலும், வசூலிக்கப்பட்ட வரி அளவை மேற்பார்வை செய்தல், வரி வரம்பை விரிவாக்கி மேம்படுத்தும். மேலும் நூலக கவுன்சிலானது, நூலகர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது.[7] இச்சட்டத்தில் உள்ளடங்கிய ஒரு முக்கிய அம்சமாகுமாக இந்த சட்டதின் மூலமாக உள்ளூர் நூலகங்கள், மாவட்ட நூலகங்களுடன் இணைக்கப்பட்டு, அவை மாநில, மத்திய நூலகத்துடனும், மற்றும் தேசிய நூலகத்துடனும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. மேலும் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, மையப்படுத்தப்பட்ட புத்தக கொள்முதல் மற்றும் வளங்களைப் பகிர திட்டமிடுதல் போன்றவை இந்த திட்டதின் கீழ் பரிந்த்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது எந்தவிதத்திலும் செயல்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

இது வரையில் செயல் படுத்தபட்ட பொது நூலக சட்டங்களில், கர்நாடக மாநிலம் இயற்றிய பொது நூலகங்கள் சட்டமானது, இத்தகைய சட்டங்களின் பரிணாம வளர்ச்சியில் மிகச் சிறந்த மற்றும் சிறந்த செயல்பாடுகள் கொண்ட சட்டமாகும் என்று வல்லுனர் திரு.பட் அவர்கள் நம்பிக்கை தெரிவிதுள்ளார், மேலும் பின் வந்த காலங்களில் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்கள் யாவும் குறைபாடுகள் கொண்டதாக இருந்த‍தால் தோல்வி அடைவதாக குறிப்பிடுகிறார். கர்நாடக மாநில சட்ட நடை முறையில் மாநில நூலகங்கள் யாவும், கல்வி அமைச்சகம் மூலம், பொது நூலகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அலுவலகங்கள் ஆகியவைகள் அரசு பொது நூலக துறையின் தலைமையிலான அதிகாரத்தில் உள்ளது. மேலும் சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வரிகளிலும் நூலக வரி உள்ளது. மேலும் நகர்ப்புறமல்லாத பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் வரியில் மூன்று விழுக்காடு வருவாயை மாநில நூலக ஆணையத்தின் நிதி ஒதுக்கீடுக்கு தரப்பட வேண்டும்.

தேசிய அளவில் அண்மைய நிலை[தொகு]

2002 ஆம் ஆண்டு கணகின் படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 12 பொது நூலக சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனினும், ஹைதராபாத் மற்றும் கோலாப்பூர் - ஆகிய பகுதிகளின் நிர்வாக அமைப்புகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால்,[3] இந்த இரண்டு பகுதிகளிலும் இது அமல்படுத்தப்படவில்லை.[4] ஆனாலும் சில மாநிலங்களின் மோசமான நிதி, நிர்வாக அமைப்பு குறைபடுகள், அரசால்களின் "மந்தமான மற்றும் எதிர்மறையான அணுகுமுறை" ஆகியவற்றின் காரணமாக, இந்த சட்டங்கள் சரிவர செயல் படுத்த முடியவில்லை என்று நரசிம்ம ராஜு கருதுகிறார்.

தமிழ்நாட்டில் நூலகங்கள்[தொகு]

தமிழ்நாட்டில் ஒரு மாநில மத்திய நூலகம், 29 மாவட்ட மைய நூலகங்கள், 1548 கிளை நூலகங்கள், 506 கிராம நூலகங்கள், 649 பகுதி நேர நூலகங்கள், எட்டு நடமாடும் நூலகங்கள் போன்றவை இயங்கிவருகின்றன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Panda, B. D. (1993). Handbook of Public Library System. Anmol Publications. பக். 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170417736. இணையக் கணினி நூலக மையம்:36878321. https://books.google.com/books?id=pPb9vQFKgI4C&lpg=PA9&dq=madras%20public%20library%20act&pg=PA115#v=snippet&q=madras%20public%20library%20act%201948&f=false. 
  2. Bhatt, Ramesh Kumar (1995). History and Development of Libraries in India. New Delhi: Mittal Publications. பக். 114–116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-582-1. இணையக் கணினி நூலக மையம்:33162755. https://books.google.com/books?id=Jbmdowzuv0QC. 
  3. 3.0 3.1 3.2 Raju, Narasimha (2002). "Library Legislation in India: an Introspection". in Sardana, J. L.. Libraries and information studies in retrospect and prospect: essays in honour of Prof. D. R. Kalia. 2. New Delhi: Concept Publishing Company. பக். 383–387. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-930-8. https://books.google.com/books?id=6qrw-Y41OXAC. பார்த்த நாள்: 2011-08-11. 
  4. 4.0 4.1 Malleshappa, T. (2002). "Impact of Library Legislation on Public Library Services". in Sardana, J. L.. Libraries and information studies in retrospect and prospect: essays in honour of Prof. D. R. Kalia. 2. New Delhi: Concept Publishing Company. பக். 389–390. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-930-8. https://books.google.com/books?id=6qrw-Y41OXAC. பார்த்த நாள்: 2011-08-11. 
  5. Bhatt, Ramesh Kumar (1995). History and Development of Libraries in India. New Delhi: Mittal Publications. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-582-1. இணையக் கணினி நூலக மையம்:33162755. https://books.google.com/books?id=Jbmdowzuv0QC. 
  6. Patel, Jashu; Kumar, Krishan (2001). Libraries and Librarianship in India. Westport, Connecticut: Greenwood Press. பக். 80, 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-29423-5. https://books.google.com/books?id=KXVrsPSzeNAC. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Bhatt, Ramesh Kumar (1995). History and Development of Libraries in India. New Delhi: Mittal Publications. பக். 118–120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-582-1. இணையக் கணினி நூலக மையம்:33162755. https://books.google.com/books?id=Jbmdowzuv0QC. 
  8. 8.0 8.1 Taher, Mohamed (1994). Librarianship and library science in India: an outline of historical perspectives. Concepts in communication informatics & librarianship. 60. New Delhi: Concept Publishing Company. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-524-9. https://books.google.com/books?id=qRLXDBX5KzkC. 
  9. Taher, Mohamed (2001). Libraries in India's national developmental perspective: a saga of fifty years since independence. New Delhi: Concept Publishing Company. பக். 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-842-4. https://books.google.com/books?id=rQk5iINMD2IC. 
  10. Taher, Mohamed (1994). Librarianship and library science in India: an outline of historical perspectives. Concepts in communication informatics & librarianship. 60. New Delhi: Concept Publishing Company. பக். 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-524-9. https://books.google.com/books?id=qRLXDBX5KzkC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_பொது_நூலக_சட்டம்&oldid=2754587" இலிருந்து மீள்விக்கப்பட்டது