வைட்டுத் தீவு
வைட்டுத் தீவு Isle of Wight | |
---|---|
வைட்டுத் தீவின் கொடி வைட்டுத் தீவின் கௌன்சில் கொடி | |
Motto of County Council: இவ்வழகனைத்தும் கடவுளால் | |
புவியியல் | |
நிலை | பெருநகரமல்லா, ஒற்றை நிர்வாகமுள்ள கௌன்டி |
பிரதேசம் | தென்கிழக்கு இங்கிலாந்து |
பரப்பளவு - மொத்தம் - Admin. area |
பரப்பளவுப்படியான தரவரிசை 384 km2 (148 sq mi) 384 km2 (148 sq mi) |
நிர்வாக தலைமையகம் | நியூபோர்ட் |
ISO 3166-2 | GB-IOW |
ONS code | 00MW |
NUTS 3 | UKJ34 |
Demography | |
மக்கட்தொகை - மொத்தம் () - அடர்த்தி |
369/km2 (960/sq mi) |
Ethnicity | |
அரசியல் | |
வைட்டுத் தீவு மன்றம் www.iwight.com | |
Executive | வார்ப்புரு:English county control |
நாடாளுமன்ற உறுப்பினர் |
|
மாவட்டங்கள் | |
வைட்டுத் தீவு (Isle of Wight) இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு கௌன்டியும், ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள மிகப்பெரும் தீவும் ஆகும். பிரித்தானியா தீவிலிருந்து சோலென்ட் என்ற நீரிணையால் பிரிந்து ஆம்சையர் கடற்கரையிலிருந்து 3–5 மைல்கள்(5-7 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. கடல்மட்டம் உயர்ந்தநிலையில் இருக்கும்போது இது இங்கிலாந்தின் மிகச்சிறிய கௌன்டியாக உள்ளது; கடல் மட்டம் தாழும் நேரங்களில் ரட்லாந்து கௌன்டி இதைவிடச் சிறியதாக உள்ளது. 25 மைல்கள் (40 கிமீ) நீளமும் 13 மைல்கள் (20 கிமீ) அகலமும் கொண்டதாக உள்ளது. ஒரு இலட்சத்து இருபதாயிரம் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
இங்கு பல விடுமுறை மகிழ்விடுதிகள் அமைந்துள்ளன. விக்டோரியா காலத்திலிருந்தே இது விடுமுறை சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.விக்டோரியா அரசியாரின் வேனில் அரண்மனையும் இறுதி இல்லமும் இங்குள்ளன. கவிஞர்கள் சுவின்பர்ன், டென்னிசன் ஆகியோரின் பிறப்பிடமும் இதுவே.
இங்கு படகு கட்டுதல், பாய்மரம் பின்னுதல்,பறக்கும் படகுகளைத் தயாரித்தல் ஆகியன முதன்மைத் தொழில்களாக உள்ளன. உலகின் முதல் ஹோவர்கிராஃப்ட்டும் பிரித்தானியாவின் விண்வெளி உந்துப்பொறிகளும் இங்குதான் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. வைட்டுத் தீவு ஜாசு இசைவிழா போன்ற இசைவிழாக்கள் இங்கு நடக்கின்றன.[2] நன்கு பராமரிக்கப்படும் வனவிலங்கு உய்வகம் இங்குள்ளது. இங்குள்ள உயரிய சிகரங்களிலும் முகடுகளிலும் தொன்மா தொல்லுயிர் எச்சங்கள் காணப்படுகின்றன.
டைனோசரின் எச்சங்கள்
[தொகு]12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும், நிலத்தில் வேட்டையாடும் மிகப்பெரிய டைனோசரின் (32 அடி (10 மீட்டர்) எச்சங்கள் வைட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Neighbourhood Statistics. "Resident Population Estimates by Ethnic Group (Percentages)". Neighbourhood.statistics.gov.uk. Archived from the original on 24 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 25 September 2010.
- ↑ "Isle of Wight Festival history". Redfunnel.co.uk. Archived from the original on 28 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 September 2010.
- ↑ 12.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பாவின் 'மிகப்பெரிய' டைனோசர் எச்சங்கள்
வெளி இணைப்புகள்
[தொகு]- வைட்டுத் தீவு திறந்த ஆவணத் திட்டத்தில்
- Isle of Wight Trains
- Isle of Wight Festival
- Landslides on the Isle of Wight பரணிடப்பட்டது 2013-04-20 at the வந்தவழி இயந்திரம் British Geological Survey
ஊடகம்
[தொகு]- The Isle of Wight County Press
- Isle of Wight Chronicle
- Isle of Wight Radio
- VentnorBlog
- Isle of Wight Tourism
- Wifi Hotspots (Some free)
ஒளிப்படங்கள்
[தொகு]- Isle of Wight Pictures பரணிடப்பட்டது 2011-08-07 at the வந்தவழி இயந்திரம்
- Isle of Wight Historic Postcards
- Isle of Wight Photos
- Old pictures of Newport
- Photos from Isle of Wight Photographers
- Images of the Isle of Wight at the National Monuments Record, English Heritage